வங்கி மற்றும் கடன் :: தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்
செயற்கூறுகள்
வேளாண் பொருட்கள் உற்பத்தி, பதப்படுத்துதல், விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, உணவுப் பொருள் இதர குறிப்பிட்ட பொருட்கள் ஆகியவற்றிற்கு திட்டமிடல், ஊக்குவிப்பு மற்றும் நிதியளித்தல். எ.கா உரங்கள், பூச்சிக்கொல்லி, வேளாண் இயந்திரங்கள், மெழுகு, சோப்பு, மண்ணெண்ணெய், ஜவுளி, ரப்பர், நுகர்வோர் பொருட்கள் அனுப்புதல் மற்றும் சேகரிப்பு, பதப்படுத்துதல், விற்பனை, சேமிப்பு மற்றும் கூட்டுறவுகள் மூலம் வனங்களின் சிறு பொருட்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் இதர வருவாய் ஈட்டும் செயல்களான கோழிப் பண்ணை, பால் பண்ணை, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு, கைத்தறி ஆகியவை.

என்.சி.டி.சி விதி மேலும் சீரமைப்பு செய்து, அதன் கழகம் இயங்கும் பகுதிகளில் விரிவுப்படுத்தி, பல வகையான கூட்டுறவுகளுக்கு உதவி செய்தும், அதன் நிதி ஆதாரத்தை விரிவுபடுத்துதல், என்.சி.டி.சி தற்போது கிராமத் தொழில் கூட்டுறவு துறைகளில் திட்டங்களுக்கு நிதி செய்ய தகுதி பெற்றுள்ளது. கிராமப் பகுதிகளில் குறிப்பிட்ட சேவைகளான நீர் பாதுகாப்பு, பாசனம், நுண்ணீர் பாசனம், விவசாயக் காப்பீடு, விவசாயக் கடன், கிராமப்புற சுகாதாரம், கால்நடை உடல்நலம். கடன்கள் மற்றும் வெளியீடுகளை மாநில அரசுகளுக்கு முன்பணமாக தொடக்க மற்றும் இரண்டாம் அளவில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி வழங்கவும் மற்றும் தேசிய அளவிலும் இதர கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி வழங்கவும் மற்றும் தேசிய அளவிலும், இதர கூட்டுறவுகள் பெற்றிருக்கும் பொருட்கள் ஒரு மாநிலத்திற்கு மேல் செல்லவும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கழகம் தேவையான விதிக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்தால், அதன் பல்வேறு திட்டங்களின் உதவியை நேரடியாக நிதி வழங்கவும் உரிமையுள்ளது.

அமைப்பு மற்றும் நிர்வாகம்
நிர்வாகம் 51 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழுவில் முன்னிறுத்தி அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு உருவம் கொடுத்து, அதன் நிர்வாக அமைப்பு கொண்ட 12 உறுப்பினர்களுடன் தினசரி செயல்களைச் செய்து வருகிறது. அதன் தலைமை அலுவலகம் தவிர என்.சி.டி.சி 18 மண்டல / மாநில இயக்கங்களுடன் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர் இதன் முதன்மை அதிகாரி. பல்வேறு செயற்கூறு பிரிவுகள் திட்டங்களை பார்த்துக் கொள்கிறது. அலுவலகம் திட்டத்தை தேர்வு செய்தல் / உருவாக்குதல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றது மற்றும் இது திட்டம் நடைமுறைப் படுத்துவதையும் மேற்பார்வை செய்து கொள்கிறது.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்திற்குள் என்.சி.டி.சி தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக ஆற்றல்கள் ஒற்றுமை, அமைப்பு மற்றும் அதன் நிதி மேலாண்மை, விலை, பொருளாதார ஆய்வு, திட்டம், நிர்வாக தகவல் முறை / கட்டுபடியாகும் படிப்புகள், சர்க்கரை, எண்ணெய் விதைகள், ஜவுளித் துறை, உணவு, பழம் மற்றும் காய்கறிகள், பால் பண்ணை, கோழிப் பண்ணை, கால்நடை, மீன்வளர்ப்பு, கைத்தறித் தொழில்நுட்பங்கள், கட்டுமானப் பொறியியல், குளிர்விப்பான் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை தேர்வு செய்து / திட்டத்தை உருவாக்கி கூட்டுறவுகளுக்கு உதவி செய்தல் மற்றும் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் உதவி செய்தல்.

நிதி மற்றும் நிதியகம்
நிதியின் ஆதாரம்
உள்ளே தானாகவே உயருதல், சந்தை கடன் பெறுதல் மற்றும் இந்திய அரசிடம் இருந்து ஒதுக்கீடுகள் சர்வதேச உதவியுடன் பெறுதல்.

  • முதலீட்டுப் பணம் தேவையை ஏற்பாடு செய்ய அடிப்படை அளவு தொகையை நிர்ணயித்தல் (100 சதவிகிதம் கடன்)
  • கூட்டுறவுகளின் 100 சதவிகித கடன் பங்கு முதலீட்டு அடிப்படையை வலுப்படுத்துதல்.
  • உள்கட்டமைப்பு வசதிகளான கோடோன், குளிர்ப்பதன சேமிப்புகள், உபகரண நிதி, போக்குவரத்து வாகனங்கள் வாங்குதல், படகுகள், இதர சொத்துக்கள் ஆகியவை உருவாக்குவதற்கு தவணைக் கடன்.
  • கடன் உதவி 60 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம் வரை
  • வேளாண் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை புதிதாக அமைத்தல், நவீனமயமாக்குதல் / விரிவுபடுத்துதல் / மறுசீரமைப்பு / வேறுவகையில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றிற்குத் தவணை மற்றும் முதலீட்டுக் கடன்.
  • திட்ட அறிக்கை / செயலாக்க ஆய்வுகள் ஆகியவற்றை தயாரிப்பதற்கு 100 சதிவிகிதம் மானியம்
அனுமதி வழங்க வழிமுறை / உதவிகளை வெளியிடுதல்
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் உதவி தனிப்பட்ட நபருக்கு உதவி கிடைப்பவை அல்ல. இது கூட்டுறவுகளின் நிறுவன வளர்ச்சிக்கும் மற்றும் மாநில அரசின் முயற்சிகளுக்கும் உதவுபவை. மாநில அரசு தனிப்பட்ட சங்கத்தின் திட்டம் அல்லது வரைவுகளை குறிப்பிட்ட திட்ட வரைவுகளின் படி தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்திற்குப் பரிந்துரை செய்யும். சங்கம் திட்டத்திற்கு நேரடி நிதியைப்  பல்வேறு திட்டங்களின் உதவிகள் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பொழுது பெறலாம். திட்ட வரைவுகளை அந்த குறிப்பிட்ட செயற்கூறு உள்ள துறையில் பார்த்து, தேவைப்பட்டால் நேரடியாக களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும். பின் முறையாக நிதிகள் அனைத்தும் மாநில அரசு / சங்கத்திற்கு வழங்கப்படும். நிதி வெளியீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அளவைப் பொருத்தும் மற்றும் பணத்தை செலவழித்து திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் இருக்கும். கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 8 வருடங்கள் வரை வேறுபடும். இதன் வட்டி விகிதமும் நேரத்திற்குத் தகுந்தது போல் வேறுபடும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு |தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016