![]()  | 
      |||||
பறவை இனங்கள் :: வளரும் வாத்துகளின் பராமரிப்பு  | 
        |||||
செயற்கை முறை கருவூட்டல்   | 
        |||||
வளரும் வாத்துகளின் பராமரிப்பு தீவிர வளர்ப்பு முறையில், ஆழ் கூள முறை, அல்லது சட்டப் பலகை முறையில் வளர்க்கலாம். குடிதண்ணீர் தேவையான அளவு தாராளமாக வழங்கப்பட வேண்டும். நீர்த்தொட்டிகளின் ஆழம் வாத்துகள் அவற்றின் அலகை நனைக்க ஏற்றவாறு இருக்க வேண்டும். 13-15 செ.மீ ஆழம் இருத்தல் நலம். 
 
 தீவிர வாத்து வளர்ப்பு முறையில் இட அளவு 4-5 ச.டி ஒரு வாத்திற்கு இருக்க வேண்டும். மித தீவிர வளர்ப்பு முறையில் 3 ச.அடி இரவிலும் பகலில் மேயவிடுவதற்கு 10-15 ச.அடி அளவும் போதுமானது. ஈரப்பதமுள்ள தீவனங்களை ‘V’ வடிவமான தீவனத்தட்டுகளில், 10-12.5 செ.மீ இடைவெளிவிட்டு வைக்கலாம். உலர் தீவன வகைகளில் அல்லது குச்சித்தீவனமாக இருப்பின் வாத்துகள் உண்ணக்கூடிய அளவு தீவனத்தை 5-7.5 செ.மீ இடைவெளியில் வைக்கலாம். 
 நல்ல  முட்டை உற்பத்தி அதிகமுள்ள வாத்து வகைகள் 16-18 வார வயதில் முட்டையிடத் துவங்கிவிடும்.  95-98 சதவீத முட்டைகள் காலை 9 மணிக்குள் இடப்பட்டுவிடும். ஒவ்வொரு 3 வாத்துகளுக்கும்  80 x 30 x 45 செ.மீ (12 x12 x18”) அளவுள்ள முட்டைக் கூடு பெட்டிகள் வைக்கப்படவேண்டும்.  முட்டையிடும் வாத்துகளுக்கு ஆண், பெண் இனச்சேர்க்கை விகிதம் 1:6-7 என்று இருக்கலாம்.  நல்ல உற்பததிக்கு 14-16 மணி வரை சூரிய ஒளி அவசியம். திறந்தவெளி அமைப்பில் 1 ஏக்கரில்  பரப்பில் இருக்கும் உணவைப்பொறுத்து  1000 வாத்துகள்  வரை வளர்க்கலாம்.  
  | 
        |||||
பால் கறக்கும் கருவி  | 
      |||||
| 
           கால்நடை மருத்துவமனை  | 
      |||||
| 
                  
         © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008  | 
      |||||