ஆடுகளை  பாதிக்கும் நோய்கள் 
           
            நச்சுயிரி  நோய்கள் 
           
            கோமாரி  நோய் 
           
            அறிகுறிகள் 
          
            
              - நாக்கு,       மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம்       எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல்.
 
             
           
          சிகிச்சை 
          
            
              
                - சமையல்சோடா        உப்புக் கலந்த நீரில் கால் மற்றும் வாய்ப்புண்களை கழுவி மருந்திடுதல்.
 
                - போரிங்        பவுடருடன் கிளிசரின் கலந்து வாயில் தடவவேண்டும்.
 
               
             
           
          வெக்கை  சார்பு நோய் 
          
            
              - இது       செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிகக்கொடிய தொற்றுநோய் ஆகும்.
 
             
           
          அறிகுறிகள் 
          
            
              - வாய்ப்புண்,       மூச்சுத்திணறல், கழிச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல், காய்ச்சல்.
 
             
           
          தடுப்பு  முறை 
          
            
              - தடுப்பூசி       போடுதல் அவசியம்.
 
             
           
           ஆட்டு அம்மை 
          
            
              - வெள்ளாடுகளை       விட செம்மறியாடுகளையே அதிகம் தாக்குகிறது.
 
             
           
          அறிகுறிகள் 
          
            
              - உதடு,       மூக்கு, கண் இமை, காது, காலின் அடிப்பகுதி, மடி, இனப்பெருக்க உறுப்பு போன்ற இடங்களில்       முத்துப்போன்ற அம்மைக் கொப்புளங்கள் காணப்படுதல், காய்ச்சல், உணவு உட்கொள்ளாமை.
 
             
           
          நீலநாக்கு  நோய்ள 
             
          அறிகுறிகள் 
          
            
              - காய்ச்சல்,       சளி, தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், சளி கொட்டியாவதால் மூக்கடைப்பு       ஏற்படுதல், நான்கு நாட்களில் உதடு, மூக்கு, நாக்கு, குளம்பின் மேல் பகுதி மற்றும்       கீழ்த்தாடை வீங்குதல், நாக்கு நீல நிறமாக மாறுதல், தீவனம் உட்கொள்ளாமை மற்றும்       ஒரு வாரத்தில் இறந்து விடுதல்.
 
             
           
          சிகிச்சை 
          
            
              - போரிங்       பவுடரைத் தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்கு தினம் இரு முறை போடவேண்டும்.
 
              - நோய்       எதிர்ப்பு மருந்துகள் 5 நாட்களுக்குள் கொடுக்கவேண்டும்.
 
              - மென்மையான       தீவனங்களை கொடுக்கவேண்டும்.
 
             
           
          நுண்ணுயிரி  நோய்கள் 
             
            அடைப்பான் 
             
          அறிகுறிகள் 
          
            
              - எந்தவித       நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீர் இறப்பு, இறந்தபின் ஆசனவாய், மூக்கு, காது       போன்றவைகளிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறுதல்.
 
             
           
          தடுப்பு  முறை 
          
            
              - இறந்த       ஆடுகளை ஆழமாகக் குழிவெட்டி சுண்ணாம்புத் தூள் தெளித்து மூடிவிடவேண்டும். தடுப்பூசி       போடுதல் அவசியம்.
 
             
           
          தொண்டை  அடைப்பான் 
             
          அறிகுறிகள் 
          
            
              - பாதிக்கப்பட்ட       ஆடுகளில் அதிகக் காய்ச்சல், மூச்சுவிட சிரமம், இருமல், கீழ்த்தாடையில் வீக்கம்,       திடீரென இறந்து விடுதல்.
 
             
           
          சிகிச்சை 
          
            
              - ஆரம்பகால       நோய்க்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்தல் மற்றும் நோய் தீர்க்கும் முன்       தடுப்பூசி போடுதல் அவசியம்.
 
             
           
          துள்ளுமாரி  நோய் 
          
            
              - எல்லா       வயது ஆடுகளையும் பாதிக்கும். ஆனால் இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.       மழைக்குப்பின் புதிதாக முளைத்த பசுமையான புல்வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும்       ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும்.
 
             
           
          அறிகுறிகள் 
          
            
              
                - ஆடுகள்        மேயாமல் சோர்ந்து வயிற்று வலியால் பற்களைக் கடிக்கும்.
 
                - சாணம்        இளகி, இரத்தம் கலந்திருக்கும்.
 
                - ஆடுகள்        நடக்கும் போது கால்கள் பின்னி, கழுத்து விரைத்து, கண்கள் பிதுங்கி, மயங்கி தலை        சாய்ந்து கீழே விழும்.
 
                - இறப்பதற்கு        முன் வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழும்.
 
               
             
           
          தடுப்பு  முறைகள் 
          
            
              - சூரிய       உதயத்திற்குப் பின் ஆடுகளை 1 மணி நேரம் கழித்து மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.
 
              - பருவமழைக்கு       முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.
 
             
           
          ஒட்டுண்ணி  நோய்கள் 
             
            அக  ஒட்டுண்ணிகள் 
             
          பரவுதல் 
          
            
              - மேய்ச்சலின்       போது ஆடுகளின் வயிற்றுக்குள் செல்கின்றன.
 
             
           
          அறிகுறிகள் 
          
            
              - இரத்தசோகை,       பசியின்மை, எடை குறைதல், தள்ளாடி நடத்தல், தாடை வீங்குதல், உரோமம் கொட்டுதல்,       வயிற்றுப்போக்கு.
 
             
           
          தடுப்பு  முறைகள் 
          
            
              - குடற்புழு       நீக்கம் செய்தல்
 
              - சாணத்தை       அப்புறப்படுத்தி, தரையைக் கழுவுதல்
 
              - கிருமி       நாசினி மருந்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல்.
 
             
           
          புற  ஒட்டுண்ணிகள் 
             
            உண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி  மற்றும் சிற்றுண்ணிகள் (mite) ஆகும். 
             
          பாதிப்புகள் 
          
            
              - தோல்       தடித்தல், சொறி உண்டாகுதல், முடி உதிர்தல், இரத்த சோகை, இரத்த ஒட்டுண்ணிகள்       பரவுதல், தேய்த்துக் கொள்ளுதல், கடித்துக் கொள்ளுதல், அஜீரணம், இளைத்து எடைக்குறைதல்       போன்றவையாகும்.
 
              - மருந்துக்       குளியல், தெளித்தல் (அ) தூவுதல் முறை, இவற்றிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஒன்றைப்       பயன்படுத்தலாம்.
 
              - மாலத்தியான்  0.5 சதவிகிதம் சுமித்தியான் 1/100 (தெளிக்கும்  முறை)
 
              - பியூட்டாக்ஸ்       0.02 சதவிகிதம் லிண்டேன் 0.03 சதவிகிதம்
 
              - ஐவர்மெக்டின்       0.2 மி.கி / கி.கி உடல் எடைக்கு
 
             
           
          ஒரு  செல் நுண்ணுயிரி நோய்கள் 
             
            இவற்றில் ஆட்டுக் குட்டிகளை அதிகம்  தாக்கும் இரத்தக் கழிச்சல் நோய் முக்கியமானதாகும். 
             
          அறிகுறிகள் 
          
            
              - காய்ச்சல்
 
              - சளி       மற்றும் இரத்தத்துடன் கழிச்சல்
 
              - வாலைத்       தூக்கி முக்குதல்.
 
             
           
          தடுப்பு  முறை 
          
            
              - தரை       ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
 
              - குட்டிகளுக்கு       பாலில் ஆம்பரோலியம் கலந்துக் கொடுத்தல்
 
              - குட்டிகள்       சானத்தை நக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 10 விழுக்காடு அம்மோனியாவை கொட்டிலில்       தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 
              - கன்று       வீச்சு நோய்
 
              - டெட்டானஸ்
 
              - சுழல்       நோய் 
 
             
           
          ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும்,  குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம். 
          குடற்புழு  நீக்க அட்டவணை 
          
            
              
                                  ஆடுகளின்    வயது                  | 
                பரிந்துரைகள் | 
               
              
                | 2வது மாதம் | 
                நாடாப்புழுக்களுக்கான மருந்து | 
               
              
                | 3வது மாதம் | 
                நாடாப்புழுக்களுக்கான மருந்து | 
               
              
                | 4வது மாதம் | 
                நாடாப்புழுக்களுக்கான மருந்து | 
               
              
                | 5வது மாதம் | 
                உருண்டைப்புழுக்களுக்கான மருந்து | 
               
              
                | 6வது மாதம் | 
                உருண்டைப்புழுக்களுக்கான மருந்து | 
               
              
                | 9வது மாதம் | 
                உருண்டை / நாடாப்புழுக்களுக்கான    மருந்து | 
               
              
                | 12வது மாதம் | 
                தட்டைப் புழுக்களுக்கான மருந்து | 
               
               
           
          ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு  மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு  ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது  ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும். 
          
            
              
                                  மாதம்                  | 
                பரிந்துரைகள் | 
               
              
                | ஜனவரி - மார்ச் | 
                தட்டைப்புழுவிற்கான மருந்து | 
               
              
                | ஏப்ரல் - ஜீன்  | 
                உருளை / நாடாப்புழுக்களுக்கான    மருந்து | 
               
              
                | ஜீலை - செப்டம்பர் | 
                தட்டைப் புழுவிற்கான மருந்து | 
               
              
                | அக்டோபர் - டிசம்பர் | 
                உருளை / நாடாப்புழுக்களுக்கான    மருந்து | 
               
               
           
          ஆடுகளுக்கு  குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை. 
          
            
              - ஆடுகளுக்கு       தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
 
              - தூள்       மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத       மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
 
              - அதிகாலையில்,       வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
 
              - மருந்துக்       கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
 
              - குடிநீரில்       குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
 
              - குடற்புழுக்களின்       வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
 
              - தொடர்ந்து       ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.
 
             
           
          வெள்ளாடுகளுக்கான  தடுப்பூசி அட்டவணை 
          
            
              
                வ. 
                எண்   | 
                நோய்    மற்றும் தடுப்பூசியின் பெயர்  | 
                முதல்    தடுப்பூசி  | 
                தொடர்    தடுப்பூசிகள்  | 
                சிறப்புக்    கவனம்  | 
               
              
                | 1. | 
                பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ்    ரூமினென்ட்ஸ்) | 
                3-4 மாதம் | 
                ஆண்டுக்கு ஒரு முறை | 
                தகுந்த நோய்ப் பாதுகாப்பு    நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும். | 
               
              
                | 2. | 
                கோமாரி நோய் தடுப்பூசி (திசு    வளர் கோமாரித் தடுப்பூசி) | 
                2 மாத வயதில் | 
                ஆண்டுக்கு ஒரு முறை | 
                நோய்க்கிளர்ச்சியின் போது    பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராமகால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம். | 
               
              
                | 3. | 
                துள்ளுமாரி நோய் தடுப்பூசி    (துள்ளுமாரி நோய் தடுப்பூசி : துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி) | 
                6 வார வயதில் | 
                ஆண்டுக்கு ஒரு முறை | 
                மழைக்காலத்திற்கு முன்னரும்,    குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம். | 
               
              
                | 4. | 
                ஆட்டம்மை தடுப்பூசி (வீரியம்    குறைக்கப்பட்ட ஆட்டம்மை உயிர்த் தடுப்பூசி) | 
                3-6 மாத வயதில் (நோய் காணும்    பகுதிகளில்) | 
                ஆண்டுக்கு ஒரு முறை (நோய்க்    காணும் பகுதிகளில் மட்டும்) | 
                கோடைக்காலத்திற்கு முன்னர்    நோய் காணும் பகுதிகளில் ஒரு தடுப்பூசி அவசியம். | 
               
              
                | 5. | 
                அடைப்பான் நோய் தடுப்பூசி 
                  (அடைப்பான் ஸ்டோர் தடுப்பூசி) | 
                நோய்க் கிளர்ச்சியின் போது    மட்டும் 6 மாத வயதில் | 
                நோய் அடிக்கடி தோன்றும் பகுதிகளில்    வருடம் ஒரு முறை, மற்ற பகுதிகளில் தேவையில்லை. | 
                நோய்க்காணும் பகுதிகளில் மழைக்காலத்திற்கு    முன்னர் தடுப்பூசி போடவேண்டும். | 
               
              
                | 6. | 
                டெட்டனஸ் ஜன்னி 
                  தடுப்பூசி (டெட்டனஸ் டாக்சாய்டு    தடுப்பூசி) | 
                குட்டி ஈன 6-8 வாரத்திற்கு    ஒரு முறை | 
                - | 
                குட்டிகள் பிறந்து 48 மணி நேரத்திற்கு    பின். | 
               
              
                | 7. | 
                தொண்டை அடைப்பான் தடுப்பூசி    (பார்மலின் வழி செயலிழக்கப்பட்ட தொண்டை அடைப்பான் தடுப்பூசி) | 
                6 மாத வயதில் நோய் காணும்    பகுதிகளில் மட்டும்) | 
                ஆண்டுக்கு ஒரு முறை | 
                மழைக்காலத்திற்கு முன்னர் ஒரு    தடுப்பூசி அளித்தல் அவசியம். | 
               
               
                      
            
          |