| 
                
                 பதப்படுத்தப்பட்ட மற்றும் புகைத்த சிக்கன் 
                                  விஞ்ஞானிகள் ஈடுபாடு: முனைவர்.B. சந்திரசேகர் மற்றும் முனைவர் K.T. ராதாகிருஷ்ணன்  
                                  தயாரிப்பு தொழில்நுட்பம் : 
                                  முதிர்ந்த இறைச்சிக்கோழிகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் புகைத்த சிக்கன் தயாரிக்கபயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்த பயன்படுத்தப்படும்கலவையில் உப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் நைட்ரேட் அடங்கியுள்ளது. இவற்றை இறந்த, தோல் உரித்த கோழியின் மேல் நன்கு தேய்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறந்த கோழியை குளிர் சாதனப்பெட்டியில் 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இந்த பதப்படுத்தப்பட்ட கோழியை சூடான, உப்பு அகற்றப்படாத நீரில்1 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இறைச்சிக்கட்டை, 55°C - 60°C ல் 12 மணி நேரம் புகைமூட்டம் செய்ய வேண்டும். பின்னர் இதை குளிர்சாதனப்பெட்டியின் வெப்பநிலையில் 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.  
                                  பொருள் வழங்கும் முறை : 
                                   பதப்படுத்தப்பட்ட மற்றும் புகை மூட்டிய சிக்கனை வெவ்வேறு முட்டுகளில் செதுக்கி வைக்க வேண்டும்.இந்த முட்டுகளை மேலும் வெட்டி துண்டாக்கி பொரித்த பின்னர் பரிமாறலாம். 
                                  பொருளின் பயன்பாடு : 
                                  உற்பத்தி திறனற்ற கோழிகளை சந்தைப்படுத்துவதினால் பெரிய வணிக கோழி விவசாயிகள். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்தப்பிரச்சினைக்குத்தீர்வு காணவே கோழி இறைச்சி பதப்படுத்தப்பட்டு மற்றும் புகைமூட்டம் செய்து அதன் வெப்புக்காலத்தை அதிகரிக்கின்றனர். இந்த செயல்முறை எளிதாகக் கையாளவும் மற்றும் தயாரிப்பு கூடத்திலிருந்து நுகர்வோர் பகுதிக்கு எளிமையாகப் போக்குவரத்து செய்யவும் வழிவகுக்கிறது. இந்தப்பொருட்கள் உற்பத்தித் திறனற்ற கோழிகளின் மதிப்பை மேலும் கூட்ட பெரிதும் பயனாக உள்ளது. 
                                  மேலும் விவரங்களுக்கு : 
                 மாமிச அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, 
                  சென்னை கால்நடைக்கல்லூரி, 
                  சென்னை -600 007.  |