வங்கி மற்றும் கடன் :: தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி)

அத்தியாயம்

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி) பாராளுமன்ற விதியின் கீழ், 1963 ஆம் ஆண்டு தனிப்பட்ட கழகமாக வேளாண் அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டது.

செயற்கூறுகள்

 • அமைப்பு மற்றும் நிர்வாகம்
 • நிதி மற்றும் நிதியகம்
 • என்.சி.டி.சி மூலம் நிதி வசதி பெறும் செயல்கள்
 • உதவி பெறும் சில வெற்றிக் கூட்டுறவுகள்
 • தமிழ்நாட்டில் நிதி பெறும் பெரிய செயல்கள்
 • முகவரி

செயற்கூறுகள்
வேளாண் பொருட்கள் உற்பத்தி, பதப்படுத்துதல், விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, உணவுப் பொருள் இதர குறிப்பிட்ட பொருட்கள் ஆகியவற்றிற்கு திட்டமிடல், ஊக்குவிப்பு மற்றும் நிதியளித்தல். எ.கா உரங்கள், பூச்சிக்கொல்லி, வேளாண் இயந்திரங்கள், மெழுகு, சோப்பு, மண்ணெண்ணெய், ஜவுளி, ரப்பர், நுகர்வோர் பொருட்கள் அனுப்புதல் மற்றும் சேகரிப்பு, பதப்படுத்துதல், விற்பனை, சேமிப்பு மற்றும் கூட்டுறவுகள் மூலம் வனங்களின் சிறு பொருட்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் இதர வருவாய் ஈட்டும் செயல்களான கோழிப் பண்ணை, பால் பண்ணை, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு, கைத்தறி ஆகியவை.

என்.சி.டி.சி விதி மேலும் சீரமைப்பு செய்து, அதன் கழகம் இயங்கும் பகுதிகளில் விரிவுப்படுத்தி, பல வகையான கூட்டுறவுகளுக்கு உதவி செய்தும், அதன் நிதி ஆதாரத்தை விரிவுபடுத்துதல், என்.சி.டி.சி தற்போது கிராமத் தொழில் கூட்டுறவு துறைகளில் திட்டங்களுக்கு நிதி செய்ய தகுதி பெற்றுள்ளது. கிராமப் பகுதிகளில் குறிப்பிட்ட சேவைகளான நீர் பாதுகாப்பு, பாசனம், நுண்ணீர் பாசனம், விவசாயக் காப்பீடு, விவசாயக் கடன், கிராமப்புற சுகாதாரம், கால்நடை உடல்நலம்.

கடன்கள் மற்றும் வெளியீடுகளை மாநில அரசுகளுக்கு முன்பணமாக தொடக்க மற்றும் இரண்டாம் அளவில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி வழங்கவும் மற்றும் தேசிய அளவிலும் இதர கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி வழங்கவும் மற்றும் தேசிய அளவிலும், இதர கூட்டுறவுகள் பெற்றிருக்கும் பொருட்கள் ஒரு மாநிலத்திற்கு மேல் செல்லவும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கழகம் தேவையான விதிக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்தால், அதன் பல்வேறு திட்டங்களின் உதவியை நேரடியாக நிதி வழங்கவும் உரிமையுள்ளது.

அமைப்பு மற்றும் நிர்வாகம்
நிர்வாகம் 51 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழுவில் முன்னிறுத்தி அதன் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு உருவம் கொடுத்து, அதன் நிர்வாக அமைப்பு கொண்ட 12 உறுப்பினர்களுடன் தினசரி செயல்களைச் செய்து வருகிறது. அதன் தலைமை அலுவலகம் தவிர என்.சி.டி.சி 18 மண்டல / மாநில இயக்கங்களுடன் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர் இதன் முதன்மை அதிகாரி. பல்வேறு செயற்கூறு பிரிவுகள் திட்டங்களை பார்த்துக் கொள்கிறது. அலுவலகம் திட்டத்தை தேர்வு செய்தல் / உருவாக்குதல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றது மற்றும் இது திட்டம் நடைமுறைப் படுத்துவதையும் மேற்பார்வை செய்து கொள்கிறது.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்திற்குள் என்.சி.டி.சி தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக ஆற்றல்கள் ஒற்றுமை, அமைப்பு மற்றும் அதன் நிதி மேலாண்மை, விலை, பொருளாதார ஆய்வு, திட்டம், நிர்வாக தகவல் முறை / கட்டுபடியாகும் படிப்புகள், சர்க்கரை, எண்ணெய் விதைகள், ஜவுளித் துறை, உணவு, பழம் மற்றும் காய்கறிகள், பால் பண்ணை, கோழிப் பண்ணை, கால்நடை, மீன்வளர்ப்பு, கைத்தறித் தொழில்நுட்பங்கள், கட்டுமானப் பொறியியல், குளிர்விப்பான் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை தேர்வு செய்து / திட்டத்தை உருவாக்கி கூட்டுறவுகளுக்கு உதவி செய்தல் மற்றும் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் உதவி செய்தல்.

நிதி மற்றும் நிதியகம்
நிதியின் ஆதாரம்
உள்ளே தானாகவே உயருதல், சந்தை கடன் பெறுதல் மற்றும் இந்திய அரசிடம் இருந்து ஒதுக்கீடுகள் சர்வதேச உதவியுடன் பெறுதல்.

 • முதலீட்டுப் பணம் தேவையை ஏற்பாடு செய்ய அடிப்படை அளவு தொகையை நிர்ணயித்தல் (100 சதவிகிதம் கடன்)
 • கூட்டுறவுகளின் 100 சதவிகித கடன் பங்கு முதலீட்டு அடிப்படையை வலுப்படுத்துதல்.
 • உள்கட்டமைப்பு வசதிகளான கோடோன், குளிர்ப்பதன சேமிப்புகள், உபகரண நிதி, போக்குவரத்து வாகனங்கள் வாங்குதல், படகுகள், இதர சொத்துக்கள் ஆகியவை உருவாக்குவதற்கு தவணைக் கடன்.
 • கடன் உதவி 60 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம் வரை
 • வேளாண் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை புதிதாக அமைத்தல், நவீனமயமாக்குதல் / விரிவுபடுத்துதல் / மறுசீரமைப்பு / வேறுவகையில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றிற்குத் தவணை மற்றும் முதலீட்டுக் கடன்.
 • திட்ட அறிக்கை / செயலாக்க ஆய்வுகள் ஆகியவற்றை தயாரிப்பதற்கு 100 சதிவிகிதம் மானியம்

அனுமதி வழங்க வழிமுறை / உதவிகளை வெளியிடுதல்
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் உதவி தனிப்பட்ட நபருக்கு உதவி கிடைப்பவை அல்ல. இது கூட்டுறவுகளின் நிறுவன வளர்ச்சிக்கும் மற்றும் மாநில அரசின் முயற்சிகளுக்கும் உதவுபவை. மாநில அரசு தனிப்பட்ட சங்கத்தின் திட்டம் அல்லது வரைவுகளை குறிப்பிட்ட திட்ட வரைவுகளின் படி தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்திற்குப் பரிந்துரை செய்யும். சங்கம் திட்டத்திற்கு நேரடி நிதியைப்  பல்வேறு திட்டங்களின் உதவிகள் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பொழுது பெறலாம். திட்ட வரைவுகளை அந்த குறிப்பிட்ட செயற்கூறு உள்ள துறையில் பார்த்து, தேவைப்பட்டால் நேரடியாக களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும். பின் முறையாக நிதிகள் அனைத்தும் மாநில அரசு / சங்கத்திற்கு வழங்கப்படும். நிதி வெளியீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அளவைப் பொருத்தும் மற்றும் பணத்தை செலவழித்து திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் இருக்கும். கடன் திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 8 வருடங்கள் வரை வேறுபடும். இதன் வட்டி விகிதமும் நேரத்திற்குத் தகுந்தது போல் வேறுபடும்.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் நிதி பெறும் வசதிகள்

1. சந்தைபடுத்துதல்

 • விற்பனைக் கூட்டமைப்புகளுக்கு நிதி அளவு உதவிகள் வழங்கப்படுகிறது.
 • தொடக்க / மாவட்ட விற்பனைச் சங்கங்களின் அடிப்படை பங்கு முதலீடுகளை வலுப்படுத்துதல்.
 • விற்பனை (பழம் மற்றும் காய்கறி)
 • முதலீட்டுப் பண நிதி

2. பதப்படுத்துதல்

 • புதிய சர்க்கரை ஆலைகளை அமைத்தல் (முதலீட்டுக் கடன்) நவீனமயமாக்கல் மற்றும் விரிவுபடுத்துதல் / இருக்கின்ற சர்க்கரை ஆலைகளை வேறு வகையில் ஈடுபடுத்துதல் (முதலீட்டுக் கடன் + தவணை கடன்)
 • பண அளவு உதவிகள் கூட்டுறவு நூற்பாலைகள் / மாநில கூட்டுறவு பருத்தி கூட்டமைப்பு / புதிய நூற்பாலைகளில் பங்கு முதலீடுகளில் பங்கு பெறுதல் / நவீனமயமாக்கல் / நூற்பாலைகளை விரிவுப்படுத்துதல் / இருக்கின்ற ஜின்னிங் மற்றும் பிரசிங் செயலகங்களை நவீனமயமாக்கல் மற்றும் புதியதாக ஏற்படுத்துதல் / நொடிந்த நூற்பாலைகளை புறணமைத்தல் / பருத்தி மேம்பாட்டுத் திட்டங்கள்.
 • இதர பதப்படுத்தும் செயலகங்கள் உணவுத் தானியங்கள் / எண்ணெய் விதைகள் / மலைப் பயிர்கள் / பருத்தி ஜின்னிங் மற்றும் பிரசிங் / பழம் மற்றும் காய்கறி/ மக்காச் சோள ஸ்டார்ச் / துகள் அமைப்பு ஆகியவை.
 • மின் விசைத்தறி கூட்டுறவுகள் இதில் முன் மற்றும் பின் விசைத்தறி வசதிகளும் அடங்கும்.

3.  கூட்டுறவு சேமிப்பு

 • கோடோன்கள் கட்டமைப்பு (சாதாரணமாக)
 • இருக்கின்ற கோடோன்களை தரம் உயர்த்துதல் / மறுசீரமைப்பு செய்தல்
 • குளிப்பதன சேமிப்புகள் கட்டமைப்பு / தரம் உயர்த்துதல் / குளிர்பதன சேமிப்புகளை மறுசீரமைப்பு செய்தல்.

4.  கூட்டுறவுகளின் மூலம் தேவையான பொருட்களை வழங்குதல்

 • நுகர்வோர் பொருட்களை கிராமப்புறம் / நகர்ப்புறம் / சிறுநகர்புற பகுதிகளில் வழங்குதல்.

5. தொழில் கூட்டுறவுகள்
அனைத்து வகையான தொழிற்சாலை கூட்டுறவுகள், குடிசை மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள், கைவினைப் பொருட்கள் / கிராமப்புற பொருட்கள் ஆகியவை.

6.  சேவை கூட்டுறவுகள்

 • விவசாய கடன்
 • விவசாய காப்பீடு
 • தொழிலாளர் கூட்டுறவுகள்
 • நீர்ப்பாதுகாப்பு வேலைகள் / சேவைகள்
 • கிராமப்புற பகுதிகளில் பாசனம், நுண்ணீர்ப் பாசனம்
 • கால்நடை பாதுகாப்பு / உடல்நல நோய் தடுப்பு
 • கூட்டுறவுகள் மூலம் கிராமப்புற சுகாதாரம் / வடிகால் / சாக்கடை முறைகள்

6. விவசாய சேவைகள்

 • விவசாய கூட்டுறவு சேவை நிலையங்கள்
 • வாடகைக்கு எடுப்பதற்கு விவசாய சேவை நிலையங்கள்
 • விவசாய இடுபொருள் தயாரிப்பு மற்றும் அதன் செயலகங்கள் அமைத்தல்.
 • பாசனம் / நீர் அறுவடைத் திட்டங்கள்

7. மாவட்ட திட்டங்கள்
குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கூட்டுறவு மேம்பாட்டுத் திட்டங்கள் (ஐ.சி.டி.பி)

8. நலிவடைந்த  பகுதியினருக்கு கூட்டுறவுகள்

 • மீன் வளர்ப்பு
 • பால் பண்ணை
 • கோழிப் பண்ணை
 • மலை வாழ் மக்கள்
 • கைத்தறி
 • தென்னை நார் மற்றும் பட்டுப்புழு

9. கணினிமயமாக்கலுக்கு உதவி
10.ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள்

 • தொழில்நுட்பம் மற்றும் ஊக்குவிப்புத் துறைகள்
 • படிப்பு / திட்ட அறிக்கைகளுக்கு ஆலோசனை நிர்வாக படிப்புகள், சந்தை ஆய்வு மற்றும் திட்டங்களை மதிப்பிடுதல்.
 • பயிற்சி மற்றும் கல்வி

11. ஆலோசனை சேவைகள்
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்தில் இதர செயல்கள்

 • மதிப்பீடு மற்றும் புள்ளியியல் துறை
 • TOPIC பயிற்சி நிலையம்
 • கிசான் அழைப்பு நிலையம்

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

உதவி பெறும் சில வெற்றிக் கூட்டுறவுகள்

விவசாய இடுபொருட்கள்

 • மண்டல தொழிற்சாலை மேம்பாட்டு கூட்டுறவு லிமிடெட், கன்னூர், கேரளா.

கணினிமயமாக்கல்

 • ஜவஹர் சேட்கரி சகாகரி சக்ஹர் கர்கனா லிமிடெட், ‚ கல்லப்பனா அவேடி நாகா கோல்காபூர், மஹாராஷ்டிரா
 • சேட்கரி சகாகரி சங் லிமிடெட், பழைய மாளிகை, கோளாப்பூர், மஹாராஷ்டிரா.

மீன் வளர்ப்பு

 • மீன் வளர்ப்பு மேம்பாட்டு லிமிடெட்டின் கேரள மாநில கூட்டுறவு பேரவை, கருவன்கோனம், திருவனந்தபுரம், கேரளா.
 • கரஞ்சா மச்சிமார் விவித் கர்யகரி சகாகரி சன்ஸ்தா லிமிடெட், கரஞ்சா, மஹாராஷ்டிரா.

கைத்தறி

 • தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட், எக்மோர், சென்னை-8.

நூற்பாலைகள்

 • சேட்கரி சகாகரி சூட் கிர்னி லிமிடெட், சோளாப்பூர் மாவட்டம், மஹாராஷ்டிரா.
 • குஜராத் மாநில கூட்டுறவு பருத்தி கூட்டமைப்பு லிமிடெட் அகமதாபாத்-9.

சர்க்கரை ஆலைகள்

 • சகாமத் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் லிமிடெட், குருச்சேத்திரா, ஹரியானா.

குளிர்பதன சேமிப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகள்

 • HOPCOMS, லால்பாக். பெங்களூரு.
 • MAHAGRAPES, பூனே, மஹாராஷ்டிரா
 • லாகோல் உருளைக்கிழங்கு சாகுபடியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் லிமிடெட்., மனாலி (எல்.பி.எஸ்) ஹிமாச்சல பிரதேசம்.
 • ஹிமாச்சல பிரதேச கூட்டுறவு விற்பனை மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் (HIMFED), சிம்லா.
 • மண்டல பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட்., (VEGCO), தாலிபரம்பா, கேரளா
 • NAFED, புதுடெல்லி
 • ராவ் கூட்டுறவு குளிர்ப்பதனச் சேமிப்பு, இண்டோர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
 • உத்தர் அடி பர்கனாஸ் கிரிஷி சமாப்யா ஹிம்கர் சமிட்டி லிமிடெட்
 • 24 பர்கனாஸ் மாவட்டம், மேற்கு வங்காளம்
 • மகுவா கூட்டுறவு குளிர்ப்பதன சேமிப்பு லிமிடெட்
 • வைசாலி மாவட்டம், பீகார்

தமிழ்நாட்டில் நிதி பெறும் பெரிய செயல்கள்
என்சிடிசி தமிழ்நாட்டில் உள்ளக் கூட்டுறவுகள் மேம்பாட்டிற்கு அனைத்து திட்டங்கள் / துறைகளுக்கும் நிதி உதவிகளை வழங்குகிறது. கீழ்க்கண்டவை மாநிலத்தில் பெரிய செயல்களுக்கு நிதி பெறுபவை.

விற்பனை மற்றும் இடுபொருட்கள்
என்சிடிசி இதுவரை ரூ. 36.297 கோடிகளை தமிழ்நாடு அரசிற்கு விற்பனைக் கூட்டுறவுகள், கூட்டமைப்பு மற்றும் விவசாய நுகர்வு வாடகை நிலையங்கள் / விதைப் பெருக்கம் / உரங்கள் குருணைகள்  செய்யும் திட்டம்

நுகர்வோர்
என்சிடிசி 202 கிராமப்புற நுகர்வோர் திட்டங்களை 4526 கிராம சங்கங்களின் ரூ. 17.81 கோடி நிதி உதவி செய்துள்ளது.

சர்க்கரை
5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நவீனமயமாக்கி விரிவடையச் செய்வதற்கு கள்ளக்குறிச்சி, மதுராந்தகம், என்பிகேஆர்ஆர், திருத்தணி, சேலம் ஆகியவற்றிற்கு  ரூ. 63.49 கோடி ரூபாய் என்சிடிசி வழங்கியுள்ளது. எஸ்டிஎப் உதவி மூலம் ரூ. 30.78 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. சேலம் மற்றும் அமராவதி ஆகிய இரண்டு வடிகட்டும் களனிற்கு என்சிடிசி 8.82 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. என்சிடிசி பங்கு முதலீட்டுத் தேவைகள் / மறுசீரமைப்பு / முதலீட்டுப் பணித் தேவைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்துள்ளது. சர்க்கரைத் துறையின் கீழ் மொத்தமாக ரூ. 318.34 கோடி ரூபாய் உதவி செய்யப்பட்டுள்ளது.

நூற்பாலைகள்
என்சிடிசி 14 கூட்டுறவு நூற்பாலைகளுக்கு முதலீடு மற்றும் நவீனமயமாக்கல் / விரிவாக்கம் ஆகியவற்றிற்கு ரூ. 8.22 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர என்சிடிசி அதிகபட்ச அளவுத் தொகையை நூற்பாலைகள் மற்றும் காற்று சக்திக் களன் தேவைக்கு வழங்கியுள்ளது. இத்துறையின் கீழ் மொத்த உதவி 13.134 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கைத்தறி
பதப்படுத்துதல் (8 களன்கள்), நவீனமயமாக்கல் / நேரடி விற்பனை நிலையம் (315) மற்றும் பங்கு முதலீடு (104) ஆகியவற்றிற்கு ரூ. 17.55 கோடிகள் ரூபாய் உதவி அளிக்கப்பட்டுள்ளது.

மீன் வளர்ப்பு
ஒருங்கிணைந்த கடல் மீன் மேம்பாட்டுத் திட்டம் பகுதி 1ன் கீழ் 44 மீன் பிடிக்கும் கிராமங்கள், 4234 பயனாளர்கள் இதன் கீழ் வருகின்றனர். 14.50 கோடி ரூபாய் கடன் உதவி மற்றும் 0.31 கோடி ரூபாய் மானியங்கள் ஒன்றிய அளவில் 16.99 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஐஸ் பெட்டிகள் வாங்குவதற்கு 50 மீன் பிடிக்கும் மகளிர் கூட்டுறவுகளுக்கு மேல் ரூ. 53.73 லட்சம் (இதில் MFP / 44.78 லட்ச ரூபாய் உதவியும் அடங்கும்) ரூபாய் வழங்கப்பட்டுள்ளது இதில் அனைத்தும் சேர்த்து மீன் வளர்ப்புத் துறைக்கு இது வரை 34.39 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பால் பண்ணை
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் சங்கம் மற்றும் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் சங்கம் ஆகியவற்றிற்கு தலா ரூ. 493.50 லட்சம் மற்றும் ரூ. 325.85 லட்சம் ரூபாய் ஒருங்கிணைந்த பால் பண்ணை மற்றும் 0.5 லட்சம் லிட்டர் பால் ஒன்றுக்கு பால் பதப்படுத்தும் களன் அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 74.90 லட்சம் ரூபாய் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திற்கு 74.90 லட்சம் ரூபாய் குளிர்பதன முறையை அமோரியா முறையில் மாற்றுவதற்கு உதவுகிறது.

தேயிலை கூட்டுறவுகள்
என்சிடிசி INCOSERVEவிற்கு 147.130 லட்சம் ரூபாய் உதவியை அளவுத் தொகை I சேமிப்புக் கிடங்கு மற்றும் தேயிலை சோதனைக் களன், தேயிலை அறைத்தல்  மற்றும் சேமிப்புக் கோடோன் கொச்சின், வேலை செய்யும் இடம், கோடோன் மற்றும் குன்னூர் சேமிப்புக் கோடோன் என்சிடிசி 6 தேயிலை தொழிற்சாலைகளுக்கு முதலீட்டுத் தொகையாக 6.44 கோடி ரூபாய் உதவி வழங்கியுள்ளது. 13 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு நவீனமயமாக்கல் / விரிவாக்கம் ஆகியவற்றிற்கு 3.74 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 11 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு ரூ. 17.655 லட்சம் கோடோன்  வசதிகள் ஏற்படுத்த வழங்கியுள்ளது. மொத்த உதவித் தொகை இத்துறைக்கு ரூ. 11.22 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது.

தேவைகள் உள்ள பகுதிகள்

 • மாநில அரசின் நேர்காணல் மற்றும கொள்கை முடிவுகளின்படிஈ கீழ்க்கண்டவை தமிழ்நாட்டில் என்சிடிசி மூலம் நிதி வழங்க முக்கியப் பகுதிகள் அல்லது ஆதாரம் உள்ள பகுதிகள் ஆகும்.
 • ICDP (மாநில அரசு நிறைய ICDPக்களை மீதம் உள்ள 14 மாவட்டங்களை அடுத்து மூன்று ஆண்டுகளில் நிறைவேற்ற முனைந்துள்ளது.
 • முதலீட்டுப் பணம் / பண அளவு உதவி நன்றாக இயங்கும் தொடக்கக் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது.
 • 5 கூட்டுறவு நூற்பாலைகளை நவீனமயமாக்கல் / மறுசீரமைப்பு / கோஆப்டெக்ஸ் நிறுவனத்தை புத்துயிர் ஊட்டல் மற்றும் தொடக்க கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு முதலீட்டுப் பண உதவியை வழங்குதல்.
 • நீர்த்தேக்க மீன்வளர்ப்பு வளர்ச்சித் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்செய் அறுவடை விற்பனையில் மேம்பாடு (ஐஸ் பெட்டியில் அனுப்புதல், கியோஸ்களில் அடைத்தல்) மீனவர்களுக்கு கடல் பாதுகாப்புத் திட்டங்கள் (உயிர்ப் பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் வழங்குதல், ஜிபிஎஸ் ஆகியவை) மீன்பிடி நிற்பதற்கு நிலையங்களை கட்டமைப்பு சிறிய மீன்பிடி துறைமுகங்கள் ஆகியவை மாநில அரசின் மூலம் அமைக்கும் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டப் பணிகள் அடங்கும்.
 • சேவை கூட்டுறவுகள் (மாநில நில மேம்பாட்டு வங்கிகளுக்கு கிராமப்புற கடன் தேவைகள்) மற்றும் கிராமப்புற தொழிற்சாலை கூட்டுறவுகள் ஆகியவற்றிற்கு உதவிகள்.

முகவரி
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகம்
மாடியூல் எண் 34 மற்றும் 35
கார்மெண்ட் வளாகம்
2வது  தளம்
கிண்டி, சென்னை - 600032.
தொலைபேசி : 044-22313134, 22313824
தொலை நகல் : 044-22313134
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015