வங்கி மற்றும் கடன் :: வங்கி -  ஒரு கண்ணோட்டம்
பகுதி - 3

இந்தப் பகுதியில் நிறைய பொருள்கள் மற்றும் வசதிகளை வங்கித் துறையில் சீரமைப்புக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1991 ஆம் ஆண்டு நரசிம்மன் குழு மூலம் வங்கி முறைகளில் தாராளமயமாக்கல் திட்டத்தைக் கையாள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொலைபேசி வங்கி மற்றும் இணையதள வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த முறை மிகவும் வசதியாக இருந்தது. பணத்தை விட காலம் மிகவும் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்பு, வேளாண்மை பாரம்பரிய வழியில் மேற்கொள்ளப்பட்டது. அது மானியம் மூலமும் மற்றும் சுயதேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் இருந்தது. விவசாயிகளுக்கு கடன் தேவைகள் மிகவும் குறைவாகவும் மற்றும் உறவினர்கள், உள்ளூரில் கடன் கொடுப்பவர்கள் நண்பர்கள் மூலமும் அரசிடம் தக்காவிக் கடன் மூலமும் பெற்றுக் கொள்வர். கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டி மற்றும் பொய்யான ஆவணங்கள் மூலம் விவசாயிகளை உறிஞ்சிக் கொண்டிருந்தனர்.

இந்திய விடுதலைக்குப் பின், குறிப்பாக பசுமை புரட்சிக்குப் பின், வேளாண்மை நவீனமயமாக்குதல் மூலம் விவசாயிகளுக்கு கடன் தேவைகள் அதிகமாகத் தேவைப்பட்டது. இக்காலக்கட்டத்தில் சந்தைச் சார்ந்த பண்ணையம் என்பதால்இ கடன் என்பது ஒரு முக்கிய இடுபொருளாகக் கருதப்படுகிறது.

மாறுபடுகின்ற சூழ்நிலைக்கு ஏற்பவும் மற்றும் அரசுக் கொள்கைகளினாலும், வங்கிகள் விவசாயத்திற்கு நிறையக் கடன்கள் கொடுக்க வேண்டி நிர்பந்திக்கப்படுகின்றனர். தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் இரண்டும் தங்களை நிறைய வேளாண் சார்ந்த  தொழில்களுக்கு கடன் வழங்க ஈடுபடுத்திக் கொள்கின்றனர். மேலும், வங்கிகள் விவசாய ஆலோசனை மையங்கள், விவசாய மருந்தகம், ஏற்றுமதி மற்றும் விவசாய பொருள்களை சந்தைப்படுத்துதல் போன்றவற்றிற்கு பயிற்சியும் நிதியுதவியும் அளிக்கின்றது.

தோட்டக்கலை, மீன் வளர்ப்பு, கால்நடை, மலரியல், பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் போன்ற குறிப்பிட்ட விவசாயத் தேவைகளுக்கு கடன்கள், விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்குகின்றது. விவசாயிகள் இந்தக் கடன்களை சரியான நேரம்,  முறையான அணுகுமுறை மற்றும் திருப்பிச் செலுத்துதல் மூலம் பயன்பெறலாம்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016