ஆடுகளில் செயற்கை கருத்தரிப்பு முறை 
              அறிமுகம்:
                 
              ஆடுகளில் பெரும்பாலும் செயற்கை கருத்தரிப்பு முறை பால் பண்ணைக்கான ஆடுகளிடம் பின்பற்றப்படுகிறது. எனினும் இறைச்சி ஆடு தயாரிப்பாளர்களும் இம்முறையை தங்கள் மந்தைகளிலும் பின்பற்ற ஆர்வமாய் உள்ளனர். 
              நன்மைகள் :
              
              
                - சிறந்த உயரடுக்கு மரபியல் பொருளை அனைத்து ஆடுகளுக்கும் வழங்க செயற்கை கருத்தரிப்பு முறை ஒரு சிறந்த வழியாகும். 
 
                - சிறந்த கிடா ஆடுகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விந்தணுவை உறையவைத்து உலகம் முழுவதும் சந்ததி  சோதனைக்கு உட்படுத்தலாம். சந்ததி சோதனையின் மூலம் அவற்றின் மரபணு தகுதி குறித்து தீர்மானிக்க முடியும்.  
 
                - உடல் காயம் காரணமாக புணர்ச்சியில் ஈடுபட முடியாத சிறந்த கிடா ஆடுகளை செயற்கை முறை கருத்தரிப்புக்கு பயன்படுத்தலாம். 
 
                - செயற்கை கருத்தரிப்பு முறையில் ஆட்டு உரிமையாளர்கள் புதிய கிடா ஆடுகளை வாங்காமல் மற்றும் அதனை பாராமரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்தி மற்ற மாமிச திண்ணிகள், காயங்கள் அல்லது நோய்க்கு அவற்றை இழக்காமல் அவர்களின் ஆட்டு மந்தையை அதிகரிக்க வாய்ப்பளிக்கின்றது.
 
                - செயற்கை கருத்தரிப்பு முறைக்கு நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.                
 
                - செயற்கை கருத்தரிப்பு முறை ஒரு முக்கியமான இனம் பாதுகாப்பு செயல்முறை ஆகும்.                
 
               
              செயற்கை கருத்தரிப்பு முறையின் குறைபாடுகள்:
              
              
                - செயற்கை கருத்தரிப்பு முறையை கற்ற தொழில் நுட்பவியலாளர் பெண் ஆட்டின் உடற்கூறியல், இனப்பெருக்கம் மற்றும் சினைப்பருவ செயல்பாடுகள் ஆகியவை பற்றிய பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.
 
                - செயற்கை கருத்தரிப்பு முறைக்கு சிறப்பு உபகரணங்கள் மற்றும் வசதிகள் தேவைப்படுகிறது. 
 
                - சினை பருவ காலத்தை அறிவது மிக முக்கியமான செயல்பாடாகும். இக்காலம் சராசரியாக 12 – 4 மணிநேரம் நீடிக்கும். 
 
                - செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் தேவையற்ற மரபணுக்கள் பரவ வாய்ப்பு உள்ளது.
 
               
              பெண் ஆட்டின் இனப்பெருக்க சுழற்சி
              
              பெண் ஆட்டின் சினைப்பருவ கால சுழற்சி சராசரியாக 21 நாட்கள் நீடிக்கும். அக்காலம் 12 முதல் 48 மணி வரை நீடிக்கலாம். செயற்கை கருத்தரிப்பிற்கு பெண் ஆட்டின் சினை பருவ காலத்தை பற்றி அறிந்திருக்க வேண்டும். சினைப்பருவ காலத்திற்கான அறிகுறிகள்: 
              
                  - யோனி வீக்கம் 
 
                  - கிடாவை எதிர்நோக்குதல் 
 
                  - இனச்சேர்க்கைகான கிடாவை தான் மேல் தாவ அனுமதிக்கும். 
 
                  - அடிக்கடி சிறுநீர் கழித்தல் 
 
                  - துவண்ட வாலை ஒதுக்கிக் கொண்டே இருக்கும். 
 
                  - குரலொலிப்பு 
 
                  - யோனியில் கண்ணாடி போன்ற திரவம் ஒழுகுதல். 
 
               
              செயற்கை முறை கருதரிப்பிற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:-
              
              
                - சினைப்பருவத்திற்கு வந்துள்ள பெண் ஆடுகளை கண்டறிந்து செயற்கை கருத்தரிப்பிற்கான சரியான நேரத்தை முடிவு செய்ய வேண்டும். 
 
                - பெண் ஆட்டின் கருப்பை வாய் செயற்கை கருத்தரிப்பு முறைக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும். இதற்கான ஆட்டினை அதற்குரிய ஸ்டான்டில் இருத்தி பின் காலை உயர்த்தி முன்னங்கால் ஆதரவில் கழுத்து மற்றும் தலை தரையில் வைக்கும் நிலையில் இருக்கவேண்டும். 
 
                - தேவைபட்டால் கருவாயை சுத்தமான தண்ணீரில் கழுவி அழுக்கு நீக்கி தூய்மையான காகிதத்தால் துடைக்கலாம். 
 
                - சரியான அளவுள்ள கருப்பை வாய்குழாய் உடலாய்வு விரி உபகரணத்தை விந்தணுக்கொல்லி அல்லாத உராய்வு நீக்கிய உபயோகித்து கருப்பை வாய்க்குழாய்க்குள் செலுத்த வேண்டும். 
 
                - ஒரு கையால் கருவாய் உதடுகளை திறந்து மற்றொரு கையால் கருப்பை வாய்குழாய் உடலாய்வு விரி உபகரணத்தின் மெலிந்த முனையை உட்செலுத்த வேண்டும். 
 
                - அது யோனியை அடைந்தவுடன் யோனி தரையை தொடும்படி சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். 
 
                - கர்பப்பை வாய் தெளிவாக தெரிகிறதா என்று அறிய வெளிச்சமடித்து பார்க்க வேண்டும். 
 
                - கருப்பை வாய்க்குழாய் மடிப்புகளிடமிருந்து கர்பப்பை வாய் தணித்து தெளிவாக தெரிகிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். 
 
                - கண்ணாடி போன்ற திரவத்தின் தன்மையை அறிந்துகொண்டு அதிகமாய் உள்ள திரவத்தை கருப்பை வாய்குழாய் உடலாய்வு விரி உபகரணத்தை கொண்டு வெளியேற்றவும். 
 
                - பெண் ஆடு செயற்கை முறையில் கருத்தரிக்க தயாராக உள்ளதா என்பதை உறுதிபடுத்திய பிறகே விந்தை வெது வெதுப்பாக்க வேண்டும். 
 
                - உறைந்த நிலையில் உள்ள விந்தை உருக்க 95 – 980 F வெப்ப நிலையில் உள்ள சுடுநீர் வேண்டும். 
 
                - குப்பியை தொட்டியின் பனி கோட்டிற்கு மேலே உயர்த்த வேண்டாம். 
 
                - இடுக்கிகளை கொண்டு விந்துள்ள குழாயை வெளியே எடுத்தவுடன் அதனை சுடுநீர் தொட்டியில் வைக்கவேண்டும். 
 
                - நேரடி சூரிய ஒளி படும்படி விந்து குழாயை வைக்கவேண்டாம். 
 
                - வெப்பமூட்டிய விந்தணுவை மறுபடியும் குளிர்விக்க வேண்டாம். 
 
                - விந்தணு உள்ள உறிஞ்சு குழாயை 5 நொடிக்குள் தொட்டியில் இருந்து வெளியே எடுக்கவேண்டும். 
 
                - விந்தணு கொல்லியான புற ஊதா கதிர்கள் படாமல் விந்தணுவை பாதுகாக்க வேண்டும். 
 
                - விந்தணு உறிஞ்சு குழாய் துப்பாக்கி குழாயையும் சூடாக்கவும். 
 
                - விந்தணு உறிஞ்சு குழாயை ஒரு காகிதம் கொண்டு துடைக்கவும். அதன் முனையை வெட்டவும். 
 
                - துப்பாகியில் விந்தணு உறிஞ்சு குழாயை உட்புகுத்திய பின்னர் துப்பாக்கிக்கு நெகிழி உறையை வைக்கவும். 
 
                - துப்பாக்கியை யோனி மற்றும் கருப்பை வாய் வழியாக கருப்பை உட்பகுதியை சென்றடையும் படி செலுத்த வேண்டும். 
 
                - பின்னர் விந்தணுக்களை கவனமாக வெளியேற்ற வேண்டும். 
 
                - கருப்பை உட்சுவர் பகுதியை சென்றடைய முடியாவிட்டால் விந்தணுக்களை கருப்பை வாயின் வெளிப்புறத்திலேயே வெளியேற்ற வேண்டும். இதனை பதிவேட்டில் குறிக்க வேண்டும். 
 
                - பின்னர் கருப்பை வாய்குழாய் உடலாய்வு விரி உபகரணத்தை வெளியெடுக்க வேண்டும். 
 
                - பெண் ஆட்டினை நின்ற நிலையில் சில நிமிடம் நிறுத்திவிட்டு பின்னர் விடுவிக்கவும். 
 
                - செலுத்திய விந்தணு பின்னோக்கி வழிந்தா என்பதை கவனிக்கவும். 
 
                - நுண்ணோக்கி கொண்டு விந்தணு உறிஞ்சு குழாயில் விந்தணு எஞ்சி உள்ளதா என்பதை உறுதி செய்யவும். 
 
                - விந்து இயக்கம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ளவும் 
 
                -  இப்பொழுது பெண் ஆட்டினை ஸ்டான்டில் இருந்து மெதுவாக விடுவிக்கலாம். 
 
                - காலியாக உள்ள விந்தணு உறிஞ்சு குழாயில் உள்ள தகவல்களையும் பதிவேட்டில் எழுதவேண்டும். 
 
               
              பதிவு செய்ய வேண்டியவை : 
              
                  - சினைப்பருவ காலத்தின் நாள் மற்றும் நேரம் 
 
                  - செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்ட தேதி      மற்றும் நேரம் 
 
                  - தொழில்நுட்பவியலாளர் 
 
                  - பெண் ஆடு மற்றும் கிடாவின் இனம் மற்றும் பெயர் 
 
                  - விந்தணு உறிஞ்சு குழாயின் அடையாளத்திற்காக விந்தணு      உறையப்பட்ட நாள் மற்றும் உற்பத்தியாளர் 
 
               
               
              தகவல்:- 
  
                டாக்டர். R. மதிவாணன்,  
                பேராசிரியர் மற்றும் தலைவர்,  
                கால்நடை மற்றும் அறிவியல் துறை,  
                தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை – 3.  
   |