animal husbandry
கால்நடை பராமரிப்பு :: காப்பீடு முதல் பக்கம்

காப்பீடு

I. கால்நடை காப்பீட்டுத் திட்டம்

  1. கால்நடைக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிழுறைகள்
  2. செயல்படுத்தும் ஸ்தாபனங்கள்
  3. நிறைவேற்றும் வல்லுநர் (அதிகாரம்)
  4. திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்கள்
  5. காப்பீட்டு நிறவனங்களைத் தெரிவு செய்தல்
  6. கால்நடைப் பயிற்சியாளர்களின் ஊக்கம்
  7. காப்பீட்டுத் திட்டமும் கூடுதல் ஊக்கத் தொகையை ஒழுங்குபடுத்தலும்
  8. திட்டத்தின் கீழ் பயனடையும் கால்நடைகளும் அதன் தெரிவுகளும்
  9. கால்நடையின் சந்தை மதிப்பைக் கண்டுபிடித்தல்
  10. காப்பீடு செய்யப்பட்ட (விலங்கு) கால்நடையை இனங்காணுதல்
  11. காப்பீடு காலத்தில் கால்நடை உரிமையாளரை மாற்றுதல்
  12. உரிமையைத் தீர்மாணித்தல்
  13. திட்டத்தை தீவிரமாகக் கண்காணித்தல்
  14. கால்நடைப் பயிற்சியாளர்க்கு அளிக்க வேண்டிய வெகுமானம்.
  15. விளம்பரப்படுத்துதல்
  16. காப்பீட்டு முகவரிகளுக்கு கொடுக்க வேண்டிய
  17. கால்நடை காப்பீட்டுத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட 100 மாவட்டங்கள்

II. ராயல் சுந்தரம் - இந்தியாவின் முதல் தனியாரின் விலங்கு காப்பீட்டுத் திட்டம்

III. புதிய இந்தியா உயிர்நஷ்ட ஈடு ஸ்தாபனம்

  1. கால்நடை காப்பீடு
  2. கோழி காப்பீடு
  3. செம்மறி மற்றும் வெள்ளாடு காப்பீடு
  4. காமதேனு காப்பீடு திட்டம்
  5. கால்நடை காப்பீடு திட்டம்
I.கால்நடை காப்பீடு திட்டம்

            இத்திட்டம் 2005 – 06 மற்றும் 2006 – 07 ஆண்டில் 10வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 100 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கலப்பின மற்றும் அதிக பால் கறக்கக்கூடிய பசு மற்றும் எருமை மாடுகளை அவற்றின் அன்றைய சந்தை நிலவரத்தின்படி காப்பீடு செய்யப்படுகிறது. காப்பீடில் ப்ரீமீயம் தொகைக்கான மானிய உதவி 50 %. மானியத்தின் முழு தொகையும் மத்திய அரசாங்கமே பொறுப்பேற்கும்.
பயனாளிக்கு மானிய நன்மை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு 2 விலங்குகள் வரை வழங்கப்படுகிறது. கோவா தவிர அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கால்நடை அபிவிருத்தி வாரியங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சோதனை கால செயல்பாட்டினை பொருத்து இத்திட்டம் 11ஆம் ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் விதத்திலும் மற்றும் அனைத்து கால்நடைகளையும் கவரும் விதத்திலும் விரிவுபடுத்தப்படும்.
கால்நடை இறப்பில் இருந்து பண்ணையாளர்களை காப்பாற்றுவதற்காக காப்பீட்டின் நலனை நிரூபித்து அதனை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடும் இத்திட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

  1. கால்நடைக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்க்கான வழிமுறைகள்:

கால்நடை துறை தேசிய குறிப்பாக கிராமப்புற பொருளாதாரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்களிக்கின்றன. கால்நடை வளர்ப்பின் மூலம் பெறப்படும் துணை வருமானம் ஏழை மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் வழங்கும் விதமாகவும் பயிர் உற்பத்தி உறுதியில்லாத்தன்மையை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு பெரும் ஆதரவாகவும் உள்ளது.
கால்நடை வளர்ப்பை ஆதரிக்கும் வகையில் மாநில முதன்மை நிர்வாக அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கீழே விவரிக்கப்படுகின்றது.

  1. செயல்படுத்தும் ஸ்தாபனகள்:

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்பிடித்துறை மத்திய அரசின் நிதியுதவி திட்டமான “தேசிய பசுமாடு எருமை இனப்பெருக்க திட்டம் (NPCBB)”. மாநில கால்நடை அபிவிருத்தி வாரியங்கள் மூலமாக செயல்படுத்திவருகின்றது.
மாநில அமல்படுத்தும் நிறுவனங்களான மாநில கால்நடை அபிவிருத்தி வாரியம் (அ) மாநில கால்நடை பராமரிப்புத்துறை. இத்திட்டத்தை கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்பிடித்துறை செயல்படுத்தும் மத்திய அரசின் நிதியுதவி திட்டமான “தேசிய பசுமாடு மற்றும் எருமை இனப்பெருக்க திட்டத்துடன் (NPCBB)” இணைந்து கால்நடை காப்பீடு திட்டத்தை செயல்படுத்துகிறது.

  1. நிறைவேற்றும் வல்லுநர் (அதிகாரம்):

இத்திட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் மாநில கால்நடை அபிவிருத்திக்குழுவின் தலைமை நிர்வாகி (அ) கால்நடை பராமரிப்பு துறையின் இயக்குனரிடம் உள்ளது.
கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள மூத்த அதிகாரியை கொண்டு மாநில அரசின் வழிமுறைகளை பின்பற்றி கீழ்வரும் பணிகளை நிர்வகிக்க வேண்டும்.

  1. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்பிடித்துறை வழங்கிய வழிமுறைகளுக்கு ஏற்ப மத்திய நிதியை நிர்வகிக்க வேண்டும்.
  2. காப்பீட்டு நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
  4. மானிய தொகையை காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தவேண்டும்.
  5. மாவட்ட வாரியான கால்நடை பயிற்சியாளர்களின் பட்டியலை தயாரித்து அதனை பஞ்சாயத்திற்கும் காப்பீட்டு கம்பெனிக்கும் வழங்க வேண்டும்.
  6. பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே திட்டத்தை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவேண்டும்.
  7. கள ஆய்வை மேற்கொள்ளவேண்டும் மற்றும் மத்திய குழுவின் கள ஆய்விற்கும் உதவவேண்டும்.
  8. கால்நடை பயிற்சியாளர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கான நிதியை மாவட்ட கால்நடை பராமரிப்புதுறை அதிகாரிகளுக்கு வழங்கவேண்டும்.
  9. மத்திய / மாநில அரசுகளுக்கு சமர்ப்பிக்கப்படும் கண்காணிப்பு அறிக்கைகளை தயாரித்தல்.
  10. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தேவையான இதர செயல்பாடுகளை செய்ய வேண்டும்.

மாவட்ட அரசின் கால்நடை பராமரிப்பு துரையின் முதன்மை செயலர் பொறுப்பிலுள்ள அதிகாரி அல்லது மாவட்ட கால்நடை பராமரிப்பு துரையின் இயக்குனர்.
இத்திட்டம் திறம்பட செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு வசதி, மனிதவள மற்றும் தளவாட வசதிகளை தலைமை நிர்வாக அதிகாரி மாவட்ட அளவில் உள்ள அதிகாரி அவர்களுக்கு வழங்கவேண்டும்.
காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரி (அ) மாவட்ட அளவில் உள்ள அதிகாரியின் பெயர், பதவி, மற்றும் முகவரி அனைத்து மத்திய அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்படும். மேலும் இத்தகவல் மாவட்டம் மற்றும் கிராமங்களின் முக்கியமான இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும். மாவட்ட அதிகாரிகள், தேவைப்பட்டால் கால்நடை பராமரிப்பில் ஆர்வம் கொண்டுள்ள அதிகாரிகள்/நிறுவனங்கள் கொண்டுள்ள மாவட்ட குழுக்களை அமைத்து காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம். ஆர்வமுள்ள பால் பண்ணை கூட்டுறவு சங்கங்களையும் இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக சேர்த்துக்கொள்ளலாம்.

  1. திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்கள்:

சோதனை அடிப்படையில் 100 மாவட்டங்களில் 2005 – 06 மற்றும் 06 – 07 ஆண்டில் இத்திட்டம் கீழ் கலப்பின மற்றும் அதிக பால் கறக்கக்கூடிய பசு மற்றும் எருமை மாடுகளை உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டது.

  1. காப்பீடு நிறுவனங்களை தேர்ந்தெடுத்தல்:

தலைமை நிர்வாக அதிகாரி காப்பீடு நிருவனங்களின் பீரிமியம் விகிதங்கள், கொள்கை மற்றும் பாத்தியத்தை தீர்மானிக்கும் நடைமுறைகளை ஒப்பிட்டு மாநிலத்தில் பரந்த இணையம் மற்றும் சிறந்த சேவை அளிக்கும் தனியார் அல்லது பொது காப்பீடு பேச்சுவார்த்தை நடத்தி தேர்ந்தெடுப்பார். இறப்பு அல்லாத ஆபத்துகளுக்கு காப்பீடு வழங்கும் நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால் அத்தகைய கூடுதல் ஆபத்திற்காக வழங்கும் காப்பீடு திட்டத்திற்கு மாணியம் இல்லை. இதன் முழுத்தொகையையும் பயனாளியே ஏற்க வேண்டும். காப்பீடு சம்பந்தமான குறைகளை இந்தியாவின் முதன்மை காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சரிசெய்து வைக்கப்படும்.

  1. கால்நடை பயிற்சியாளர்களின் ஈடுபாடு காப்பீடு திட்டம் :

கால்நடை பயிற்சியாளர்களின் ஈடுபாடு காப்பீடு திட்டம் வெற்றிகரமாக செயல்பட கால்நடை பயிற்சியாளர்கள் ஈடுபாடு அவசியமாகிறது. அவர்கள் கால்நடைகளை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல், சந்தை விலையை நிர்ணயித்தல், அடையாளக் குறியிடுதல் மற்றும் காப்பீடு கோறும் பொழுது சான்றிதழ் வழங்குதல் ஆகிய பணிகளை செய்ய வேண்டும். திட்டத்தை பிரபலபடுத்த அவர்கள் உதவ வேண்டும். முடிந்தவரை அரசு கால்நடை பயிற்சியாளர்கள் மட்டுமே ஈடுபட்டு இருக்கலாம். அவர்கள் இல்லாத பொழுது தனியார் பயிற்சியாளர்களை பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு கால்நடை பயிற்சியாளர்களின் பட்டியல் கால்நடை பராமரிப்பு துறையின் அதிகாரியினால் தயாரிக்கப்பட்டு காப்பீடு நிறுவனம் மற்றும் பஞ்சாயத்திற்கும் வழங்கப்பட்டிருக்கும்.

  1. காப்பீட்டுத் திட்டமும் கூடுதல் ஊக்கத் தொகையை ஒழுங்குபடுத்தலும்:

கால்நடையின் அடையாளம், கால்நடை பயிற்சியாளரின் பரிசோதனை, சந்தையின் மதிப்பு, குறியீடல் மற்றும் 50 சதவிகித காப்பீடு தொகை செலுத்தியவுடன் காப்பீடு தொடங்கினால், பண்ணையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனம் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், அந்நிறுவனம் முழு பிரீமியத் தொகையை முன் கூட்டியே செலுத்திய பிறகு மட்டுமே காப்பீடு விதி உள்ளத்தை சுட்டிக்காட்ட சாத்தியம் உள்ளது. இதனை சரிசெய்ய முன் கூட்டியே குறிப்பிட்ட அளவு காப்பீட்டு தொகையை தலைமை நிர்வாக அதிகாரி காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். இத்தொகையை 3 மாத காலத்திற்குள் காப்பீடு எதிர்பார்க்கப்படுகின்ற கால்நடைகளின் பிரீமியத் தொகையில் 50 சதவிகிதத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பண்ணையாளர் 50 சதவிகித காப்பீடு தொகையை செலுத்தியவுடன் பாக்கி 50 சதவிகிதத்தை எடுத்து கொண்டு காப்பீடு வழங்க வேண்டும் என காப்பீடு நிறுவனங்கள் தங்களின் கிளை நிறுவனங்களுக்கு உத்தரவு இடவேண்டும்.

காப்பீடு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் காப்பீடு பெற்றுள்ள கால்நடையின் சந்தை மதிப்பு மற்றும் கால்நடைத்துறை அதிகாரியிடம் ஒப்புதல் பெற்ற அரசின் பங்கை குறிக்கும் மாதாந்திர அறிக்கைகளை தலைமை நிர்வாக அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும். இதன் மூலம் அக்காப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனத்திற்கு ஈடுகட்டப்படும். 3 மாத காலத்தில் காப்பீடு செய்யப்படும் விலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படும் முன் பணத்திற்குக்கான இலக்கு யதார்த்தமானதாக இருக்க வேண்டும். இத்திட்டம் மார்ச் 31, 2007 ஆம் ஆண்டில் முடிவடைவதால் நிலுவையில் உள்ள காப்பீட்டு தொகையை காப்பீடு நிறுவனம் ஏப்ரல் 2007, முதல் வாரத்திற்குள் கட்டவேண்டும்.

  1. திட்டத்தின் கீழ் பயனடையும் கால்நடைகளும் அதன் தெரிவுகளும் :

ஒரு பாலூட்டும் பருவத்தில் குறைந்தது 1500 லிட்டர் கறக்கும் பசுமாடு / எருமை மாட்டை அதன் அன்றைய சந்தை மதிப்பைக் கொண்டு காப்பீடு செய்யலாம். வேறு காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ள கால்நடைகளை இத்திட்டத்தில் காப்பீடு செய்ய முடியாது. ஒரு பண்ணையாளர் இரண்டு கால்நடைகளை அதிகபட்சமாக 3 வருட காலத்திற்கு காப்பீடு செய்யலாம். விவசாயிகள் வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளின் போது காப்பீடு நன்மை பெற வேண்டும் என்றால் கால்நடைகளை மூன்று வருடத்திற்கு காப்பீடு செய்ய வேண்டும். எனினும், ஒரு கால்நடை உரிமையாளர் சரியான காரணங்களுக்காக மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு காப்பீடு எடுக்க விரும்பினால் அவருக்கு காப்பீடு கிடைக்கும் ஆனால் அவருக்கு மானிய நீட்டிப்பு கிடைக்காது. NPCBB பதிவுகள் மற்றும் கிராம பஞ்சாயத்து கால்நடைகளை தேர்வு செய்ய காப்பீட்டு நிறுவனங்களுக்கு உதவவேண்டும்.

  1. கால்நடையின் சந்தை மதிப்பைக் கண்டுபிடித்தல்:

கால்நடையின் தற்போதைய அதிகபட்ச சந்தை விலைக்கு காப்பீடு செய்யப்படும். கால்நடை உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் காப்பீட்டு அதிகாரி மூவரும் சேர்ந்து கால்நடையின் சந்தை விலையை மதிப்பிடுவர்.

  1. காப்பீடு செய்யப்பட்ட (விலங்கு) கால்நடையை இனங்காணுதல்் :

காப்பீடு செய்யப்பட்டுள்ள கால்நடையின் அடையாளம் காப்பீடு கோறும் பொழுது தெளிவாக இருக்கவேண்டும். பாரம்பரிய முறையில் காது குறியீடல் அல்லது மைக்ரோ சில்லுகள் கொண்டு குறியிடலாம். இதற்கான செலவை காப்பீடு நிறுவனம் ஏற்றுகொள்ள வேண்டும். மேலும் கால்நடை பண்ணையாளர் அதனை பராமரிக்க வேண்டும். கால்நடை பயிற்சியாளர் கால்நடையின் காப்பீட்டை பெரும் பொழுது அடையாளக் குறியின் அவசியத்தை கால்நடை பண்ணையாளருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

  1. காலத்தில் கால்நடை உரிமையாளரை மாற்றுதல் :

காப்பீடு காலம் காலாவதியாகும் முன் கால்நடை வேறொரு பயனாளிக்கு விற்கப்பட்டால் காப்பீடும் புதிய பயனாளிக்கு மாற்றப்பட வேண்டும். இதற்காகும் செலவுகளை காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் பொழுதே முடிவு செய்திருக்க வேண்டும்.

  1. உரிமையை தீர்மானித்தல் :

காப்பீடு இறுதியில் உரிமையை தீர்மானிக்கும் முறை எளிமையாகவும் மற்றும் துரிதமானதாகவும் இருக்கவேண்டும். காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தமிடும் போது காப்பீடு முடிந்தவுடன் பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும் ஆவணங்கள் பற்றி தெளிவாக விளக்கப்பட வேண்டும். காப்பீடு கோரும் நிலையில், காப்பீட்டு தொகை வழங்க தேவையான ஆவணங்களை சமர்பித்த பின்னர் 15 நாட்களுக்குள் காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும்.

  1. திட்டத்தை தீவிரமாக கண்காணித்தல் :

தற்போதைய திட்டம் ஒரு முன்னோடி திட்டமாகும். இத்திட்டத்தின் விமர்சன ஆய்வுக்கு பின்னர் XI – ஐந்தாண்டு கால திட்டத்தில் இத்திட்டத்தை தொடருவதை பற்றிய முடிவு எடுக்கப்படும். இதன் அடிப்படையில் இத்திட்டம் பல்வேறு நிலைகளில் கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. நிதி அறிக்கைகள், காப்பீடு செய்யப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் காப்பீடு வகையின் அடிப்படையில் கண்காணிப்புகள் இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அளவில் கண்காணிப்பு மிகவும் முக்கியமானதாகும். தலைமை நிர்வாக அதிகாரி கண்காணிப்புக்கான சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

  1. கால்நடைப் பயிற்சியாளர்க்கு அளிக்க வேண்டிய வெகுமானம் :

கால்நடை அதிகாரியின் பங்கு ஆரம்பம் முதல் இறுதிவரை தேவைப்படுகின்றது. அவரது ஆர்வம் மற்றும் ஆதரவு இத்திட்டத்தின் வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளது. இதன் காரணமாக அவர்களை ஊக்குவிக்க, காப்பீடு செய்யும் பொழுது ஒரு கால்நடைக்கு ரூ. 50-உம், சான்றிதழ் வழங்கும் போது ரூ. 100- உம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு இத்தொகையை S.I.A’s க்கு வழங்கும். தலைமை நிர்வாக அதிகாரி இதனை கால்நடை மருத்துவர்களுக்கு அவர்கள் அக்காலாண்டில் காப்பீடு செய்த விலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்குவார்.

  1. விளம்பரப்படுத்துதல் :

இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடமும் அதிகாரிகளிடமும் ஏற்படுத்த வேண்டும். அதற்கென துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், சுவர் ஓவியங்கள், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பயன்படுத்தி இத்திட்டத்தின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பஞ்சாயத்துகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப்படுத்த தலைமை நிர்வாக அதிகாரி ரூ. 5000 வரை பஞ்சாயத்துகளுக்கு கொடுத்து ஊக்குவிக்கலாம்.

  1. காப்பீட்டு முகவர்களுக்கு கொடுக்க வேண்டிய சன்மானம் :

காப்பீடு நிறுவனங்கள் காப்பீட்டு முகவர்களுக்கு ப்ரீமியம் வருவாய் தொகையில் குறைந்தது 15 சதவிகித சன்மானம் வழங்க வேண்டும். காப்பீட்டு நிறுவத்துடன் ஒப்பந்தத்தில் நுழையும் போது இதற்காக உறுதி செய்யப்பட வேண்டும்.

  1. கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கையாளப்பட்டிருக்கும் 100 மாவட்டங்களில் பட்டியல் :
மாநில பெயர் . எண் மாவட்டம் மாநிலபெயர் . எண் மாவட்டம்
ஆந்திரப்பிரதேசம் 1 பிரகாசம்   51 புனே
(8) 2 கிழக்கு கோதாவரி   52 சோலாப்பூர்
  3 மேற்கு கோதாவரி   53 சாங்லி
  4 கிருஷ்ணா   54 சதாரா
  5 குண்டூர்  மணிப்பூர் 55 சேனாபேட்டை
  6 ஆந்திர மாநிலம் சித்தூர் (2) 56 உக்ருல்
  7 கரீம்நகர் மேகாலயா 57 ரி போய்
  8 நல்கொண்டா (2) 58 கிழக்கு காசி ஹில்ஸ்
அருணாசலப்பிரதேசம் 9 லோஹித் மிசோரம் 59 அய்சால்
(2) 10 லோயர் திபங்க் பள்ளத்தாக்கு (2) 60 சாம்பாய்
அசாம் 11 பர்பேடா நாகாலாந்து 61 திமாபூர்
(2) 12 ஜோற்த் (2) 62 சங்கிபோடோ
பீகார் 13 பாட்னா ஒரிசா 63 கட்டாக்
(5) 14 சமஸ்திபூர் (2) 64 ஜகத்சிங்பூர்
  15 முசாபார்பூர் பஞ்சாப் 65 அமிர்தசரஸ்
  16 ரோஹ்தாஸ் (6) 66 சங்குரூர்
  17 பெகுசறை   67 லூதியானா
சத்தீஸ்கர் 18 ராய்ப்பூர்   68 பாட்டியாலா
(2) 19 துர்க்   69 ரோபார்
குஜராத் 20 சபர்கந்தா   70 பெரோசபூர்
(6) 21 பனஸ்கந்தா ராஜஸ்தான் 71 ஜெய்ப்பூர்
  22 மகசனா (6) 72 ஆழ்வார்
  23 கேதா   73 பரத்பூர்
  24 பஞ்சமஹால்   74 உதய்பூர்
  25 சூரத்   75 சிகார்
அரியானா 26 ஜஜ்ஜார்   76 ஜுன்ஜுனு
(5) 27 ஜிந்த் சிக்கிம் 77 கிழக்கு சிக்கிம்
  28 பிவானி (2) 78 தென் சிக்கிம்
  29 ஹிசார் தமிழ்நாடு 79 சேலம்
  30 ரோஹ்தக் (5) 80 ஈரோடு
இமாசலப்பிரதேசம் 31 காங்க்ரா   81 கோயம்புத்தூர்
(2) 32 மண்டி   82 நாமக்கல்
ஜம்மு & காஷ்மீர் 33 ஜம்மு   83 வேலூர்
(2) 34 புல்வாமா திரிபுரா (1) 84 மேற்கு திரிபுரா
ஜார்க்கண்ட் 35 பாலமவு உத்தரப்பிரதேசம் 85 புலந்த்ஷல்
(2) 36 ராஞ்சி (12) 86 முசாபர்நகர்
கர்நாடகம் 37 பெங்களூர் கிராம   87 அலிகார்
(4) 38 கோலார்   88 புதான்
  39 மாண்டியா   89 ஆக்ரா
  40 பெங்களூர் நகர   90 பாராபங்கி
கேரளா 41 பாலக்காடு   91 மொராதாபாத்
(2) 42 ஆலப்புழா   92 மீரட்
மத்தியப்பிரதேசம் 43 மொரேனா உத்தரப் பிரதேசம் 93 அலகாபாத்
(6) 44 தார்   94 காஸியாபாத்
  45 பின்த்   95 கோரக்பூர்
  46 பிடின்ஷா   96 ஆசம்கர்
  47 ரத்லம் உத்தராஞ்சல் 97 ஹரித்வார்
  48 ஷாஜாபூர் (2) 98 உதம் சிங் நகர்
மகாராஷ்டிரா 49 அகமத் நகர் மேற்குவங்கம் 99 நாடியா
(6) 50 கோலாப்பூர் (2) 100 24 பர்கானாஸ் (N),

II. கால்நடை காப்பீடு
            ராயல் சுந்தரம், இந்தியாவின் முதல் தனியார் ஆயுள் அல்லாத காப்பீட்டு நிறுவனம். இதற்கு சுந்தரம் ஃபைனான்ஸ் இந்தியாவின் முன்னணி நிதி சேவைகள் நிறுவனம் மற்றும் ராயல் & சன்ஸ் கூட்டணி, இங்கிலாந்து ஆகியவற்றின் ஆதரவு உள்ளது. ராயல் சுந்தரம் தரமான காப்பீடு தொகுப்புகளை கிராமப்புற மற்றும் சமூக பிரிவுகளுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்தியாவின் முதல் விருப்பத்திற்குரிய பொது காப்பீடு நிறுவனமாக செயல்பட்டுவருகின்றது. ராயல் சுந்தரத்தின் “கால்நடை கேடயம்” திட்டம் பண்ணையாளர்களை கால்நடை இறப்பின் மூலம் ஏற்படும் நிதி இழப்பில் இருந்து பாதுகாக்கிறது.

கால்நடை கேடயம் நன்மைகள்:
            இத்திட்டத்தின் நோய், விபத்து (தீ, மின்னல், வெள்ளம், புயல், வேலை நிறுத்தம், கலவர மற்றும் சிவில் கிளர்சிகள் உட்பட) காப்பீடு காலத்தில் நிகழும் மரணம் முதலியவற்றிக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.

காப்பீட்டின் கீழ் உள்ள விலங்குகள்:
பசுமாடு, எருமை, எருது, ஒட்டகம், செம்மறி ஆடு, வெள்ளாடு, குதிரை, கோவேறு கழுதை மற்றும் மட்டக்குதிரை.

மதிப்பீடு மற்றும் தொகை காப்பீடு:
            கால்நடை சான்றிதழ் அல்லது கொள்முதல் குழுவின் அறிவிப்பு படி கால்நடையின் அடையாளம் மற்றும் மதிப்பீடு இருக்கும். காது – குறிகளை நிறுவனம் வழங்கும்.

நன்மைகள்:
காப்பீடு (அ) நோய் முன்னர் உள்ள சந்தை மதிப்பு தொகையில் எது குறைவாக உள்ளதோ அவற்றின் அடிப்படையில் காப்பீடு கோரிக்கைகள் வழங்கப்படும்.

ப்ரீமியம்:
4% மலிவு கட்டண ப்ரீமியம்

III. கால்நடை பராமரிப்புத்துறைகளில் காப்பீடு திட்டங்கள்:
            நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி மூலம் தொடர்ந்து விவசாயிகள் நலனுக்காக வழங்கப்படுகின்ற விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பகுதிகளை உள்ளடக்கிய காப்பீடு திட்டங்கள்.

  1. கால்நடை காப்பீடு:

இத்திட்டம் உள்நாட்டு, வெளிநாட்டு (அ) கலப்பின கறவை மாடுகள் மற்றும் எருமைகள், கன்றுகள்/பசுமாடுகள் மற்றும் வீரியமான எருதுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பாலிசியின் கீழ் காப்பீடு தொகை விலங்கின் சந்தை மதிப்பை ஒத்திருக்கும். வருடத்திற்கான அடிப்படை ப்ரீமியம் வீதம் காப்பீடு தொகையில் 4% ஆகும். இத்திட்டத்தில் நீண்ட கால தள்ளுபடிகள் கொண்ட நீண்ட கால் காப்பீடுகளும் உள்ளது. விபத்துகள் மற்றும் நோய்கள் காரணமாக மரணம் ஏற்பட்டால் இத்திட்டத்தின் ஈட்டுறுதி கிடைக்கும்.

  1. கோழி காப்புறுதி:

கலப்பின மற்றும் அயல்நாட்டு மற்றும் குஞ்சுபொரிக்கும் கோழிகளை கவரும் ஒரு விரிவான காப்பீட்டுத்திட்டம். ஒரு பண்ணையில் உள்ள எல்லா பறவைகளும் காப்பீடு செய்யப்பட்டிருக்கவேண்டும். இறைச்சி மற்றும் முட்டையிடும் கோழிகளுக்கான காப்பீடு தொகை (அ) உச்ச மதிப்பு ரூ. 45 மற்றும் ரூ. 75 ஆகும். காப்பீடு காலத்தில் விபத்துகள் மற்றும் நோய் காரணமாக பறவைகளின் இறப்பு ஏற்பட்டால் இத்திட்டத்தில் ஈட்டுறுதி கிடைக்கும்.

  1. செம்மறி மற்றும் வெள்ளாடு காப்பீடு:

அனைத்து உள்நாட்டு, கலப்பின மற்றும் அயல்நாட்டு செம்மறி மற்றும் வெள்ளாடுகளை இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யலாம். காப்பீடு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நோய்கள் காரணமாக மரணம் ஏற்பட்டால் இத்திட்டத்தில் ஈட்டுறுதி கிடைக்கும். செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளின் சந்தை மதிப்பு இனம், இடம், மற்றும் நேரத்தின் அடிப்படையில் மாறிக்கொண்டே இருக்கும். கால்நடை அதிகாரியின் சான்றிதழ் மதிப்பீடு இருக்கும்.

  1. கால்நடை காப்பீட்டு திட்டம்:

கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இந்திய அரசால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் கலப்பினம் மற்றும் அதிக பால் கறக்கும் பசு மற்றும் எருமை மாடுகளை அவற்றின் பண்ணையாளர், கால்நடை அதிகாரி மற்றும் காப்பீட்டு முகவர்கள் இணைந்து குறித்த சந்தை நிலவரப்படி காப்பீடு செய்யப்படுகிறது.
இதில் 50% காப்பீடு ப்ரீமியம் மானியமாக வழங்கப்படுகின்றது. மானியத்தின் முழு செலவு மத்திய அரசால் ஏற்றுகொள்ளப்படுகின்றது. பயனாளிக்கு மானிய நன்மை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு 2 விலங்குகள் வரை வழங்கப்படுகின்றது.
15௦௦ லிட்டர் கறக்கும் பசு மற்றும் எருமைகளை இத்திட்டத்தில் அவற்றின் சந்தை மதிப்பிற்கிணங்க காப்பீடு செய்யலாம். வேறு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விலங்குகளை இத்திட்டத்தில் காப்பீடு செய்ய இயலாது. இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பயனாளிகளை கிராம பஞ்சாயத்துகள் அடையாளம் காட்டவேண்டும்.

  1. காமதேனு காப்பீட்டு திட்டம்:

மாநில கால்நடை தொகை பெரும்பாலும் கலப்பின என்பதால் இவை அதிவிரைவாக நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் இழப்பைச் சந்திக்கின்றனர். இதனை ஈடுசெய்யும் வகையில் கேரள அரசின் கால்நடை பராமரிப்புத்துறை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியும் இணைந்து அரசானை எண்: 123/AD தேதி 17/6/1998 -யின் கீழ் ஓர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. சலுகை கட்டண காப்பீடு ப்ரீமியத்தின் விகிதம் 6.6% ஆகும். இத்திட்டம் மாநிலத்தின் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படுகின்றது.

(ஆதாரம்: http://dahd.nic.in/Isinsurancenew/html)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16