| 
        செயற்கையாகத்  தயாரிக்கப்பட்ட தீவனங்கள் 
          ஆற்றல் அளிப்பவை 
           
            1.எண்ணெய் நீக்கப்பட்ட  சால்விதைத்தூள் 
            சால்  விதையிலிருந்து எண்ணெய் எடுக்கும் போது கிடைக்கும் உபபொருட்களே இத்தூள்கள். இவை பார்ப்பதற்கு  தானியங்களைப் போல் இருக்கும். இதில் டேனின் அதிகம் இருப்பதால் குறைந்தளவே தீவனத்தில்  பயன்படுத்தவேண்டும். 
             
  2.மரவள்ளித்தூள் 
            இது  மரவள்ளிக் கிழங்கிலிருந்து பெறப்படுகிறது. இதில் ஆற்றல் அதிகம். சில இரகங்களில் சைனோஜென்க்  என்னும் பொருட்கள் உள்ளன. கிழங்கை சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி, கூடு செய்வதன்  மூலம் இதைப் போக்கலாம். 
             
  3.உலர்த்திய கோழிக்கழிவுகள் 
            கலப்படமற்ற  கூண்டு முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் கழிவுகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும்  10-12சதவிகிதம் தூய புரதம் உள்ளது. இது சரியாகச் சுத்தம் செய்யப்பட்டால் தீவனக் கலவையில்  10 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம். 
             
  4.கரும்புச்சக்கை 
            தானிய  வகைகளுக்குப் பதில் இவை 45 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். இதில் தாதுக்கள் அதிகம் இருப்பதால்  அதிக அளவு கொடுத்தால் கழிவுகள் நீராக வெளியேற வாய்ப்புள்ளது. 
             
  5.சிறுதானியங்கள் 
            சாமை,பனிவரகு  போன்ற சிறுதானியங்கள் மஞ்சள் சோளத்திற்குப் பதில் 20 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம்.  ராகி,கம்பு, சோளம் போன்றவையும் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றது. 
             
            காய்கறிப் புரதங்கள் 
             
  1.கடுகுப் புண்ணாக்கு 
          இரு  கடலைப் புண்ணாக்கைக் காட்டிலும் புரதம் மற்றும் லைசின் அளவு மிகுந்துள்ளது. எனினும்  கிளைக்கோசைட்ஸ் மற்றும் காய்ட்டிரோஜன் உள்ளதால் இதைப் பதப்படுத்தினாலும் 5 சதவிகிதம்  பயன்படுத்தக்கூடாது. 
          2.சோயாபீன் தூள் 
            சோயாபீனில்  35-40 சதவிகிதம் புரதமும், 18-21 சதவிகிதம் கொழுப்பும் உள்ளது. எண்ணெய் எடுக்க பல  முறைகள் உள்ளன. சோயாபீன் எண்ணெய் பிழிந்து எடுக்கும் போது கிடைக்கும் தூளில் 42 சதவிகிதம்  புரதமும் 5 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. சரியான சூடுபடுத்தும் முறை மூலம் இதன் புரதத்தன்மையை  உயர்த்தலாம். சோயாபீனானது உயர் இரக புரதத்தைக் கொண்டுள்ளது. இதிலிருந்து லைசின் அர்ஜினைன்,  கிளைசின், டிரைப்டோபன், சிஸ்டைன் போன்ற அமினோ அமிலங்களைப் பெறலாம். 
   
  3.எள்துகள் 
            இதில்  அர்ஜினைன், மெத்தியோனைன் மற்றும் டிரைப்டோபன் போன்ற அமினோ அமிலங்களும் புரதமும்  அதிக அளவில் உள்ளது. 
   
  4.கொத்தவரை 
            கொத்தவரையிலிருந்து  தாவரக் கோந்து தயாரிக்கும் போது கிடைக்கும் உபபொருளில் புரோட்டீன் மிகுதியாக உள்ளது.  இதில் டிரிப்சின் தடுப்பான் இருப்பதால் சிறிதளவே பயன்படுத்தவேண்டும். 
   
  5.சூரியகாந்தி  விதைத் தூள் 
            நிலக்கடரைத்  தூளை விட இதில் ஊட்டச்த்துக்கள் அதிகம். எனினும் இதன் அதிக நார்ச்சத்தால் இது கோழித்தீவனத்தில்  சேர்க்கப்படுவதில்லை. சோயாபீனை விட இதில் மெத்தியோனைன் மற்றும் அர்ஜினைன் அதிகமுள்ளது.  லைசின் மிகக் குறைவு. மேலும் இது பாண்டதொனிக் அமிலம் மற்றும் நியாசினுக்குச் சிறந்த  ஆதாரம். 
   
  6.செந்தூரகத்தூள் 
            இதுவும்  நிலக்கடலைத் தூளுக்குப் பதிலாக 25 சதவிகிதம் வரை பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகமாகப்  பயன்படுத்தினால்  லைசின் பற்றாக்குறை ஏற்படும். 
   
  7.ராம்டில் புண்ணாக்கு 
            கோழிக்குஞ்சுகளுக்கும்,  முட்டைக் கோழிகளுக்கும் தீவனமாக 50-100 சதவிகிதம் வரை இவை பயன்படுத்தப்படுகின்றன. 
   
  8.பருத்திப் புண்ணாக்கு 
            புரதம்  அதிக அளவில் இருந்தாலும் லைசின் அளவு குறைவாகவே இருக்கும். 15 சதவிகிதம் வரை இப்புண்ணாக்கைப்  பயன்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தினால் முட்டையின் மஞ்சள் கருவில் சிறு கட்டி போன்று  தோன்றும். 
   
  9.சோளம் குளூட்டன்  துகள்கள் 
            சோள  மாவுத் தொழிற்சாலையின் உபபொருளான இதில் புரோட்டீன், சாந்தோஃபில் நிறைந்துள்ளது. 
   
  10.பெனிசிலியம்-மைசிலியம்  கழிவுகள் 
            இது  பென்சிலின் தயாரிப்பில் வெளிவரும் கழிவு ஆகும். இதில் புரதம் மற்றும் எதிர்ப்பொருள்கள்  நிறைந்துள்ளதால் 5  சதம் வரை கலப்புத்  தீவனத்தில் பயன்படுத்தலாம். 
   
  11.ஆளிவிதைத் துகள்கள் 
            இதில்  டிரைப்டோபன் நிறைந்துள்ளது எனினும் சையனோஜெனிக் கிளைக்கோஸைடு மற்றும் ஏன்டிபைரிடாக்ஸியல்  காரணிகள் நிறைந்துள்ளதால் 5 சதவிகிதம் மேல் உபயோகிக்கக்கூடாது. இதை வேக வைத்துக் கொடுப்பதால்  விஷத்தன்மை குறையும். 
             
            விலங்குப்  புரதங்கள் 
          1.இரத்தத் துகள் 
            இதில்  80 சதம் புரதமும், லைசின், அர்ஜினைன், மெத்தியோனைன், சிஸ்டைன் மற்றும் லியூசின் போன்ற  அமினோ அமிலங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஐசோலியூசின் மட்டுமே இருப்பதில்லை. இதன்  சுவைக் குறைவாக இருக்கும். 2-3 சதவீதம் மட்டுமே பயன்படுத்தவேண்டும். 
   
  2.கல்லீரல் கழிவுத்  துகள் 
            லைசின்,  மெத்தியோனைன், சிஸ்டைன், டிரைப்டோபன் மற்றும் அதிக அளவு ரிபோஃபிளேவின், கோலைன்  மற்றும் விட்டமின் பி12. 
   
  3.பட்டுப்பூச்சியின்  கூட்டுப்புழுக் கழிவு 
            எண்ணெய்  நீக்கப்பட்ட கூட்டுப்புழுவின் கழிவில் புரதம் மிகுந்துள்ளது. அதிக நார்ச்சத்து உள்ளதாலும்  இதன் புரதம் செரிப்பதற்குக் கடினமாக இருப்பதாலும் இதன் பயன்பாடு கோழித்தீவனத்தில்  தடை செய்யப்பட்டுள்ளது. 
   
  4.அடைகாப்பகத்தின்  கழிவுகள் 
            குஞ்சு  பொரிக்காத முட்டைகள், கொல்லப்பட்ட குஞ்சுகள், இறந்த சினைக்குஞ்சுகள், இளம் கருக்கள்  போன்றவற்றைச் சேகரித்து வேக வைத்து, அரைத்து கொழுப்பு நீக்கியோ அல்லது நீக்காமலோ  கோழிகளுக்கு அளிக்கலாம். பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்து 25-34 சதவிகிதம் பண்படா  புரதத்தைப் பெற்றிருக்கும். 
   
  5.இறகுத் துகள்கள் 
            80-85  சதவிகிதம் புரதம் அடங்கியுள்ளதால் இதைத் தீவனத்தில் 5 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம். 
   
  6.கோழிப்பண்ணைக்  கழிவுகள் 
            கோழி  பதப்படுத்தும் தொழிற்சாலைக் கழிவுகளின் 15 சதவிகிதம சாம்பல் சத்து இருக்கும். இதில்  புரதம் 55-60 சதமும் கொழுப்பு 12 சதமும் இருக்கும். 
   
  7.இறைச்சி மற்றும்  எலும்புத் துகள் 
            இதில்  அதிகப் புரதம் மட்டுமன்றி கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் அதிகம் அடங்கியுள்ளன. துகள்களில்  அடங்கியுள்ள ஜெலாட்டின் அளவைப் பொறுத்து அதன் ஊட்டச்சத்துக் கலவை மாறுபடும். 5-10  சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். 
             
            (ஆதாரம்:  டாக்டர். ஆச்சார்யாHandbook of Animal Husbandary)  
            
                     
             
          
  | 
          |