நோய்ப் பராமரிப்பு 
           
            இரத்தசோகை 
           
          பன்றிகளில் இரத்த சோகை நோய், ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் ஒரு முக்கிய நோயாகும். இரும்பு மற்றும் தாமிரச்சத்தும் தேவையான அளவு கிடைக்குச் செய்யவேண்டும். இரும்பு சல்பேட் 0.5 கி.கிராமை 10 லிட்டர் நீரில் கரைத்து கரைசரைத் தயார் செய்யலாம். இதை வாய்வழியாகவோ அல்லது தாய்ப்பன்றியின் மடி மற்றும் காம்புகளில் தடவி விடுவதால் குட்டிகளுக்கு எளிதில் கிடைக்கும். குட்டிகளின் கலப்பு உணவைக் கொடுக்கத் தொடங்கும் வரை இந்த 'இரும்பு -டெக்ஸ்ட்ரான்' மற்றும் 'காப்பர் சல்பேட்'டைத் தடவலாம். இரும்பு -டெக்ஸ்ட்ரான் மருந்தை ஊசி வழியே தசைகளிடையே செலுத்துவது இந்நோயைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த வழி ஆகும். 
          பன்றிக் காய்ச்சல் 
          
            
              - பன்றிக் காய்ச்சல் வராமல் பாதுகாக்கக் குட்டிகளின் ஏழாவது வாரத்தில் தடுப்பூசி போடவேண்டும்.
 
              - குட்டிகளை, தாயிடமிருந்து பிரித்து 2வது வாரத்தில் குட்டிகளுக்குக்குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும்.
 
              - பன்றிகளை நல்ல சுத்தமான, காற்றோட்டமான, கொட்டகையில் வளர்க்கவேண்டும்.
 
              - முறையான தீவனம் கொடுக்கப்படவேண்டும்.
 
              - தண்ணீர் தீவனத் தொட்டி மற்றும் குட்டி போடும் அறைகளைச் சுத்தம் செய்தல் அவசியம்.
 
              - வெளியில் இருந்து புதிதாக வாங்கி வரப்படும் பன்றிகள் நோய்த் தொற்று உள்ளவையா எனத் தனியே வைத்துப் பரிசோதித்த பின்னரே பண்ணைப் பன்றிகளுடன் சேர்க்கவேண்டும்.
 
              - அவ்வப்போது பன்றிகளை வெளியேற்றிவிட்டுப் பண்ணையைக் கிருமி நாசினி கொண்டு கழுவி, 3-4 மணி நேரம் உலர வைத்த பின் பன்றிகளை உள்ளே அனுமதிக்கலாம்.
 
             
           
      (ஆதாரம்:www.indg.in)          |