கொட்டகை அமைப்பு 
வாத்துகளுக்கு  கொட்டகை பெரிய அளவில் தேவைப்படாது. நல்ல காற்றோட்டத்துடனும், எலித்தொல்லைகள் இன்றி  இருத்தல் வேண்டும். கூரை கூடாரமாகவோ, அரை வட்டமாகவோ இருக்கலாம். தரை சாதாரணமாகவோ  உலோகக் கம்பிகளாலோ அமைக்கப்பட்டிருக்கலாம். மித தீவிர வளர்ப்பு முறையில் திறந்தவெளி  அமைப்பை ஒட்டியே கொட்டகை இருக்க வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களின் போதும்,  பகல்நேரங்களிலும் பறவைகளை வெளியில் அனுமதிக்க எளிதாக இருக்கும். இரவு கொட்டகைக்கும்  திறந்த வெளிக்கும் உள்ள விகிதம் 1/4 : 3/4 என்றவாறு இருக்க வேண்டும். முறையான வடிகால்  வசதி அமைக்கப்படுதல் வேண்டும். 50 செ.மீ அளவில் அகலமும் 15-20 செ.மீ ஆழமும் கொண்ட  தொடர்ச்சியான நீர்க்கால்வாய் அமைக்க வேண்டும். இரவில் தங்கும் கொட்டகை அமைப்பிற்கு  இருபுறமும் இதுபோன்ற கால்வாய்கள் வடிகாலுக்காக அமைக்கப்பட வேண்டும். 
              
            கொட்டகை அமைப்பு 
          நீர்: 
            வாத்துகளுக்கு  நீர்த்தேவை அதிகமாக இருப்பினும் அவை நீந்துமளவிற்கு நீர் அவசியம் இல்லை. நீர்த்தொட்டிகளில்  வாத்துகள் தமது அகன்ற அலகை முழுதும் நனைக்குமாறு நீர் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும்.  சரியாக தண்ணீர் அளிக்கப்படாவிடில் வாத்தின் கண்கள் சிவந்து, செதில் செதிலாகக் காணப்படும்.  தீவிர நிலையில் கண்கள் தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு. அதேநேரம் அவ்வப்போது தண்ணீர்த்  தொட்டிகளை சுத்தப்படுத்தித் தூய்மையாக வைக்க வேண்டும். இறைச்சிக்காக வளர்க்கப்படும்  வாத்துகளில் ஏழாவது வாரத்தில் உடல்எடை அளவு கூடும். ஆனால் முட்டையிடும் வாத்துகளில்  இவ்வாறு எடை அதிகரிப்பு 0.3% மேல் இருக்கக் கூடாது. 
             
  தீவனப் பராமரிப்பு 
          வாத்துகளுக்கு  அரைக்கப்பட்ட அல்லது உருளை மற்றும் குச்சித்தீவனங்களை அளிக்கலாம். விழுங்குவதற்கும்  கடினமாக இருப்பதால் வாத்துகள் ஈரப்பதமுள்ள உணவையே விரும்பி உண்ணும். உருளைத் தீவனங்கள்  சற்று விலை அதிகமாக இருப்பினும், வீணாவதைக் குறைக்கலாம், குறைந்த அளவே போதுமானது,  ஆட்கூலி குறைவு, பராமரிப்பு எளிதானது. எனவே உருளைத் தீவனங்களே சிறந்தவையாகும். வாத்துகளுக்கு  நார்த்தீவனம் மிகவும் ஏற்றது. குளங்கள், பச்சைத் தீவனங்களையும் பயன்படுத்தினால் தீவினச்  செலவைக் குறைக்கலாம். 
           
                
            தீவனப் பராமரிப்பு 
           
            வாத்துகள்  எப்போதும் நீருடன் சேர்ந்துதான் உணவருந்தும். முதல் 8 வாரங்களுக்கு வாத்துகளுக்கு  நாள் முழுதும் உணவருந்த அனுமதிக்க வேண்டும். பின்பு நாளொன்றுக்கு இருமுறை அதாவது காலை  முதல் பிற்பகலிலும் அளிக்கலாம். காக்கி கேம்பெல் இன வாத்துகள் 20 வார வயது வரை 12.5  கி.கி தீவனம் உட்கொள்ளும். 20 வாரங்களுக்குப் பிறகு வாத்துகளின் உற்பத்தி மற்றும்  கிடைக்கும் தீவன அளவைப் பொறுத்து பறவை ஒன்றிற்கு ஒரு நாளைக்கு 120 கிராம் அல்லது அதிகமாகவும்  கொடுக்கலாம்.  
             
  முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கான  வாத்துகளின் தீவன அளவு அட்டவணை: 
          
            
              
                 
                    ஊட்டச்சத்துகள் (சதவீதத்தில்)  | 
                இளம் குஞ்சுகள்  | 
                வளரும் குஞ்சுகள்   | 
                முட்டையிடும் வாத்துகள்  | 
                இறைச்சிக் குஞ்சுகள்   | 
                இறைச்சி வாத்துகள்  | 
               
              
                ஈரப்பதம்    % (அதிக அளவு)  | 
                11.00  | 
                11.00  | 
                11.00  | 
                11.00  | 
                11.00  | 
               
              
                பண்ப்படா    புரதம் % (குறைந்த அளவு)   | 
                20.00  | 
                16.00  | 
                18.00  | 
                23.00  | 
                20.00  | 
               
              
                பண்படாத    நார்பொருள் % (அதிக அளவு)  | 
                7.00  | 
                8.00  | 
                8.00  | 
                6.00  | 
                6.00  | 
               
              
                அமிலத்தில்    கரையாத சாம்பல் சத்து  (அதிக அளவு)  | 
                4.00  | 
                4.00  | 
                4.00  | 
                3.00  | 
                3.00  | 
               
              
                உப்பு  (அதிக அளவு)  | 
                0.60  | 
                0.60  | 
                0.60  | 
                0.60  | 
                0.60  | 
               
              
                கால்சியம்    (குறைந்த அளவு)    | 
                1.00  | 
                1.00  | 
                3.00  | 
                1.20  | 
                1.20  | 
               
              
                பாஸ்பரஸ்    (குறைந்த அளவு) கிடைக்கக்கூடியது   | 
                0.50   | 
                0.50  | 
                0.50  | 
                0.50  | 
                0.50  | 
               
              
                லினோலெயிக்    அமிலம் (குறைந்த அளவு)  | 
                1.00  | 
                1.00  | 
                1.00  | 
                1.00  | 
                1.00  | 
               
              
                லைசின்    (குறைந்த அளவு)  | 
                0.90  | 
                0.60  | 
                0.65  | 
                1.20  | 
                1.00  | 
               
              
                மெத்தியோனைன்    (குறைந்த அளவு)  | 
                0.30  | 
                0.25  | 
                0.30  | 
                0.50  | 
                0.35  | 
               
              
                மெத்தியோனைன்    + சிஸ்டைன்  | 
                0.60  | 
                0.50  | 
                0.55  | 
                0.90  | 
                0.70  | 
               
              
                வளர்சிதைமாற்ற    எரிசக்தி (க.கலோரி / கி.கி) (குறைந்த அளவு)  | 
                2600  | 
                2500  | 
                2600  | 
                2800  | 
                2900  | 
               
                       
           
           
          விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள்: 
          
            
              
                 
                    வ.எண்  | 
                தாதக்கள் & விட்டமின்கள்.    மி.கி / கி.கி  | 
                இளம் குஞ்சுகள்  | 
                வளரும் குஞ்சுகள்  | 
                முட்டையிடும் வாத்துகள்  | 
                இறைச்சிக் குஞ்சுகள்  | 
                இறைச்சி வாத்துகள்  | 
               
              
                1.  | 
                மாங்கனிசு  | 
                90.00  | 
                50.00  | 
                55.00  | 
                90.00  | 
                90.00  | 
               
              
                2.  | 
                அயோடின்  | 
                1.00  | 
                1.00  | 
                1.00  | 
                1.00  | 
                1.00  | 
               
              
                3.  | 
                இரும்பு  | 
                120.00  | 
                90.00  | 
                75.00  | 
                120.00  | 
                120.00  | 
               
              
                4.  | 
                துத்தநாகம்  | 
                60.00  | 
                50.00  | 
                75.00  | 
                60.00  | 
                60.00  | 
               
              
                5.  | 
                தாமிரம்  | 
                12.00  | 
                9.00  | 
                9.00  | 
                12.00  | 
                12.00  | 
               
              
                6.  | 
                விட்டமின்    ஏ  | 
                6000  | 
                6000  | 
                6000  | 
                6000  | 
                6000  | 
               
              
                7.  | 
                விட்டமின்    டி.3. சர்வதேச அளவு / கி.கி  | 
                600  | 
                600  | 
                1200  | 
                600  | 
                600  | 
               
              
                8.  | 
                தயமின்  | 
                5.00  | 
                3.00  | 
                3.00  | 
                5.00  | 
                5.00  | 
               
              
                9.  | 
                ரிபோஃபிளேவின்  | 
                6.00  | 
                5.00  | 
                5.00  | 
                6.00  | 
                6.00  | 
               
              
                10.  | 
                பண்டாதொனிக்    அமிலம்  | 
                15.00  | 
                15.00  | 
                15.00  | 
                15.00  | 
                15.00  | 
               
              
                11.  | 
                நிக்கோடினிக்    அமிலம்  | 
                70.00  | 
                60.00  | 
                60.00  | 
                70.00  | 
                70.00  | 
               
              
                12.  | 
                பயோட்டின்  | 
                0.20  | 
                0.15  | 
                0.15  | 
                0.20  | 
                0.20  | 
               
              
                13.  | 
                விட்டமின்    பி.12  | 
                0.015  | 
                0.10  | 
                0.10  | 
                0.015  | 
                0.015  | 
               
              
                14.  | 
                ஃபோலிக்    அமிலம்  | 
                1.00  | 
                0.50  | 
                0.50  | 
                1.00  | 
                1.00  | 
               
              
                15.  | 
                கயோலின்  | 
                   | 
                   | 
                   | 
                   | 
                   | 
               
              
                16.  | 
                விட்டமின்    ஈ  | 
                15.00  | 
                10.00  | 
                10.00  | 
                15.00  | 
                15.00  | 
               
              
                17.  | 
                விட்டமின்    கே  | 
                1.00  | 
                1.00  | 
                1.00  | 
                1.00  | 
                1.00  | 
               
              
                18.  | 
                பைரிடாக்ஸின்  | 
                5.00  | 
                5.00  | 
                5.00  | 
                5.00  | 
                5.00  | 
               
                       
           
          (ஆதாரம்:  www.vuatkerala.org) 
                   
  |