கால்நடை பராமரிப்பு :: ஒருங்கிணைந்த பண்ணை முறை முதல் பக்கம்

ஒருங்கிணைந்த மீன் உடனான வாத்து வளர்ப்பு

மீனுடன் வாத்து வளர்ப்பு பண்ணையின் பயன்கள்

  • நீர் நிறைந்த குளங்களின் மேறபரப்பை முழுவதும் பயன்படுத்தி வாத்து வளர்க்க முடியும்.
  • மீன் வளர்க்கும் குளங்களின் சூழலில் வாத்து வளர்ப்பது ஒரு சிறந்த ஒட்டுண்ணிகள் மற்றும் நோய் தடுப்பாக வாத்து வளர்ப்பிற்கு அமைகிறது.
  • விரலளவு வளர்ந்துள்ள மீன்குஞ்சுகளை உணவாகவும் மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்கிறது.
  • மீன் குளங்களில் வாத்துக்களை வளர்ப்பதால் வாத்துக்களுக்கான புரதச்சத்து உணவு தேவை 2-3 % குறைகிறது.
duck
  • வாத்துகளின் கழிவு நேரடியாக நீரில் கலப்பதால் உயிரினங்களின் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நீரில் கலக்கின்றன.
  • நாள்தோறும் ஒரு வாத்தின் கழிவு ( 20 – 30 கிராம்/வாத்து)  மூலம் மீனிற்கு உணவாக அல்லது உரமாக இருப்பதால் அதிக அளவு மீன் உற்பத்தி செய்ய முடியும்.
  • வாத்து கழிவு குளத்தில் குவியலாக இல்லாமல் ஒரே சீரான அளவில் உரமாக இடப்படுகிறது.
  • வாத்துகள் குளத்தினடியில் இருக்கும் நுண்ணுயிரிகளை தேடி தோண்டி எடுப்பதினால், மண் ஊட்டச்சத்து கூறுகள் நீரில் பரவும் மற்றும் மிதவை உயிரிகள் நீரில் உற்பத்தி அதிகரிக்கச் செய்யும்.
  • எடை அதிகரிப்பிற்கான வாத்தின் உணவு ஓடைகளில் சிந்துவதை மீன் உணவாக எடுத்துக் கொள்ள முடியும்.
  • வாத்துகள் குளத்தில் நீந்துதல், துரத்துதல் போன்றவைகளால் குளத்தில் காற்றோட்ட வசதி ஏற்படுத்துகிறது.
  • வாத்துகள் வளர்க்கப்படும் மீன் குளங்களில் 3.5% சுத்தமான சூழல் அதிகரிக்கும் என அறியப்படுகிறது.
  • வாத்தின் எச்சம் மற்றும் வாத்தின் மீதமான தீவனம் இவற்றின் மூலம் 37.5 கி.கி/ஹெக்டர் என்ற அளவில் மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
  • வாத்துகள் நீர் வாழ் தாவரங்களை சோதித்து வைத்துக் கொள்ளும்.
  • கூடுதல் நிலம் வாத்து வளர்ப்பு நடவடிக்கைளுக்கு தேவையில்லை
  • ஒரே நேரத்தில் தண்ணீர் பகுதியில் மீன், வாத்து முட்டை மற்றும் இறைச்சி மூலம் அதிக உற்பத்தி செய்ய முடிகிறது.
  • இதில் குறைந்த முதலீடு மூலம் அதிக லாபம் என்பது உறுதி.

மீ்ன் குஞ்சுகளை இருப்பு வைத்தல்

  • குளத்தில் உள்ள நீரை முறையாக நஞ்சுகளை நீக்கிய பிறகு மீன்குஞ்சுகளை இருப்பு வைக்க வேண்டும்.
  • ஒரு ஹெக்டர் பரப்பளவு கொண்ட குளத்தில் 6000 எண்ணிக்கையிலான பல்வேறு வகை மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கலாம். அதில் சிறப்பினமான மேற்பரப்பு உண்பிகள் 40%,  20% இடைநிலை உண்பிகள், 30% கடைநிலை உண்பிகள் மற்றும் 10-20% களை உண்பிகள் என்று விடலாம்.
  • அதிகளவில் இந்திய கலப்பின வகைகளாக சிறப்பினமான 40% மேற்பரப்பு உண்பிகள்,  30% இடைநிலை உண்பிகள், 30% கடைநிலை உண்பிகள் என்று கலந்துவிடப்படுகிறது.
  • வடக்கு மற்றும் வடஇந்தியாவின் மேற்கு மாநிலங்களில், குளங்களில் மீன்குஞ்சுகளை மார்ச் மாதத்தில் இருப்பு வைத்து அக்டோபர்நவம்பர் மாதங்களில் அறுவடை செய்கின்றனர். கடுமையான குளிர் மீன் வளர்ச்சியை பாதிக்கும்.
  • தெற்கில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மிதமான குளிர்காலங்காலத்தில் ஜீன்செப்டம்பர் மாதங்களில் இருப்பு வைத்து மீன்குஞ்சுகள் 12 மாதங்கள் வளர்ந்த பிறகு அறுவடை செய்வர்.

வாத்து எச்சத்தை உரமாக பயன்படுத்துதல்

  • வாத்துகள் குளம் முழுக்க காலை 9 மணி முதல் 5 மணி வரை அவற்றின் எச்சத்தை குளத்தில் இடுகின்றது. இது தன்னிச்சையாக குளத்தில் உரமாக மாறுகிறது.
  • இரவில் வாத்து கொட்டகையில் இடப்படும் கழிவுகளை சேகரித்து காலையில் அவற்றை குளத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • நாள் ஒன்றுக்கு ஒரு வாத்து 125 – 150 கிராம் எச்சம் இடுகிறது.
  • ஒரு ஹெக்டருக்கு 200 – 300 வாத்துக்களை வளர்ப்பதனால் அவற்றின் மூலம் 10,000 – 15,000 கிலோ எச்சம் கிடைக்கும். அவற்றை ஒரு ஆண்டிற்கு மறுசுழற்சி முறையில் குளத்திற்கு பயன்படுத்தலாம்.
  • வாத்தின் எச்சத்தில் 81% ஈரப்பதம், 0.91% நைட்ரஜன் மற்றும் 0.38% பாஸ்பேட் உலர் அடிப்படையில் உள்ளது.

வாத்து வளர்ப்பு முறைகள்
வாத்து பண்ணைகள் பின்வரும் மூன்று வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதிக அளவிலான வாத்துக்களை திறந்த வெளி தண்ணீரில் வளர்த்தல்

  • இந்த முறை வாத்து வளர்ப்பு மேய்ச்சல் வகையைச் சார்ந்தது.
  • இந்த மேய்ச்சல் முறையில் சராசரியாக 1000 வாத்துக்களை குழுக்களாக வளர்க்கலாம்.
  • பகல் நேரத்தில் ஏரிகள் மற்றும் நீாத்தேக்கங்கள் போன்ற பெரிய தண்ணீர் பரப்பில் மேய்யக்கலாம். ஆனால் இரவில் பட்டியில் அடைக்க வேண்டும்.
  • இந்த பெரிய நீர் நிலைகளில் மீன் உற்பத்தி மிகவும் சாத்தியமாகும்.

மீன் குளம் அருகில் வேலியிட்ட கொட்டகையில் வாத்து வளர்ப்பு

  • ஒரு மையப்படுத்தப்பட்ட வாத்து வளர்ப்பு கொட்டகை சிமெண்ட் தளம்    மற்றும் உலர்ந்த ஈரப்பதம் தேங்காதவாறு மீன் குளம் அருகில் அமைக்க வேண்டும்.
  • சராசரியாக 4-6 வாத்துகள் / சதுர மீட்டருக்கு என்ற அளவில் மேற்குறிப்பிட்ட கொட்டகையில் வளர்க்கலாம்.
  • உலர்ந்த மற்றும் ஈரமான ஓட்டம் கொட்டகையை நாள் ஒன்றுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். வாத்து கொட்டகையை சுத்தம் செய்த நீரை குளத்தில் கலக்குமாறு செய்ய வேண்டும்.

மீன் குளத்தில் வாத்து வளர்ப்பு

  • இது ஒரு பொதுவான வாத்து வளர்ப்பு முறையாகும்.
  • குளத்தின் வரப்பில் ஈரப்பதம் கொண்ட பாதியளவு வலையால் மூடப்பட்ட கொட்டகை அமைக்க வேண்டும்.
  • வேலியை 40 -50 செ.மீ நீர் நிலைகளுக்கு மேழும் கீழுமாக அமைக்க வேண்டும். மீன் நுழைந்து வெளிமாறும் ஆனால் வாத்து வலையிலிருந்து வெளியேற முடியாதவாறும் இருக்க வேண்டும்.

வளர்ப்பிற்காக வாத்து தேர்ந்தெடுத்தல்

  • வாத்துக்களை தோந்தெடுத்து வளர்க்க வேண்டும். அனைத்துவகையான வீட்டு வளர்ப்பு வாத்துகளிலும் உற்பத்தியிருப்பதில்லை.
  • இந்தியாவின் முக்கிய வாத்து வளர்ப்பு இனங்கள் சைல்ஹெட் மீட் மற்றும் நாகேஸ்வரி.
  • ஹார்டி என்ற இரகம் இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு இனமாக  கண்டறியப்படுகிறது, இது காக்கி கேம்பெல் போன்ற கவர்ச்சியான நல்ல அடுக்குகள் இல்லையென்றாலும் மேம்பட்ட இனமாக அறியப்படுகிறது.
  • ஒரு ஹெக்டர் மீன் குளத்திற்கான  உரத்திற்கு தேவையான அளவு எண்ணிக்கையில் வாத்துகளை வளர்க்க வேண்டும்.
  • ஒரு ஹெக்டர் மீன் வளர்ப்பு குளத்தின் உரத்தேவைக்கு 200 -300 வாத்துகளை வளர்த்தால் போதுமானதாக கண்டறியப்படுகிறது.
  • 2-4 மாதங்களான வாத்துக்குஞ்சுகளுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பான தடுப்பு மருந்துகளை கொடுத்த பிறகே அவற்றை மீன் குளத்தில் விடவேண்டும்.

தீவனம்

  • வாத்துகள் குளத்திலிருந்து இயற்கை உணவுகளை தேடிபிடித்து உண்ணும். ஆனால் அவை     மட்டுமே அவற்றின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது.
  • எதாவதொரு சமச்சீரான கோழிதீவனம் மற்றும் அரிசி தவிடு கலந்த கலவை 1:2 என்ற விகிதத்தில் 100கிராம்/பறவை/நாள் என்ற அளவில் தர வேண்டும்.
  • இத்தீவனத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை அளிக்க வேண்டும். ஒரு முறை காலையும், இரண்டாவது முறை மாலையிலும் அளிக்க வேண்டும்.
  • தீவனத்தை குளத்தின் அருகில் அல்லது கொட்டகையில் இட வேண்டும். சிந்தம் தீவனத்தை பின்னர் குளத்தில் இட வேண்டும்.
  • தீவனத்துடன் போதுமான அளவு தண்ணீரை ஒரு கொள்கலன்களில் வாத்தின் அலகு மூழ்கும்படி ஆழ்ந்த  கொள்கலனில் வழங்கப்பட வேண்டும்.
  • வாத்துகள் தண்ணீர் இல்லாமல் சாப்பிடாது. வாத்துகள் பூஞ்சாணத் தாக்குதல் மற்றும் கலப்பட உணவால் பாதிக்கப்படுகின்றன. அதனால் பூசணம்பிடித்த உணவுகளை நீண்ட நேரம் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • கடலை பிண்ணாக்கு மற்றும் சோளத்தில் ஆஸ்பரிஜில்லஸ் ப்ளேவஸ் கரும்பூஞ்சாண தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே இதனை தீவனத்திலிருந்து நீக்க வேண்டும்.

முட்டை

  • வாத்துகள் 24 வாரங்கள் வளர்ந்த பிறகு முட்டைகள் வைக்கத் தொடங்கும். அதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து முட்டைகள் இடுகின்றன.
  • வாத்துகள் இரவில் மட்டுமே முட்டைகளை இடுகின்றன. வாத்து கொட்டகை மூலைகளில் வைக்கோல் வைத்து முட்டைகள் இடுவதற்கு பராமரிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நாள் காலையிலும் வாத்துகள் கொட்டகையிலிருந்து வெளிவந்த பிறகு முட்டைகளை சேகரிக்க வேண்டும்.

உடல் நலம்

  • கோழியுடன் ஒப்பிடும் போது வாத்துகள் சில நோய்களுக்கு உள்ளாகின்றன.
  • உள்ளூர் ரக வாத்துகள் மற்ற ரக வாத்துகளை விட நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவையாக உள்ளன.
  • முறையான சுகாதார மற்றும் சுகாதார பாதுகாப்பு கோழி போன்று வாத்திற்கும் அவசியமாகிறது.
  • வாத்தை தாக்கும்  தொற்று நோய்களாக வாத்து வைரஸ், ஹெபடைடிஸ், வாத்து காலரா, அடித்தளகட்டை நோய் மேலும் பல உள்ளன.
  • வாத்துகள் வாத்து பிளேக் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க நோய் தடுப்பு செய்திருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட பறவைகளை அவற்றின் சத்தம் மற்றும் தினமும் தீவனம் உட்கொள்வத, கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் கசிவதுபோன்றவற்றை கவனித்து அப்பறவையை தனிமைப்படுத்த வேண்டும்.
  • நோய்வாய்ப்பட்ட வாத்தை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். குளத்திற்கு செல்ல அனுமதிக்க கூடாது. மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

அறுவடை

  • உள்ளூர் சந்தையில் மீன் தேவையை கருத்தில் கொண்டு பாதியளவு மீனை அறுவடை செய்ய வேண்டும்.
  • பகுதி அறுவடைக்கு பிறகு, குளத்தில் அதே இனங்கள் மற்றும் அதே எண்ணிக்கை அளவு மீன்குஞ்சுகளை விட வேண்டும்.
  • இறுதியில் 12 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்ய வேண்டும்.
  • பொதுவாக 6 மற்றும் 3 சிறப்பினங்களை வளர்ப்பதில் மீன் உற்பத்தி வீதம் 3500-4000 கிலோ/ஹெக்டர்/ஆண்டு மற்றும் 2000 -3000 கிலோ/ஹெக்டர்/ஆண்டு என்ற அளவில் இருக்கும்.
  • முட்டைகள் ஒவ்வொரு காலையிலும் சேகரிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வாத்து சந்தையில் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். ஏறத்தாழ 18,000 – 18,500 முட்டைகள் மற்றும் 500 – 600 கிலோ வாத்து இறைச்சி பெறலாம்.

Updated on June 2014

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15