தவேப வேளாண் இணைய தளம் :: வேளாண் தொழில் நுட்பதகவல் மையம்

மரக்கொல்லி

உழவர்களின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மரக்கொல்லியை உருவாக்கியுள்ளது.

பயன்கள்

கோயில் சுவர், மதில் சுவர், பழைய கட்டிடங்கள், கிணற்றின் பக்கச் சுவர்கள், வாய்க்கால் வரப்புகளில் வளரும் மரங்கள் மற்றும் செடிகளை அப்புறப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது.

எவ்வாறு உபயோகிப்பது ?

  • தரைமட்டத்திற்கு சற்று உயரே மரத்தின் பட்டையை 4” என்ற அளவில் நீக்க வேண்டும்.
  • மரக்கொல்லியை  தகுந்த ஒட்டுப்பசையுடன் கலந்து பட்டை நீக்கப்பட்ட இடத்தில் காய்ந்து போகும் முன் தடவ வேண்டும்.
  • பட்டை நீக்கப்பட்ட மரத்தின் பகுதியை துணியை வைத்து கட்டி, பின் மறுபடியும் மரக்கொல்லியை அதன் மேல் தடவ வேண்டும்.
tree killer

எச்சரிக்கை

  • மரக்கொல்லி அதிக நச்சுத்தன்மை கொண்டது. எனவே இதைக் கையாளுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • சூரியஒளி மற்றும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத வண்ணம் சேமித்து வைக்க வேண்டும்.
  • மரக்கொல்லி உபயோகித்த பின்னர், அந்த பாட்டிலை வேறு எந்த வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்த கூடாது. ஏனெனில், இந்த பாட்டிலை நன்கு தண்ணீர் விட்டு கழுவினாலும் கூட மரக்கொல்லியின் எஞ்சிய பொருள் அந்த பாட்டிலில் தங்கியிருக்கும்.

மரக்கொல்லி பற்றிய மேலும் பல தகவல்களுக்கு கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்

பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் நோயியல் துறை
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 641003
போன் - 0422 – 6611226

Updated on March 2015

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15