தீவன உபகரணங்கள்  
              
                - இது கோழிகளுக்கு தீவனம் அளிக்க பயன்படுத்தபடுகிறது. 
 
                - இது வெவ்வேறு அளவுகளில் மற்றும் மாடல்களில் பழைய வகையில் அல்லது பாதி தானியங்கி வகையில் இரும்பு அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கும். 
 
                - தீவனத் தொட்டிகளின் வகைகள், 
 
               
              1. தானியங்கி தீவன தொட்டிகள்  
              
                - இவைகள் கோழிக்கொட்டகையின் மொத்த நீளத்திற்கு தள்ளி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். 
 
                - மின்சாரத்தில் இவை இயங்ககூடியது. இதன் உயரம் கோழிகளின் வயதுக்கேற்ப மாற்றி கொள்ளலாம். 
 
               
              2. நீளமான தீவனத்தொட்டி  
              
                - வெவ்வெறு நீளங்களில் தடுப்புகள் கொண்டவையாக கிடைக்கிறது. 
 
                - உயரத்தை மாற்றிக்கொள்ள வசதிகள் உள்ளன. 
 
                - இவைகள் பொதுவாக துருபிடிக்காத  இரும்பினால் தயாரிக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் மரம் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும். 
 
                - தீவனத்தொட்டிகள் ஆடாமல் இருக்கவும் உயரத்தை மாற்றிக்கொள்ளவும் தேவையான வசதிகள் உள்ளன. 
 
                - கோழிகள் தீவனத்தொட்டியின் இருபுறங்களிலும் இருந்து தீவன எடுக்கும். 
 
                - மொத்த தீவன இடம்      = 2 X தீவனத்தொட்டியின் நீளம். 
 
                - நீளமான தீவனத்தொட்டிகள்     = ( 2 X தீவனத்தொட்டியின் நீளம்) ÷ தீவனத்தொட்டியின் அளவு  ( செ.மீ.) 
 
               
              3. வட்ட தீவனத்தொட்டி  
              
                - இவை பாதி தானியங்கி தீவனத்தொட்டிகள் ஆகும் . இதிலுள்ள உருளை போன்ற அமைப்பில் 5 -7 கிலோ வரை போட்டு வைக்கலாம். 
 
                - தீவனம் மெதுவாக புவிஈர்ப்பு விசையால் தீவனத்தொட்டிக்கு கீழே செல்லும். 
 
                - இதில் தடுப்புகளை அமைத்து தீவன விரயத்தை தடுக்கலாம். 
 
                - இவைகள் பிளாஸ்டிகினால் தயாரிக்கப்படுகிறது.மேலும் இவைகள் கூரையிலிருந்து அல்லது தனியாக குழாய் அமைத்து அதில் இருந்து தொங்கவிடப்படுகிறது. 
 
                - இவைகள் தொங்கும் தீவனத்தொட்டிகள் எனவும் அழைக்கப்படுகிறது. 
 
                - இவைகள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இந்த தீவனத்தொட்டிகள் நிறைய தீவனம் ஒரு முறை இட்டால் ஏறக்குறைய 4- 7 நாட்கள் வரை கோழிகளின் வயது மற்றும் தீவனம் சாப்பிடும் எண்ணிக்கை பொறுத்து போதுமான இருக்கும். 
 
                - இதன் உயரத்தை சின்ன வசதி மூலம்  சுலபமாக மாற்றி கொள்ளலாம். 
 
                - இவைகள் வெவ்வேறு வண்ணங்ளில் பளிச்சென்று ( நீலம் மற்றும் சிவப்பு ) இருப்பதால் முட்டைகோழிகள் மற்றும் இளங்குஞ்சுகள் ஈர்க்கப்பட்டு தீவனம் உட்கொள்ளுவது எளிதாக  நடைபெறுகிறது. 
 
                - தொங்கும் தீவனத்தொட்டிகளின் எண்ணிக்கை = 1.3* ( சுற்றளவு ÷ தீவன உண்ணும் இடளவு ) செ.மீ.ல் 
 
                - நீளவாக்கு தீவனத்தொட்டிகளை விட தொங்கும் தீவனத்தொட்டிகளில் 30 சதவீதம் அதிகம் கோழிகள் தீவனம் உண்ணும். 
 
               
              4. கிளிஞ்சல் பெட்டி  
                முட்டைகோழிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்காக கிளிஞ்சல் வைப்பதற்கு இவைகள் உபயோகப்படுத்தபடுகிறது.  | 
              |