தவேப வேளாண் இணைய தளம் :: விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாம் :: அமைப்பு மற்றும் செயல்பாடுகள்

அமைப்பு மற்றும் செயல்பாடுகள் :

ஆத்மாவின் நிர்வாக அமைப்பு :

திட்டங்களை உருவாக்குதல் மற்றும் வழிக் காட்டுதலுடன், ஆத்மா செயல்பாடுகளை கண்காணிக்க ஒரு நிர்வாக வாரியம் ஆத்மாவின் கீழ் செயல்படுகிறது. தினசரி செயல்பாடுகளை திட்டமிடவும், கண்காணிக்கவும், தனியாக ஒரு மேலாண்மை குழு உள்ளது. நிர்வாக வாரியம் மற்றும் மேலாண்மை குழுவில் அடங்கிய உள்ளவர்கள் அவர்களின் முக்கிய வேலைகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய வேளாண்மை தொழில் நுட்ப திட்டத்தின் (1998), கீழ் கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் உள்ள விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாம் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளை பரப்புவதில் முக்கிய பொறுப்பு வகிக்கிறது. இவை வேளாண் சார்ந்த துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு அல்லா நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் இவை அனைத்தும் விவசாய தொழில்நுட்ப மேலாண்மைமுகாமின் பங்குதாரர்கள் ஆவர். பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில், மாநிலங்கள் மற்றும் மாகானத்தில் உள்ள சுமார் 252 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

ATMA

செயல்முறை அமைப்பு :

1. தேசிய நிலை : 

அங்கீகரிக்கப்பட்ட நிதி திட்டத்தை வே.தொ..முகாம், தொழில்நுட்ப பரப்பும் பிரிவிற்கு சமர்பித்து அனைத்து திட்டத்தை சரிவர ஆராய்ந்த பிறகு தொ.ப.பிரிவின் அங்கீகாரத்திற்காக, தொ.ப.மே. குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2. மாநில நிலை : 

துறைகளுக்கு இடையே ஆன செயல் குழுவே கொள்கை இடுவுகளுக்கான முடிவுகளை எடுக்கிறது. அவை வேளாண் உற்பத்தி ஆணையர் தலைமையில் செயல்படுகிறது. அனைத்து நிறுவனங்களை ஒருங்கிணைக்க ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குதல் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்.

3. மாவட்ட நிலை : 

அனைத்து வட்ட திட்டங்களை வே.தொ.மே.முகாம் தொகுக்க வேண்டும். இவற்றை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமின் மேலாண்மை குழு திறனாய்வு செய்ய வேண்டும். இத்திறனாய்வு அறிக்கையை திட்ட இயக்குனர் அவர்கள் நிர்வாக வாரியத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். தொழில்நுட்ப மேலாண்மை முகாம்நிதி ஆண்டு திட்டத்தை தயாரித்து, நிர்வாக வாரியத்திற்கு அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க வேண்டும்.

4.வட்ட நிலை : 

விரிவாக்க மற்றும் ஆராய்ச்சியின் கிரியைகளுக்காக குழுவினால் ஆண்டு வட்ட செயல் திட்டத்தை வழிமுறை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க திட்டத்தின் அடிப்படையில், வட்ட தொழில்நுட்ப தயாரிக்கப்படுகிறது. இத்தகைய செயல்திட்டத்தின் கண்காணப்பு மற்றும் திறனாய்வுகளை விவசாய ஆலோசனை குழு மேற்கொண்டது. பிறகு அத்திட்டத்தை அவர்கள் திட்ட அலுவலர், விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாமிடம், நிர்வாக மையத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க வேண்டும். நிர்வாக மையம் அங்கீகரித்த திட்டத்தை, வட்ட தொழில்நுட்ப குழு கிராமப்புற அமைப்குளில் மூலம் செயல்படுத்தினர்.

5. கிராம் நிலை : 

விரிவாக்க சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் பல்வேறு துறையை சார்ந்த கிராமப்புற விரிவாக்க அலுவலர்கள் விவசாய அமைப்பின் உறுதுணை மற்றும் வட்ட தொழில்நுட்ப குழு, விவசாய ஆலோசனை குழுவின் மேற்பார்வையோடு நடைமுறைப்படுத்தப்பட்டது. விவசாய தொழில்நுட்ப மேலாண்மை திட்ட மாநிலத்தில், மாநில வேளாண் மேலாண்மை மற்றும் பயிற்சி மையம் மனித வள மேம்பாடு ஆதரவுன், தொழில்நுட்ப புதமையான தொழில்நுட்பங்களின் விரிவாக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய பணிகள் :

ஆத்மாவின் மேலாண்மை குழுவினால் கீழ்க்கண்ட பணிகள் மற்றும் குறிக்கோள்களுடன் செயல்படுகிறது.

 1. மாவட்டத்திற்குள் உள்ள பல்வேறு சமூக பொருளாதாரக் குழுக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினை மற்றும் கஷ்டங்களை கிராமப்புற பங்கேற்பு முறை மூலம் அறிதல்.
 2. கிராமப்புற பங்கேற்பு முறையின் மூலம் கண்டறியப்பட்ட விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகளுக்கு, மாவட்டத்திற்கு ஏற்ற ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய தொழில்நுட்ப திட்டத்தை, குறுகிய கால மற்றும் நடுத்தர காலத்திலுள்ள செயல்படுத்த/பின்பற்றக்கூடிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பத்தை மதிப்பிடுதல் மற்றும் திரும்ப மேம்படுத்துதல் விரிவாக்கத்தை தயாரித்தல்.
 3. திரும்ப காணுதல், மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரம் வாங்க ஆண்டு வேலைத் திட்டத்தை தயாரித்து ஆத்மாவின் நிர்வாக வாரியத்திற்கு சமர்ப்பித்தல்.
 4. கணக்கு தணிக்கைக்காக, திட்டத்தின கணக்கு/வரவு செலவு கணக்குகளை தொழில்நுட்ப பரப்பும் மையத்திற்கு சமர்ப்பித்தல்.
 5. தொடர்புடைய துறைகள், மண்டல ஆராய்ச்சிநிலையம், வேளாண் அறிவியல் மையம், விவசாய ஆர்வக் குழு/ விவசாயி குழுக்கள் மற்றும் சார்ந்த நிறுவனங்களான தனியார் நிறுவனங்கள் மூலம் ஆண்டு வேலைத் திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துதல்.
 6. வட்டாரம் மற்றும் கிராம அளவில், விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்பத்தை செயல்படுத்தும் வேளாண் ஆலோசனை மையத்துடன் ஒருங்கிணைந்து, செயல்பட வட்டார அளவில் ஒருங்கிணைப்பு வழிகளை தோற்றுவித்தல்.
 7. பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள், விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய செயல்கள், நிஜமாக நடந்தவைகளும், அதன் அடைவுகள் குறித்து ஒரு ஆண்டு செயல் அறிக்கையை நிர்வாக வாரியத்திற்கு வழங்குதல்.
 8. நிர்வாக வாரியத்திற்கு செயலகத்தை அமைத்து, வாரியத்தின் திட்டம் நோக்கம், நிதி முடிவு மற்றும் இதர வழிமுறைகளை அறிதல்.
 1. விவசாயி ஆலோசனை குழுவை அமைத்து, அதன் பின்பாடுகளை மேம்படுத்துதல்
 2. விவசாயிகளை, அரசு சாராத நிறுவனங்களின் உதவியுடன் ஒருங்கிணைத்தல்.
 3. தொழில்நுட்ப பரிமாற்றுவதில், தனியார் துறைகளின் ஈடுபாட்டை ஊக்கப்படுத்துதல்.
 4. மாவட்டத்திலுள்ள ஆராய்ச்சி பிரிவுகளின் மூலம் தொழில்நுட்பங்களை மதிப்பிடவும் திரும்ப மேம்படுத்தவும் செய்தல்.
 5. கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு திட்டமிட வழிமுறைகளை காணுதல்
 6. தகவல் தொழில்நுட்பத்தின் உபயோகத்தை அதிகப்படுத்துதல்
 7. ஆத்மாவில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, பயிற்சி அளித்தல்.
 8. புதிய பொது - தனியார் துறையினர் பங்குதாரர்களை அதிகப்படுத்துதல்.
 9. ஆர்வமுள்ள விவசாயி குழுக்களை உருவாக்கி வலுப்படுத்துதல்.

            மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதளத்தை பார்க்கலாம்.

நிதி : 

விவசாய தொழில்நுட்ப மேலாண்மை தேவையான நிதி ஒதுக்கீடை மத்திய அரசு வழங்குகிறது. இவற்றுள் 90 சதவிகித் நிதியை மத்திய அரசும், 10 சதவிகிதத்தை மாநில அரசம் வழங்குகிறது. இவற்றுள், 10 சதவிகித நிதியை மாநிலம் அல்லது பயனாளி விவசாயிகள் அல்லது அரசு அல்லா நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு : 

பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில், மாநிலம் மாவட்டத்தில் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை. திட்டத்தின் செயல்பாடுகளுக்கு சுமார் ரூ.226.07 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு பயன்பாட்டின் முடிவுகளை மத்திய மாநிலம் மற்றும் மாவட்டங்களினால் எடுக்கப்படுகிறது. சுமார் 167.56  கோடி (77.53 சதவிதம்) ரூபாயை மாவட்டத்திற்கும், 22.15 கோடி (10.25 சதவிகிதம்) ரூபாய் மாநிலத்திற்கும், 26.41 கோடி (12.22 சதவிகிதம்) ரூபாய் மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வனைத்து ஒதுக்கீடையும் புதுமையான செயல்பாடுகளுக்கு இந்திய அரசின் அங்கீகாரத்துடன் மாநிலம் 1 மாவட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.

வட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில் வயல்வெளி பள்ளி அமைப்பு :

ஆத்மாவின் நிர்வாகவாரியம் :

1. மாவட்ட நீதிபதி/ஆட்சியாளர் சேர்மன்
2. முதன்மை செயல் அலுவலர் துணை சேர்மன்
3. இணை இயக்குநர்/துணை இயக்குநர் (விவசாயம்) உறுப்பினர்
4. மண்டல ஆராய்ச்சி நிலையம்/வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து வந்த நபர் உறுப்பினர்
5. ஒரு விவசாயி பிரதிநிதி உறுப்பினர்
6. ஒரு கால்நடை உற்பத்தியாளர் உறுப்பினர்
7. ஒரு தோட்டக்கலை விவசாயி உறுப்பினர்
8. பண்ணை ஆர்வமுள்ள மகளிர் குழு உறுப்பினர் உறுப்பினர்
9. தாழ்த்தப்பட்ட/ஆதிதிராவிடர் வகுப்பினை சார்ந்த ஒரு விவசாயி பிரதிநிதி உறுப்பினர்
10. அரசு சாராத நிறுவனத்தின் பிரதிநிதி உறுப்பினர்
11. மாவட்டத்தின் முதன்மை வங்கி அலுவலர் உறுப்பினர்
12. இடுப்பொருள் விநியோகம் சங்கத்தின் பிரதிநிதி உறுப்பினர்
13. ஆத்மாவின் திட்ட இயக்குநர் உறுப்பினர்
14. மீன்வளத்துறை/பட்டு வளர்ப்புத் துறை பிரதிநிதி உறுப்பினர்-செயலாளர் மற்றும் கருவூலக உறுப்பினர்

நிர்வாக வாரியத்தின் செயல்கூறுகள் பின்வருவன :

 1. வழிமுறை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க திட்டம், வருடாந்திர செயல் திட்டத்தை திறனாய்வு மற்றும் அங்கீகாரம் அளிப்பது
 2. வருடாந்திர அறிக்கையை திறனாய்வு செய்வது
 3. திட்ட நிதியை பெற்று அவற்றை ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக ஒதுக்கீடு செய்தல்
 4. மாவட்டத்தில் விவசாயிகளின் வேளாண் ஆர்வக்குழு மற்றும் விவசாய சங்கங்களை மேம்படுத்துதல்
 5. இடுபொருள், தொழில்நுட்ப தகவல், வேளாண் பதப்படுத்தும் முறை, விற்பனை சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்
 6. பழங்குடிவாழ் மக்கள், குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் போன்றவர்களுக்கு கடனுதவி வழங்கும் வங்கிகளை ஆதரிக்க வேண்டும்
 7. விவசாய ஆலோசனைக் குழுக்களை வேளாண் அறிவியல் நிலையம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் இதர வேளாண் சார்ந்த துறையை அமைக்க வேண்டும்.
 8. வேளாண் செயல்பாடுகளை ஊக்குவிப்பது மற்றும் ஆதரவு தருவதற்காக, ஒப்பந்தங்கள் மற்றும் உடன் பாடுகளை மேற்கொள்ள வேண்டும்
 9. விவசாய தொழில்நுட்ப மேலாண்மைமுகாமை நிலைப்படுத்த, வேறு நிதி ஆதரவு தரும் நிறுவனங்கள் மற்றும் மையங்களை அறிய வேண்டும்
 10. விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாமின் நிதி கணக்குகளை ஆய்வு செய்ய தணிக்கை நடத்த வேண்டும்
 11. விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாமின் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்

மேலாண்மை குழு :

1. ஆத்மாவின் திட்ட இயக்குநர் சேர்மன்/ தலைவர்
2. வேளாண் துறையின் மாவட்ட தலைவர் உறுப்பினர்
3. தோட்டக்கலை துறையின் மாவட்ட தலைவர் உறுப்பினர்
4. கால்நடைத்துறையின் மாவட்ட தலைவர் உறுப்பினர்
5. மீன் வளத்துறையின் மாவட்ட தலைவர் உறுப்பினர்
6. பட்டு வளர்ப்பு துறையின் மாவட்ட தலைவர் உறுப்பினர்
7. மாவட்டத்திலுள்ள முக்கிய துறையின் தலைவர் உறுப்பினர்
8. வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் உறுப்பினர்
9. விவசாயி குழுவின் பொறுப்பாளரான அரசு சாராத நிறுவனத்தின் பிரதிநிதி உறுப்பினர்
10. விவசாயி குழுவின் இரண்டு பிரதிநிதி (ஆண்டு சுழற்சி முறை அடிப்படையில் உறுப்பினர்

இவை வட்ட அளவில் அமைக்கப்பட்டு, இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது. அவை விவசாயி ஆலோசனைக் குழு மற்றும் வட்ட தொழில்நுட்ப குழு ஆகும். விவசாயி ஆலோசனைக் குழு மற்றும் வட்ட தொழில்நுட்ப குழு என்பது சுமார் 11 முதல் 16 விவசாய பிரநிதிகளை உள்ளடக்கிய சபையாகும். ஆனால் வட்ட தொழில்நுட்ப குழு என்பது வேளாண் தொழில்நுட்ப ஆலோசர்களை கொண்டதாகும்.

வட்ட தொழில்நுட்ப குழு : 

வட்ட அளவில், வட்ட தொழில்நுட்ப குழு பல்வேறு துறையை சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை உள்ளடக்கிய ஒர் குழுவாகும். தொழில்நுட்ப வட்ட குழுவின் பணிகள் யாதெனில் அனைத்து விரிவாக்க செயல்கூறுகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவத ஆகும். மேலும் இவை வெவ்வேறு துறையை சார்ந்த விரிவாக்க அலுவலர்கள் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை தயாரித்து, அமல்படுத்துவதற்கு ஏற்ற இடமாக இம்மையம் செயல்படுகிறது. வேளாண் துறை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளத்துறை, பயிர் பாதுகாப்பு, மண் வள பாதுகாப்பு விரிவாக்கம், பட்டுப்புழு, கூட்டுறவு துறை மற்றும் விற்பனை துறை ஆகியோர் வட்டார அலுவலர்கள் ஆவர். இவ்வணைத்து அலுவலர்களில் மூத்த பணியாளர் ஒருவர் குழுவை தலைமை வகித்து செயல்பாடுகளை நிறைவேற்றுவார்.

செயல்கூறுகள் : 

வட்டார அளவிலும் செயல்கூறுகள் அனைத்தும் மாவட்டங்களில் செயல்கூறுக்ள போல இருக்கும்.

விவசாய ஆலோசனைக் குழு :

விவசாய ஆலோசனைக் குழு என்பது பஞ்சாயத்து தலைவரால் தலைமை வகித்து வட்டார அளவில் 10 முதல் 12 பங்குதாரர்களை உறுப்பினர்களாக கொண்டதாகும். இவற்றின் பணி என்னவென பரிந்துரைந்த திட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் வட்டார அளவில் விரிவாக்க திட்ட செயல்பாடுகளை நிர்மாணிப்பதே ஆகும்.

செயல்கூறுகள் :

 1. தேசிய வேளாண் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் செயல்படும் வட்டார விரிவாக்க பணிகளுக்கு தேவையான ஒருங்கிணைத்த தொழில்நுட்பத்தையும் மற்றும் அவற்றை மேற்பார்வை செய்யவும் விவசாய ஆலோசனைக் குழு உதவுகிறது.
 2.  காலாண்டு மற்றும் வருடாந்திர செயல் திட்டத்தை தயாரித்து, விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாமின் நிர்வாக வாரியத்திற்கு அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
 3. வட்டார அளவில், அனைவரும் விரிவாக்கம் மற்றும் மேலாண்மை திட்டத்திற்கு ஒருங்கிணைந்து கண்காணித்தல்
 4. வட்டார அளவில், அனைவரும் விரிவாக்கம் மற்றும் மேலாண்மை திட்டத்திற்கு ஒருங்கிணைந்து கண்காணித்தல்
 5. வட்டார அளவில் விவசாய வேளாண் ஆர்்வக் குழுக்கள் மற்றும் விவசாய சங்கங்களை மேம்படுத்துதல்
 6. வட்ட அளவில் இடுபொருளான விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள், கடனுதவி, பாசம் மற்றும் பல ஆகியவற்றை மதிப்பீடு மற்றும் ஆய்வு செய்தல்.
 7. விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாமின்  பங்கேற்பாளர்களை தேவையான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க செயல்பாடுகளுக்காகச் வழிநடத்துவது மற்றும் கருத்து தெரிவித்தல்

கிராமப்புற அலுவலர்கள் : 

1. கிராமப்புற அலுவலர்கள் செயல்கூறுகள் யாதெனில், பாரம்பரிய தொழில்நுட்ப அறிவை விரைவு ஊரக மதிப்பீடு நேர் காணல், வயல்வெளிப் பார்வை ஆகியவற்றின் மூலம் அறிந்து பின்பு ஆவணம் செய்து பின்பற்றுவது
2. மண், நீர் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, மண் வேறுபாடுகள் ஆகியவற்றிற்கு புதுமையான தொழில்நுட்பங்களை பற்றி அறிவது
3. வேளாண் மற்றும் அதனை சார்ந்த பட்டதாரிகளை அறிந்து வேளாண் இடுபொருள் சேவை மையம் அமைக்க ஊக்குவிப்பது
4. விற்பனை வேளாண் பதப்படுத்துதல் மட்டும் இடுபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய, விவசாய அமைப்பு அல்லது குழுக்களை அமைத்தல்
5. விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவித்தல்
6. தனியார் நிறுவனம், வியாபாரிகள், தொண்டுழியர்கள் ஆகியோர் இத்தொழில்நுட்பங்கள் பரப்புவதில் பெரிதும் உதவிகின்றன
7. இவற்றின் வெற்றிக் கதைகளை அறிந்து, ஆவணம் செய்தல்
8. தேசிய வேளாண் தொழில்நுட்ப திட்டத்தை பற்றிய  விழிப்புணர்வை  விவசாய சமூகத்தில் உருவாக்குதல்
9. இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு, விவசாய சமூகத்திற்கு வினை ஊக்கியாக செயல்படுகிறது
10. தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதில் ஏற்படும் தடைகளைஆராய்ந்து அவற்றின் தீர்வுக்கான செயல் திட்டங்களை உருவாக்க வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் விவசாய ஆலோசனைக்குழு உதவுகிறது.
11.மேலும் உள்ளூர் பிரச்சனை மற்றும் தேவைகளை அறிந்து உதவுவது.

மண்டல ஆராய்ச்சி நிலையம் :

 • வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் விவசாய ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு மாதந்திர பணிமனைக்கூட்டம் நடைபெறும்

 • பயிரிடும் காலத்திற்கு மன்பாக விவசாயிகள் விவசாய கூட்டங்களில் கலந்துக்கொள்வதன் மூலம் பயிரில் ஏற்படும் பிரச்சனைகளை அங்கு வருகையும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்தலோசித்து தீர்வு காண்பர்

 • உள்ளூர் மொழியில் வேளாண் மற்றும் அவற்றை சார்ந்த துறைகளின் தொழில்நுட்பஙகளை தயாரித்து எவற்றறை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் மாவட்ட தலைவர், வட்டார தொழில்நுட்பக் குழு மற்றும் விவசாய ஆலோசனைக் குழவிடம் வழங்குவர்

 • புதுமையான தொழில்நுட்பங்களை, விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்லோசித்து பின்பு சரிவர ஆராய்ந்து உறுதி செய்தல்

 • விரிவாக்க அலுவலர் கண்டெடுத்த பாரம்பரியம் தொழில்நுட்ப அறிவை ஆராய்ந்து பின்பு வயல்வெளி சோதனை நடுத்துதல்

 • அழகக்கூடிய சீக்கிரம் அழுகாத விளைப்பொருட்களை பெட்டியிடுதல் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குதல்

 • வேளாண் மற்றும் அதன் கசார்ந்த துறைகளின் புதுமையான தொழில்நுட்பங்களின் வெற்றிக் கதைகளை உருவாக்குதல்

வேளாண் அறிவியல் நிலையம்: 

வேளாண் அறிவிய் நிலையத்தின் செயல்கூறுகள் பின்வருவனவாகும்.

1.விவசாயிகள் இன்றுவரை பயன்படுத்தாத தொழில்நுட்பங்களை, விவசாயிகளின் நிலத்தில் வயல்வெளி சோதனைக் கொண்டு மேற்கொள்ளுதல்
2. கிராமப்புற அலுவலர்களை பயிர் சாகுபடியிலிருந்து நிலம் சார்ந்த பண்ணைய அணுகுமுறைக்கு பயிற்சி அளித்தல் 
3.பெண் விவசாயிகளுக்கு அறுவடை பின்சார் தொழில்நுட்பங்களை பற்றிய பயிற்சி கொடுத்தல்
4. வட்ட அளவில் விவசாய கூட்டங்களை நடத்துவதன் மூலம், பயிரில் ஏற்படும் பிரச்சனைகளை அங்கு கலந்துக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களிடம் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆலோசித்து தெளிவு பெறுதல்
5. வருடாந்திர செயல் திட்டத்தை உருவாக்குதில், வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் விவசாய ஆலோசனை குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்
6.வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் விவசாய ஆலோசனை குழுவுடன் ஒருங்கிணைந்து புள்ளி விவர சேகரிப்பில் கிடைத்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குதல்
7.பல்வேறு பயிர்கள் சாகுபடி மற்றும் தீவிர பயிர் சாகுபடி குறித்த ஆலோசனைகளை அளித்தல்
8. புதுமையான தொழில்நுட்பங்கள் வெற்றிக் கதையாகும் வரை, அத்தொழில் நுட்பங் பரப்புதலை புள்ளி விவர சேகரிப்பை கொண்டு விடாமல் மேற்கொள்ள வேண்டும்.

மாநில துறைகளுக்கு இடையேயான செயல்குழு உறுப்பினர்கள் :

வேளாண் உற்பத்தி ஆணையர்  தலைவர்
செயலாளர் வேளாண்துறை  உறுப்பினர்
செயலாளர் (நிதித்துறை)   உறுப்பினர்
செயலாளர் (மீன்வளத்துறை)   உறுப்பினர்
செயலாளர்(தோட்டக்கலை)   உறுப்பினர்
செயலாளர்(ஊரக வளர்ச்சி துறை ) உறுப்பினர்
செயலாளர்(கால்நடை வளர்ப்பு)  உறுப்பினர்
செயலாளர்(மண் வள பாதுகாப்பு)  உறுப்பினர்
செயலாளர்(பெண்கள் மேம்பாடு துறை) உறுப்பினர்
செயலாளர்(சார்ந்த துறைகள்) உறுப்பினர்
துணை வேந்தர் (மாநில வேளாண் பல்கலைக்கழகம்) உறுப்பினர்
துணை செயலாளர் (வேளாண்துறை) உறுப்பினர்

தோட்டக்கலை மற்றும் மண் வள பாதுகாப்பு துறையில், செயலாளர்கள் இல்லையெனில் அத்துறையை சார்ந்த இயக்குனாகள், துறைகளுக்கு இடையே ஆன குழுவின் உறுப்பினராக செயல்படுவர்.


நிதி ஒதுக்கீடு : 

விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாம், மாநில வேளாண் மேலாண்மை  மற்றும் விரிவாக்க பயிற்சி மையம் மற்றும் தேசிய வேளாண் தொழில்நுட்ப திட்டத்திற்கு இந்திய அரசு நேரடியாக நிதி வழங்குகிறது. இவற்றுள் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகரிமின் நிதி ஒதுக்கீடை, பல்வேறு துறையை சார்ந்த மாவட்ட தலைவர்கள், வட்டார தொழில்நுட்ப குழு, விவசாய ஆலோசனைக் குழுவின் தலைவர் வேளாண் அறிவியல் நிலையம். மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர்கள் ஆகியோருக்கு வழங்குவர். வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வட்டார தொழில்நுட்ப குழுவின் தலைவர்கள், சம்ந்தப்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் வட்டார தொழில்நுட்ப குழுவின் உறுப்பினர்களுக்கு நிதியை வழங்குகிறார்.


ஆத்மாவின் வேலை முறை :

 • ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களுடன் வேளாண்துறை மற்றும் அதை சார்ந்த துறை அரசு ஊழியர்கள், அரசு சாராத நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு பரிவு பிரதிநிதி இடுபொருள் விநியோகஸ்தர்கள், வங்கி மற்றும் விவசாய பிரதிநிதி அனைவரும் ஊரக பங்கேற்பு முறை மூலம் ஆய்வு நடத்துதல்.

 • தொழில்நுட்பம் வழங்குதல் முறையை தற்போது தாக்கும் காரணங்கள் மற்றும் தன்னிறைவு அடைவதை குறைக்கும் காரணங்களைக் கண்டறிதல்.

 • மேம்பாட்டுத் திட்டத்தில் நோக்கும், சந்தை இடுபொருள் விநியோகம், நிதி மற்றும் சமூக நிலை இயற்கை வளங்கள் போன்றவற்றிலுள்ள வாய்ப்புகள் மற்றும் பிரச்சினை கண்டறிதல்.

 •  தொழில்நுட்ப நோக்கங்களுடன் நிறுவனங்களின் அறிமுகப்படுத்தக்கூடிய புதிய மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப பரப்ப தேவையான நிதியை பெற, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ற பயன்படுத்தக்கூடிய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளை திட்டமிடுதல்.

 • குறிப்பிட்ட வருடத்திற்கு, பொது மற்றும் இதர பங்குதாரர்களின் வேலை மற்றும் செயல்பாட்டு பொறுப்புகளை வரையறுத்தல்.

 • செயல்படுத்தக்கூடிய ஆராய்ச்சி, விவசாயி பங்கேற்பு மாதிரிகள், செயல்முறை விளக்கங்கள், பண்ணை நாட்கள் மற்றும் வரக்கூடிய பருவத்திற்கு ஏற்ற விரிவாக்க மேம்பாட்டு பரிந்துரைகள் போன்ற எல்லாவற்றிற்கும் ஏற்ற தேவையான தொழில்நுட்ப முறைகளை வகைப்படுத்துதல்.

            மேலும் விவரங்களுக்கு  http://www.manage.gov.in/natp/atma.htm என்ற ஆத்மா இணையதளத்தை காணவும். 

இதுவரை ஆத்மாவில் நடைபெற்ற பாடங்கள்

 • பண்ணை வேலைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தலாம் ஆனால் அந்த புதிய முறைகள் எல்லோரும் செயல்படுத்துவதற்கும் ஏற்றதும் மாநில அரசின் தேவைக்கு ஏற்றதை பொறுத்தும் இருக்கும்.

 • எல்லா ‘ ஆத்மா ’ திட்டங்கள், பல்வேறுப்பட்ட விவசாய முறைகளில் மேம்பாட்டை ஏற்படுத்தியது.

 • வட்டார செயல்திட்ட வரைய, வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் விவசாயி ஆலோசனை குழுவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 • விவசாயி ஆர்வக் குழுக்கள் மற்றும் பண்ணை மகளிர் ஆர்வக்குழு போன்றவற்றில் பல குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் சில இணைந்து வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளன. அரசு சாராத நிறுவனங்கள், இப்படிப்பட்ட குழுக்களை உருவாக்க தேவைப்படுகின்றன.

 • வெளியிடங்களுக்கு பார்வையில், பயிற்சி மற்றும் செயல்வழி விளக்கங்கள் போன்ற பல முறைகளை ஒருங்கிணைந்து செய்தால், நல்ல வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்த/பின்பற்ற முடியும்.

விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் தகவல், விரைவாகவும் இணக்கமாகவும் இருக்க வேண்டுமெனில், விவசாயி ஆலோசனை குழுவினால், செயல்படுத்தக்கூடிய நிதி ஒதுக்கீடு மற்றும் விவசாய சமூகத்தினரின் பங்கேற்பை எப்போதும் இருக்கும்படி செய்வதே ஒவ்வொரு வட்டார அளவில் ஆத்மாவின் வெற்றிக்கு பின்புலமாக அமைகிறது. ஆனாலும், பதிவு செய்வதில் தாமதம் மற்றும் உள்ளே நடக்கும் மேற்பார்வை மற்றும் மதிப்பிடுதல் முறைகளில் குறைபாடுகளினால், திட்டங்கள் மற்றும் வேளாண்அறிவியல் மையத்தின், தகவல் தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்துதல் மற்றும் பின்பற்றக்கூடிய ஆராய்ச்சிகள் செயல்படுத்துவதில் சில சமயம் தேவையான அளவு இருப்பதில்லை.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015