வங்கி மற்றும் கடன் :: இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட்
நமது அணுகுமுறை
நமது குறிப்பணிகளை அடைய இஃப்கோ ஒரு கூட்டுறவு சங்கமாக பல்வேறு செயல்கள் பரந்து இருக்கும் பகுதிகளில் இதன் கூட்டுறவு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளின் நல்வாழ்வை ஊக்குவிக்க செயல்பட உள்ளது. இதன் செயல்கள் அனைத்தும் இஃப்கோவின் துணை சட்டவிதிகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பணிகள் மற்றும் குறிக்கோள்கள்
 1. இஃப்கோவின் குறிக்கோள் அதன் உறுப்பினர்களுக்கு பொருளாதார ஆர்வத்தை தொழில் நெறிஞர் ஜனநாயகம் மற்றும் தன்னாட்சி முறை மூலம் சுய உதவி மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் தயாரிப்பு / உற்பத்தி / மேம்பாடு ஆகியவற்றை இராசயன உரங்கள், உயிர் உரங்கள் பெட்ரோலிய இராசயனங்கள் தொழில்துறை சுத்திகரிப்பு ஹைட்ரோ கார்பன், இதன் இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் அதன் சார்ந்த பொருட்கள் / துணை பொருட்கள் மற்றும் மாற்றியமைப்பு, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதல் : பண்ணை மற்றும் வனப் பொருட்கள் தயாரிப்பு / பதப்படுத்துதல் / அதை மாற்றுதல், உயிர் தொழில்நுட்பம், மீன் வளர்ப்பு, விவசாய இயந்திரவியல் மற்றும் உபகரணங்கள், இதர விவசாய இடுபொருட்கள் / வெளியில் எடுப்பவை அதனை மாற்றியமைத்தல், சேமிப்பு, சந்தைபடுத்துதல், வர்த்தகம், கப்பல் மூலம் அனுப்புதல், போக்குவரத்து, தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மின் உற்பத்தி மற்றும் இதை மரபு வழி அல்லது மரபு வழி அல்லாத சக்தி ஆதாரங்கள் மூலம் பிரித்து அனுப்புதல், வீடு கட்டுதல், வீட்டு மனை, கட்டமைப்பு, வங்கியியல், காப்பீடு இதர செயல்களை ஏற்படுத்துவதற்கு சரியாகவும் மற்றும் தகுந்தது போலவும் இருத்தல்.

 2. மேல் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களைத் தொடர்ந்து, இஃப்கோ சில செயல்களை குறிப்பிட்டுள்ளவை ஆனால் வரைமுறை இல்லாதவை.
  1. இராசயன உரங்கள் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் ஆகியவை தயாரிக்க கலன் அல்லது தொழிற்சாலை அமைத்தல்.
  2. பூச்சிக்கொல்லிகள், விதைகள், விவசாய இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் இதர விவசாய உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செயலகப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றை செய்தல். இதை புதியதாகத் தொடங்கியோ அல்லது வாடகைக்கு தயாரிப்பு செயலகங்களை நேரடியாகவோ அல்லது கூட்டு மூலமோ அல்லது கூட்டுறவு நிறுவனம் மூலம் இணைந்து / பொதுத் துறை நிறுவனம் அல்லது இதர முகவர் மூலம் எடுத்துச் செய்தல்.
  3. இஃப்கோவின் தொழில்களுக்கு உதவிடும் வகையில் தொழிற்சாலைகள், வீட்டுமனைகள், எஸ்டேட்கள், இரயில்வே ஓரங்கள், கட்டிடப் பகுதிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் நீர் இறைப்பான்கள் நிறுவுதல், சுத்தப்படுத்தும் கலன்கள் அமைத்தல், பைப் லைன்கள் எடுத்துச் செல்பவை, சேமிப்புக் கூடாரங்கள் மற்றும் இதர அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்தல், நிறுவுதல், கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் நிர்வகிப்பு ஆகிய அனைத்தும்.
  4. இஃப்கோவின் ஏதாவது தொழில்களுக்குத் தேவையாானவற்றைத் தயாரித்தல், சேமித்தல், பராமரித்தல், விற்பனை செய்தல், வாங்குதல், சரிசெய்தல். மாற்றுதல், திருத்தியமைத்தல், வாடகைக்கு விடுதல், ஏற்றுமதி, இறக்குமதி இதர அனைத்துப் பொருட்கள் தேவையானவற்றை அனுப்புதல் அல்லது இஃப்கோவின் இது போன்ற தொழில்களை லாபகரமாக இருப்பதை இணைத்து பார்த்துக் கொள்ளுதல்.
  5. சேமிப்புக் கிடங்கு முகவராக சேமிப்புக் கிடங்கு விதியின் கீழ் இயங்குதல் மற்றும் அதை சொந்தமாக வைத்திருத்தல், கட்டுதல் அல்லது உரங்கள் மற்றும் இதர பொருட்கள் சேமிப்பதற்கு சேமிப்புக் கலன்கள் ஏற்படுத்துதல் மற்றும் இதர பொருட்கள் தானாகவோ அல்லது ஏதாவது ஒரு கூட்டுறவு நிறுவனம் அல்லது முகவருடன் இணைந்து ஏற்படுத்துதல்.
  6. உரங்கள் சேமிப்பதற்கு ஏதாவது ஒரு கூட்டுறவு நிறுவனம் அல்லது முகவருடன் இணைந்து ஏற்படுத்துதல்.
  7. போக்குவரத்து செயலகங்களை சுயமாகவோ அல்லது இந்திய நிறுவனம் / வெளிநாடு நிறுவனம் ஒன்றோடு இணைந்து பொருட்களை கடல் அல்லது சாலை மார்க்கமாக எடுத்துச் செல்வது ஆகியவற்றை பராமரித்தல்.
  8. இஃப்கோவின் தொழில்களுக்கு நிலத்தை வாடகைக்கு/சுயமாக வாங்குதல், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் விற்பனை செய்தல / வாடகைக்கு எடுத்தல்.
  9. உரங்கள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் இதர விவசாய உற்பத்தி மற்றும் வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபடுதல்.
  10. கூட்டுறவு மற்றும் இதர நிறுவனங்களின் பங்குகளுக்கு சந்தா செலுத்துதல்.
நமது செயல்திட்டம்
விவசாயிகள் மற்றும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வழங்கும் சேவைகளை மேலும் மேலும் மேம்படுத்த இருக்கும் தாகம் நம்மை திருப்தி அடையச் செய்யாது. தரத்திற்காக எத்தகைய கடினமாகதாக இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வரும் அர்ப்பணிப்பு பெற்றவை. பூமித்தாயின் மீது சுமத்தப்பட்டிருக்கும் பசி என்ற இயந்திரத்தை இந்தியாவில் இருந்து நீக்கி அதை சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றாற்போல் தொடரச் செய்வதே இதன் முக்கிய செயல்பணி ஆகும். இவை அனைத்திற்கும் மீதும் இஃப்கோ எதிர்பார்க்கும் பிரதி பலன் இந்திய விவசாயின் முகத்தில் பார்க்கும் நீங்கா புன்னகை மட்டுமே. அதுவே செயல்பணிக்கு பின்னால் இருந்து இயக்கும் சக்தியாகும்.

விற்பனை பிரிவின் முகவரி
இஃப்கோ (IFFCO),
128, ஹபிபுல்லா சாலை,
டி.நகர், சென்னை - 600 017.
044 - 28340152, 28342115, 28340454
smm_tamilnadu@iffco.nic.in

ஆதாரம்
: http://www.iffco.nic.in
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016