வான்கோழித் தீவனப்  பராமரிப்பு 
          வான்கோழிகளுக்குச்  சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெற முடியும்.  வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவிகிதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது.  ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு  70 கிராம் எடைக்கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள  முட்டைகள்) நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கப்படவேண்டும். அதேபோல்  45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுள்ள குஞ்சு 84 நாடகளுக்குள் (12 வார வயதிற்குள்)  2.5-3.0 கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ள தீவனம் அளிக்கப்படவேண்டும்.  வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ் வருமாறு. 
          
            
              - தண்ணீர்
 
              - மாவுப்பொருள்
 
              - பரதம்
 
              - கொழுப்பு
 
              - நார்ப்பொருள்
 
              - தாது       உப்புக்கள்
 
              - உயிர்ச்சத்துக்கள்       (வைட்டமின்கள்)
 
             
           
          வான்கோழிக் குஞ்சுகளுக்கான  தீவனப் பராமரிப்பு  
            ஆண்,  பெட்டை வான்கோழிகளுக்கான சத்துக்கள் தேவை. வேறுபடுவதால் இவைகளை குஞ்சு பொரித்தவுடன்  தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது நல்லது. வான்கோழிகளுக்குத் தீவனம் தயாரிக்க சாதாரணமாக  மற்றக் கோழிகளுக்குப் பயன்படுத்தப்படும் தீவன மூலப் பொருட்களையே பயன்படுத்தலாம்.  குஞ்சு பொரித்தவுடன் எவ்வளவு விரைவில் தீவனம் அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வான்கோழக்  குஞ்சுகளக்குத் தீவனத்தைப் பிரகாசமான வெளிச்சத்தில் வைக்கவேண்டும். சில சமயங்களில்  தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் பளிச்சென்று பீங்கான் குண்டுகளைப் போடுவதால்  தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளக் குஞ்சுகள் தூண்டப்படுகின்றன. முதல் இரண்டு நாட்களுக்குத்  தீவனத்தைச் சுத்தமான பழைய செய்தித்தாள் மேல் தூவிவிடலாம். ஆரம்ப நாட்களில் தீவனத்தைப்  பாத்திரத்தில் நிறையக் குவித்து வைத்து, தீவனம் உட்கொள்ளத் தூண்ட வேண்டும். பொதுவாக  குஞ்ச பருவத்தில் இறப்பு விகிதம் 10 விழுக்காடு வரை இருக்கும். குஞ்சுப் பொரித்த முதல்  நாளில் இருந்து கால்சியம், பி வைட்டமின் மருந்தினைத் தண்ணீரில் கலந்து இரண்டு மாதங்கள்  வரைத் தவறாமல் கொடுக்கவேண்டும். நாம் சொந்தமாகத் தீவனம் தயாரிக்கும்  போது உள்ளூர் சந்தையில் கிடைக்கும் விலை மலிவான  தீவனப்பொருட்களைக் கொண்டு குறைந்த விலையில் தீவனம் தயார் செய்து கொள்ளலாம். 
            
            குஞ்சுத்தீவனம் 
          வான்கோழிக்  குஞ்சுகளுக்கு முதல் நான்கு வாரங்களுக்கு 28 விழுக்காடு புரதமும், 2800 கிலொ கலோரிகள்  (1 கிலோவிற்கு) எரிசக்தி அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும். இத்தீவனத்தைத் தயாரிக்கும்  முறைபற்றி இங்குக் காண்போம். 
          
            
              
                மக்காச்சோளம்    / வெள்ளைச் சோம்பு / கம்பு  | 
                -  | 
                40    பங்கு  | 
               
              
                சோயாபிண்ணாக்கு    / கடலைப் பிண்ணாக்கு  | 
                -  | 
                38    பங்கு  | 
               
              
                மீன்    தூள்  | 
                -  | 
                9    பங்கு  | 
               
              
                தவிடு    வகைகள்  | 
                -  | 
                10    பங்கு  | 
               
              
                எண்ணெய்  | 
                -  | 
                1    பங்கு  | 
               
              
                தாது    உப்பு  | 
                -  | 
                2    பங்கு  | 
               
                       
           
          இத்துடன்  தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள (வைட்டமின் ஏ, எ 25 கிராம் மற்றும் பி வைட்டமின் 50  கிராம்) கலந்து தரவேண்டும். 
          நான்கு  முதல் எட்டு வாரங்களுக்கு 26 விழுக்காகடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (கிலோவிற்கு)  எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல் வேண்டும். இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைப்பற்றி  இங்கு காண்போம். 
            
          
            
              
                மக்காச்சோளம்    / வெள்ளைச் சோம்பு / கம்பு  | 
                -  | 
                45பங்கு  | 
               
              
                சோயாபிண்ணாக்கு    / கடலைப் பிண்ணாக்கு  | 
                -  | 
                30    பங்கு  | 
               
              
                மீன்    தூள்  | 
                -  | 
                10    பங்கு  | 
               
              
                தவிடு    வகைகள்  | 
                -  | 
                10    பங்கு  | 
               
              
                எண்ணெய்  | 
                -  | 
                2    பங்கு  | 
               
              
                தாது    உப்பு  | 
                -  | 
                3    பங்கு  | 
               
                       
           
          இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள்  (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும். 
               
            வளரும் கோழிகளுக்கான  தீவனப் பராமரிப்பு 
            வளரும் பருவத்தில் வயது அதிகமாகும் சமயத்தில்  புரதச் சத்தின் தேவைப் படிப்படியாகக் குறைகிறது. அதே சமயத்தில் எரிசக்தியின் தேவை படிப்படியாகக்  கூடுகிறது. எனவே அந்தந்த வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்ற சமச்சீர் தீவனம் அளிப்பது அவசியமாகிறது.  வளரும் வான்கோழிகளுக்கான தீவனத்தை 8 முதல் 14 வாரங்கள் வரை அளிக்கவேண்டும். இத்தருணத்தில்  22 விழுக்காடு புரதமும் 3000 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய  தீவனம் அளித்தல்வேண்டும். 
   
  தீவனக்கலவை 
          
            
              
                 
                  மக்காச்சோளம்    / வெள்ளைச் சோம்பு / கம்பு  | 
                -  | 
                45    பங்கு  | 
               
              
                சோயாபிண்ணாக்கு    / கடலைப் பிண்ணாக்கு  | 
                -  | 
                31    பங்கு  | 
               
              
                மீன்    தூள்  | 
                -  | 
                10    பங்கு  | 
               
              
                தவிடு    வகைகள்  | 
                -  | 
                10    பங்கு  | 
               
              
                எண்ணெய்  | 
                -  | 
                1    பங்கு  | 
               
              
                தாது    உப்பு  | 
                -  | 
                3    பங்கு  | 
               
                       
           
          இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள்  (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும். 
          முட்டைக்காக வளர்க்கப்படும்  இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு 
            இத்தீவனமானது  14 முதல் 28 வார வான்கோழிகளுக்கு அளிக்கப்படவேண்டும். இத்தீவனத்தில் 14 விழுக்காடு  புரதமும் 3200 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும்.  இத்தீவனத்தை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
          
            
              
                மக்காச்சோளம்    / வெள்ளைச் சோம்பு / கம்பு  | 
                -  | 
                50    பங்கு  | 
               
              
                சோயாபிண்ணாக்கு    / கடலைப் பிண்ணாக்கு  | 
                -  | 
                20    பங்கு  | 
               
              
                மீன்    தூள்  | 
                -  | 
                10    பங்கு  | 
               
              
                தவிடு    வகைகள்  | 
                -  | 
                15    பங்கு  | 
               
              
                எண்ணெய்  | 
                -  | 
                2    பங்கு  | 
               
              
                தாது    உப்பு  | 
                -  | 
                3    பங்கு  | 
               
                       
           
          இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள்  (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 20 கிராம்) கலந்து தரவேண்டும். இத்தீவனத்தைப்  பொடியாகவோ அல்லது குச்சித் தீவனமாகவோ அளிக்கலாம். இத்துடன் தீவனத் தட்டுக்களில்  கிளிஞ்சல் எந்நேரமும் கிடைக்குமாறு போட்டு வைக்கலாம். 
          குச்சித் தீவனம்  அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் 
          
            
              - அனைத்துச்       சத்துக்களும் சமச்சீர் அளவில் வான்கோழிகளுக்குக் கிடைக்கின்றன.
 
              - தீவன       விரயம் குறைவு மற்றும் சத்துக்கள் உபயோகிக்கும் திறன் அதிகம்.
 
              - நச்சுத்       தன்மை குறைக்கப்படுகிறது அல்லது நீக்கப்படுகிறது.
 
              - தீவனம்       உட்கொள்ளும அளவம் தீவன மாற்றுத் திறனும் அதிகரிக்கின்றன.
 
              - கோழிகளின்       உடல் எடை சமச்சீராக இருக்கும்.
 
             
           
          முட்டைக் கோழிகளுக்கான  தீவனப் பராமரிப்பு 
            சுமார்  30 வார வயதில் வான்கோழிகள் முட்டையிட ஆரம்பிக்கின்றன. வான்கோழிகளின் முட்டைகள் சுமார்  70 கிராம் இருக்கும். முட்டையிடும் கோழிகளுக்கு 14 விழுக்காடு புரதமும், 2900 கிலோ  கலோரிகள் (1 கிலோவிற்கு) அடங்கிய தீவனம் அளித்தல்  வேண்டும். இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைப்பற்றி  இங்கு காண்போம். 
          
            
              
                மக்காச்சோளம்    / வெள்ளைச் சோம்பு / கம்பு  | 
                -  | 
                50    பங்கு  | 
               
              
                சோயாபிண்ணாக்கு    / கடலைப் பிண்ணாக்கு  | 
                -  | 
                22    பங்கு  | 
               
              
                அரிசித்    தவிடு  | 
                -  | 
                19    பங்கு  | 
               
              
                மீன்    தூள்  | 
                -  | 
                5    பங்கு  | 
               
              
                எண்ணெய்  | 
                -  | 
                1    பங்கு  | 
               
              
                தாது    உப்புக் கலவை 
                  (டிசிபி    1.0 சதவிகிதம்,  கால்சைட் 1.0 சதவிகிதம் மற்றும்    கிளிஞ்சல் 1.0 சதவிகிதம்)  | 
                -  | 
                3    பங்கு  | 
               
                       
           
          இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள்  (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும். மேலும்  முட்டைக்கோழிகளுக்குக் கிளிஞ்சல் தூள் 1 சதவிகிதம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். இதிலிருந்து  முட்டை உற்பத்திக்குத் தேவையான கால்சியச் சத்து கிடைக்கிறது. 
          இனப்பெருக்கக்  கோழிகளுக்குத் தீவனம் அளித்தல் 
            முதல்  12-16 வாரங்களுக்கு இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் வான்கோழிகளுக்கு அளிக்கப்படும்  தீவனத்தையே இனப்பெருக்கக் கோழிகளுக்கும் அளிக்கலாம். அதன் பின்னர் இக்கோழிகள் கூடுதல்  உடல் எடை அடைவதை தடுக்கக் தீவனக் கட்டுப்பாட்டு முறை அல்லது குறைவான புரதத் தீவனம்  அளித்தல் முறை மூலம் உடல் பருமன் அடைவதைத் தடுக்கவேண்டும். இனப்பெருக்கக் கோழிகளுக்கு  12 விழுக்காடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் கொண்ட  தீவனம் அளிக்கவேண்டும். இத்தீவனத்தைத் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றிக் காண்போம். 
          
            
              
                மக்காச்சோளம்    / வெள்ளைச் சோம்பு / கம்பு  | 
                -  | 
                55    பங்கு  | 
               
              
                சோயாபிண்ணாக்கு    / கடலைப் பிண்ணாக்கு  | 
                -  | 
                20    பங்கு  | 
               
              
                அரிசித்    தவிடு  | 
                -  | 
                17    பங்கு  | 
               
              
                மீன்    தூள்  | 
                -  | 
                5    பங்கு  | 
               
              
                தாது    உப்புக் கலவை 
                  (டிசிபி    1.0 சதவிகிதம்,  கால்சைட் 1.0 சதவிகிதம் மற்றும்    கிளிஞ்சல் 1.0 சதவிகிதம்)  | 
                -  | 
                3    பங்கு  | 
               
                       
           
          இத்துடன்  தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 50  கிராம்) கலந்து தரவேண்டும். 
          இனப்பெருக்கக்  கோழிகளில் இருந்து கிடைக்கும் கருமுட்டைகளை அடை வைக்கும் போது சுமார் 10 சதவிகிதம்  முட்டைகள் கரு உற்பத்தியாகாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இனப்பெருக்கக்  கோழிகளின் தீவனத்தில் போதிய அளவு வைட்டமின்கள் பி,இ மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள்  இல்லாமல் இருப்பதாகும். பெட்டைக் கோழிகளுக்கு மேற்கண்ட சத்துக்களுடன் மெக்னீசயம் சத்தும்  கூடுதலாகச் சேர்த்து அளிக்கவேண்டும். வான்கோழிகளின் கருமுட்டை வளர்ச்சியின் போது  5-15 விழுக்காடு வரை கருக்கள் இறந்து விட வாய்ப்புள்ளது. அதே போல் 10 விழுக்காடு வரை  இளம் குஞ்சுகள் குஞ்சு பொரித்த ஓரிரு நாட்களில் இறந்து விடுவதும் உண்டு. இளம் குஞ்சுகள்,  அதிக எண்ணிக்கையில் இறப்பதைத் தடுக்க இனப்பெருக்கக் கோழிகளின் தீவனத்தில் தேவையான  அனைத்துச் சத்துக்களும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.                      
             
                  |