வங்கி மற்றும் கடன் :: தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்
தமிழ்நாட்டில் நிதி பெறும் பெரிய செயல்கள்
என்சிடிசி தமிழ்நாட்டில் உள்ளக் கூட்டுறவுகள் மேம்பாட்டிற்கு அனைத்து திட்டங்கள் / துறைகளுக்கும் நிதி உதவிகளை வழங்குகிறது. கீழ்க்கண்டவை மாநிலத்தில் பெரிய செயல்களுக்கு நிதி பெறுபவை.

விற்பனை மற்றும் இடுபொருட்கள்
என்சிடிசி இதுவரை ரூ. 36.297 கோடிகளை தமிழ்நாடு அரசிற்கு விற்பனைக் கூட்டுறவுகள், கூட்டமைப்பு மற்றும் விவசாய நுகர்வு வாடகை நிலையங்கள் / விதைப் பெருக்கம் / உரங்கள் குருணைகள்  செய்யும் திட்டம்

நுகர்வோர்
என்சிடிசி 202 கிராமப்புற நுகர்வோர் திட்டங்களை 4526 கிராம சங்கங்களின் ரூ. 17.81 கோடி நிதி உதவி செய்துள்ளது.

சர்க்கரை
5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நவீனமயமாக்கி விரிவடையச் செய்வதற்கு கள்ளக்குறிச்சி, மதுராந்தகம், என்பிகேஆர்ஆர், திருத்தணி, சேலம் ஆகியவற்றிற்கு  ரூ. 63.49 கோடி ரூபாய் என்சிடிசி வழங்கியுள்ளது. எஸ்டிஎப் உதவி மூலம் ரூ. 30.78 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. சேலம் மற்றும் அமராவதி ஆகிய இரண்டு வடிகட்டும் களனிற்கு என்சிடிசி 8.82 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. என்சிடிசி பங்கு முதலீட்டுத் தேவைகள் / மறுசீரமைப்பு / முதலீட்டுப் பணித் தேவைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்துள்ளது. சர்க்கரைத் துறையின் கீழ் மொத்தமாக ரூ. 318.34 கோடி ரூபாய் உதவி செய்யப்பட்டுள்ளது.

நூற்பாலைகள்
என்சிடிசி 14 கூட்டுறவு நூற்பாலைகளுக்கு முதலீடு மற்றும் நவீனமயமாக்கல் / விரிவாக்கம் ஆகியவற்றிற்கு ரூ. 8.22 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர என்சிடிசி அதிகபட்ச அளவுத் தொகையை நூற்பாலைகள் மற்றும் காற்று சக்திக் களன் தேவைக்கு வழங்கியுள்ளது. இத்துறையின் கீழ் மொத்த உதவி 13.134 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கைத்தறி
பதப்படுத்துதல், நவீனமயமாக்கல் / நேரடி விற்பனை நிலையம் (315) மற்றும் பங்கு முதலீடு (104) ஆகியவற்றிற்கு ரூ. 17.55 கோடிகள் ரூபாய் உதவி அளிக்கப்பட்டுள்ளது.

மீன் வளர்ப்பு
ஒருங்கிணைந்த கடல் மீன் மேம்பாட்டுத் திட்டம் பகுதி 1ன் கீழ் 44 மீன் பிடிக்கும் கிராமங்கள், 4234 பயனாளர்கள் இதன் கீழ் வருகின்றனர். 14.50 கோடி ரூபாய் கடன் உதவி மற்றும் 0.31 கோடி ரூபாய் மானியங்கள் ஒன்றிய அளவில் 16.99 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஐஸ் பெட்டிகள் வாங்குவதற்கு 50 மீன் பிடிக்கும் மகளிர் கூட்டுறவுகளுக்கு மேல் ரூ. 53.73 லட்சம் (இதில் MFP / 44.78 லட்ச ரூபாய் உதவியும் அடங்கும்) ரூபாய் வழங்கப்பட்டுள்ளது இதில் அனைத்தும் சேர்த்து மீன் வளர்ப்புத் துறைக்கு இது வரை 34.39 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பால் பண்ணை
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் சங்கம் ஆகியவற்றிற்கு தலா ரூ. 493.50 லட்சம் மற்றும் ரூ. 325.85 லட்சம் ரூபாய் ஒருங்கிணைந்த பால் பண்ணை மற்றும் 0.5 லட்சம் லிட்டர் பால் ஒன்றுக்கு பால் பதப்படுத்தும் களன் அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 74.90 லட்சம் ரூபாய் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திற்கு 74.90 லட்சம் ரூபாய் குளிர்பதன முறையை அமோரியா முறையில் மாற்றுவதற்கு உதவுகிறது.

தேயிலை கூட்டுறவுகள்
என்சிடிசி INCOSERVEவிற்கு 147.130 லட்சம் ரூபாய் உதவியை அளவுத் தொகை I சேமிப்புக் கிடங்கு மற்றும் தேயிலை சோதனைக் களன், தேயிலை அறைத்தல்  மற்றும் சேமிப்புக் கோடோன் கொச்சின், வேலை செய்யும் இடம், கோடோன் மற்றும் குன்னூர் சேமிப்புக் கோடோன் என்சிடிசி 6 தேயிலை தொழிற்சாலைகளுக்கு முதலீட்டுத் தொகையாக 6.44 கோடி ரூபாய் உதவி வழங்கியுள்ளது. 13 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு நவீனமயமாக்கல் / விரிவாக்கம் ஆகியவற்றிற்கு 3.74 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 11 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு ரூ. 17.655 லட்சம் கோடோன்  வசதிகள் ஏற்படுத்த வழங்கியுள்ளது. மொத்த உதவித் தொகை இத்துறைக்கு ரூ. 11.22 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு |தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016