வங்கி மற்றும் கடன் :: தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் நிதி பெறும் வசதிகள்

1. சந்தைபடுத்துதல்

விற்பனைக் கூட்டமைப்புகளுக்கு நிதி அளவு உதவிகள் வழங்கப்படுகிறது, தொடக்க / மாவட்ட விற்பனைச் சங்கங்களின் அடிப்படை பங்கு முதலீடுகளை வலுப்படுத்துதல், விற்பனை (பழம் மற்றும் காய்கறி), முதலீட்டுப் பண நிதி

2. பதப்படுத்துதல்

  • புதிய சர்க்கரை ஆலைகளை அமைத்தல் (முதலீட்டுக் கடன்) நவீனமயமாக்கல் மற்றும் விரிவுபடுத்துதல் / இருக்கின்ற சர்க்கரை ஆலைகளை வேறு வகையில் ஈடுபடுத்துதல் (முதலீட்டுக் கடன் + தவணை கடன்)
  • பண அளவு உதவிகள் கூட்டுறவு நூற்பாலைகள் / மாநில கூட்டுறவு பருத்தி கூட்டமைப்பு / புதிய நூற்பாலைகளில் பங்கு முதலீடுகளில் பங்கு பெறுதல் / நவீனமயமாக்கல் / நூற்பாலைகளை விரிவுப்படுத்துதல் / இருக்கின்ற ஜின்னிங் மற்றும் பிரசிங் செயலகங்களை நவீனமயமாக்கல் மற்றும் புதியதாக ஏற்படுத்துதல் / நொடிந்த நூற்பாலைகளை புறணமைத்தல் / பருத்தி மேம்பாட்டுத் திட்டங்கள்.
  • இதர பதப்படுத்தும் செயலகங்கள் உணவுத் தானியங்கள் / எண்ணெய் விதைகள் / மலைப் பயிர்கள் / பருத்தி ஜின்னிங் மற்றும் பிரசிங் / பழம் மற்றும் காய்கறி/ மக்காச் சோள ஸ்டார்ச் / துகள் அமைப்பு ஆகியவை, மின் விசைத்தறி கூட்டுறவுகள் இதில் முன் மற்றும் பின் விசைத்தறி வசதிகளும் அடங்கும்.
3.  கூட்டுறவு சேமிப்பு
  • கோடோன்கள் கட்டமைப்பு (சாதாரணமாக), இருக்கின்ற கோடோன்களை தரம் உயர்த்துதல் / மறுசீரமைப்பு செய்தல், குளிப்பதன சேமிப்புகள் கட்டமைப்பு / தரம் உயர்த்துதல் / குளிர்பதன சேமிப்புகளை மறுசீரமைப்பு செய்தல்.
4.  கூட்டுறவுகளின் மூலம் தேவையான பொருட்களை வழங்குதல்
  • நுகர்வோர் பொருட்களை கிராமப்புறம் / நகர்ப்புறம் / சிறுநகர்புற பகுதிகளில் வழங்குதல்.

5. தொழில் கூட்டுறவுகள்

  • அனைத்து வகையான தொழிற்சாலை கூட்டுறவுகள், குடிசை மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள், கைவினைப் பொருட்கள் / கிராமப்புற பொருட்கள் ஆகியவை.

6.  சேவை கூட்டுறவுகள்

  • விவசாய கடன், விவசாய காப்பீடு, தொழிலாளர் கூட்டுறவுகள், நீர்ப்பாதுகாப்பு வேலைகள் / சேவைகள், கிராமப்புற பகுதிகளில் பாசனம், நுண்ணீர்ப் பாசனம், கால்நடை பாதுகாப்பு / உடல்நல நோய் தடுப்பு,கூட்டுறவுகள் மூலம் கிராமப்புற சுகாதாரம் / வடிகால் / சாக்கடை முறைகள்
7. விவசாய சேவைகள்
  • விவசாய கூட்டுறவு சேவை நிலையங்கள், வாடகைக்கு எடுப்பதற்கு விவசாய சேவை நிலையங்கள், விவசாய இடுபொருள் தயாரிப்பு மற்றும் அதன் செயலகங்கள் அமைத்தல், பாசனம் / நீர் அறுவடைத் திட்டங்கள்
8. மாவட்ட திட்டங்கள்: குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கூட்டுறவு மேம்பாட்டுத் திட்டங்கள் (ஐ.சி.டி.பி)

9. நலிவடைந்த  பகுதியினருக்கு கூட்டுறவுகள்
  • மீன் வளர்ப்பு,பால் பண்ணை, கோழிப் பண்ணை, மலை வாழ் மக்கள், கைத்தறி, தென்னை நார் மற்றும் பட்டுப்புழு
10. கணினிமயமாக்கலுக்கு உதவி
11.ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள்
  • தொழில்நுட்பம் மற்றும் ஊக்குவிப்புத் துறைகள், படிப்பு / திட்ட அறிக்கைகளுக்கு ஆலோசனை நிர்வாக படிப்புகள், சந்தை ஆய்வு மற்றும் திட்டங்களை மதிப்பிடுதல், பயிற்சி மற்றும் கல்வி
12. ஆலோசனை சேவைகள்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016