பறவை இனங்கள் :: கோழி வளர்ப்பு முதல் பக்கம்

கோழியில் செயற்கை கருத்தரிப்பு முறை :

செயற்கை முறையில் கருத்தரித்தல் கறி கோழி மற்றும் வான்கோழி இனங்களில் இனப்பெருக்கத்தை மேம்படுத்த ஒரு சிறந்த முறையாகும். ஆனால் இம்முறையில் சேவல் விந்தணுவை நீண்ட காலம் சேமிப்பதற்கான வழி இல்லை. தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் படி விந்தணுவை நீர்த்துப்போக பயன்படுத்தும் கலவைகளை 1:2 விகிதத்தில் கலந்து உடனடியாக உபயோகிக்க வேண்டும்.

ஒரு சேவலில் இருந்து பெறப்பட்ட விந்தணுவின் அடர்த்தி மற்றும் அளவினை பொறுத்து 5 முதல் 10 கோழிகள் வரை கருவூட்டலாம்.

செயற்கை கருத்தரிப்பு முறையை பின்பற்றும் பண்ணைகளில் சேவல் தனியாக சுற்றி திரிவதற்கு போதுமான இடமுள்ள கூண்டுகளில் வைக்கப்படுகின்றது.

விந்து சேகரித்து கருவூட்டம் செய்யும் தொழிலாளர்கள் ஒரு குழுவாக செயல்பட வேண்டும். அடிக்கடி இக்குழுவை மாற்றினால் பறவைகளின் பழக்கபட்ட நடத்தை வேறுபாடும். கடினமாக கையாண்டால் விந்து உற்பத்தி பயம் காரணமாக குறைந்து போகலாம்.

சேவல் விந்தணுவின் பண்புகள் :

சேவல் விந்தணுவில் விந்தணுக்கள் மற்றும் செமினல் பிளாஸ்மா உள்ளது.

சேவல் விந்தணு மிகவும் அடர்த்தியானது. ஒரு இறைச்சி சேவலிடம் 3 - 8 பில்லியன் விந்தணுக்கள்/மிலி கிடைக்கும். பறவை இனங்களில் செமினல் பிளாஸ்மா குறைவாக இருப்பதே இதற்கு காரணமாகும். செமினல் பிளாஸ்மா விரைகள் மற்றும் வெளியேற்று நாளங்கள் மூலம் பெறப்படுகிறது. விந்து தள்ளல் நேரத்தில் நிணநீர் போன்ற திரவம் விந்துவுடன் பல்வேறு அளவுகளில் விந்தணுவுடன் சேரலாம்.

அசைவில்லாத விந்தணுக்களுக்கு வெளிப்படையான தோற்றமுள்ள திரவம் இயக்கத்தை அளிக்கும். இதன் மூலம் விந்து சேமிப்பு குழாய்களில்  இருந்து கோழியின் கருமுட்டை குழாயில் கருப்பை வாய் மற்றும் யோனி சந்திக்கும் இடத்திற்கு சென்றடையும்.

சேவல் தனது 16வது வார முதலாகவே விந்தணு உற்பத்தி செய்யும். ஆனால் அவற்றிக்கு கருவூட்ட திறன் குறைவாகவே இருக்கும். எனவே 22 அல்லது 24 வாரமான சேவலின் விந்தணுவே செயற்கை கருத்தரிப்பு முறைக்கு சிறந்தது. விந்தணுவின் நிறம் வெள்ளை அல்லது முத்து போன்ற வெள்ளை ஆகும்.

அதிக எடை கொண்ட ஆண் இனம் 0.75 – 1 மிலி விந்து மற்றும் குறைந்த எடை கொண்ட ஆண் இனம் 0.4 – 0.6 மிலி விந்தணுவை உற்பத்தி செய்யும்.

ஒரு சேவலை வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று முறை விந்து சேகரிக்க பயன்படுத்தலாம். தினந்தோறும் சேகரித்தால் அதன் அளவு குறைவாக இருக்கும் ஆனால் கருவூட்டல் திறன் குறையாது.

செயற்கை கருத்தரிப்பு முறைக்கு தேவையான உபகரணங்கள்:-

  1. தண்டில் மெழுகு செருகப்பட்ட சிறிய கண்ணாடி புனல்
  2. கருவூட்டல் ஊசி
  3. அகன்ற வாய் உடைய கண்ணாடி குப்பி
  4. சிறிய பைரெக்ஸ் விந்து கப்
  5.  1800C  - 2000C வெப்பநிலையில் உள்ள தண்ணீரை வைக்க ஒரு பெரிய குடுவை.

செயற்கை கருத்தரிப்பு முறையின் பின் செயல்முறை:-

கோழியில் செயற்கை கருத்தரிப்பு முறை ஆனது விந்து சேகரித்தல், விந்து நீர்த்தல் மற்றும் கருவூட்டல் சம்பந்தப்பட்ட மூன்று செயல் முறை ஆகும். சுத்தமான விந்தணு கிடைக்கப்பெற்றால் நீர்த்துபோகாத விந்தணுவையே கருவூடலுக்கு 30 நிமிடங்களுக்குள் பயன்படுத்தலாம்.

விந்து சேகரித்தல்

செயற்கை கருத்தரிப்பு முறையில் முதல் படி விந்து சேகரித்தல் ஆகும். இதற்கு இரண்டு பேர் கொண்ட குழு தேவைப்படுகின்றது. ஒருவர் சேவலை கட்டுப்படுத்தவும் மற்றொருவர் விந்தினை சேகரிக்கவும் தேவைப்படுகின்றனர்.
விந்து சேகரிக்க ஏற்றவாறு கிடைமட்ட நிலையில் சேவலை உயர்த்தி பிடிக்க வேண்டும். விந்தினை சேகரிக்க கோழியின் எச்ச துவாரத்தின் இருபுறங்களிலும் இடது கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் வைத்து மெதுவாக நீவிவிட வேண்டும். அவரது வலக்கையில் ஒரு சேகரிக்கும் புனலை அவர் பிடித்துக் கொள்ள வேண்டும். சேவலின் எச்சத் துவாரத்தின் வழியாக காம்பு வெளியே துருத்தும் வரை விரைவாக மற்றும் தொடர்ச்சியாக நீவிவிட வேண்டும். காம்பு முழுமையாக வெளியே தள்ளியவுடன் வலக்கையின் ஆள்காட்டி பெருவிரலை கொண்டு விந்தணுவை வெளியே எடுத்து, புனலுக்குள் சேகரிக்க வேண்டும். விந்தணு மலம் மற்றும் இறகுகளுடன் கலப்பதை தவிர்க்க வேண்டும்.

விந்தணு சேகரிக்கும் நேரத்தில் விந்து மதிப்பீடு:-

விந்தணுவின் இயற்கையான வண்ணம் வெள்ளை அல்லது முத்து போன்ற வெண்மை நிறமாகும். மஞ்சள் நிற விந்தணு தூய்மை அற்றது. மேலும் இரத்தம், மலம், சிறுநீர் மற்ற குப்பை ஆகியவை கலந்த விந்தணுவையும் பயன்படுத்தக்கூடாது. விந்தணுவை தண்ணீருடன் கலக்கக்கூடாது. மாசுபடிந்த விந்தணுவாக இருந்தால் அசுத்தங்களை நீக்கி பின்னர் நீர்த்துப்போக செய்து குளிர்சாதன பெட்டியில் (3 - 120C) வெப்பநிலையில் வைக்கவும்.

கருவூட்டல்:-

செயற்கை கருத்தரிப்பு முறையில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் சுத்தமாகவும், உலர்வாகவும் இருக்கவேண்டும்.
பெரும்பான்மையான கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிந்தவுடன் செயற்கை கருத்தரிப்பு முறையை பின்பற்ற வேண்டும். கரு முட்டை குழாயில் உள்ள முட்டை விந்து நுழைவதை தடுத்து கருவுறுதலை குறைகின்றது. கோழிகளுக்கு மாலை 3 மணிக்கு மேல் கருவூட்டலும் வான்கோழிகளுக்கு 5 மணிக்கு மேல் கருவூட்டலும் சிறந்ததாகும்.
முட்டையிடாத கோழிகளுக்கு கருவூட்டுதல் மிக கடினம். கோழிப்பண்ணையில் கோழிகள் 25 சதம் முட்டை உற்பத்தியை அடையும் பொழுது கருவூட்டல் செய்யப்படுகின்றது.

செயல்முறை:-

கோழியின் கால்களை இடதுகையால் கீழே பிடித்துக்கொண்டு அதன் வால் பகுதியை பின்புறம் தள்ளவும். பின்னர் வலக்கையின் பெருவிரல் மெல்ல அழுத்தினால் கருமுட்டைக் குழாய் வெளியேவரும். அப்பொழுது மற்றொருவர் கருவூட்டல் ஊசியை செலுத்த வேண்டும். சுமார் 1” யோனிக்கு உள்ளே செலுத்திய பின்பு விந்தணுவை கருப்பை மற்றும் யோனி சந்திக்கும் இடத்தில் வெளியேற்ற வேண்டும்.

செயற்கை கருத்தரிப்பு முறைக்கான அளவு மற்றும் கால இடைவெளி:-

கோழ : 0.05 மிலி, வாரம் ஒருமுறை
வான்கோழி : 0.025 மிலி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை
வாத்து : 0.03 மிலி 5 நாட்களுக்கு ஒருமுறை
கூஸ் : 0.05 மிலி வாரம் ஒருமுறை

சேவல் காலையில் சிறப்பான விந்தணுவை உற்பத்தி செய்யும், இரவு 9 மணி அளவில் கருவூட்டினால் நிறைய வளமான முட்டைகள் கிடைக்கும்.

விந்தணுவின் அளவு மற்றும் அடர்த்தி:-

இனங்கள் அளவு (மிலி) விந்தணு அடர்த்தி (மில்லியன் / மிலி) ஒருமுறை கருவூட்ட தேவைப்படும் விந்தணுவின் அளவு (மில்லியன்)

ஆதாரம்:-
முனைவர். R. மதிவாணன்,
தலைவர் மற்றும் பேராசிரியர் ,
கால்நடை மற்றும் அறிவியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை – 3.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16