உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் home முதல் பக்கம்

கோடக்ஸ்

கோடக்ஸ் அலிமண்டாரியஸ்

கோடக்ஸ் அலிமண்டாரியஸ் என்பது எல்லா இடங்களிலும் அனைவருக்கும் நல்ல பாதுகாப்பான உணவு என்பதை குறிக்கிறது.

சர்வதேச உணவு வர்த்தகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது ஆனால் முன்பு அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்படவில்லை, விற்பனை மற்றும் நுகர்வு உள்நாட்டில் மட்டுமே இருந்து வந்தது. கடந்த நூற்றாண்டில் சர்வதேச அளவில் உணவு உற்பத்தி வர்த்தகம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது, மற்றும் உணவு பல்வேறு வகைகள் மற்றும்  அதிகளவு உற்பத்தி செய்து இன்று உலகம் முழுவதும் அனுப்படுகிறது.

இந்த கோடக்ஸ் அலிமண்டாரியஸ் சர்வதேச அளவில் உணவு உற்பத்திக்கான தரம், வழிமுறைகள் மற்றும் உணவு பாதுகாப்பிற்கான கோட்பாடுகள், உணவின் தன்மை மற்றும் சர்வதேச அளவில் உணவு உற்பத்தியில் ஒரு நேர்மையையும் வலியுறுத்துகிறது. இதனால் நுகர்வோர் அவர்கள் வாங்கிய பொருள் தரமானது மற்றும் பாதுகாப்பானது என்றும், இறக்குமதியாளர் அவர் இறக்குமதி செய்த பொருள் அவர் விவரக்குறிப்பில் குறிப்பிட்ட தரத்தில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கையை தருகிறது.

உணவு பாதுகாப்பு குறித்த பொது நிறுவனங்களிடையோன பொதுவான பிரச்சனைகள் உலகாளவிய மையமான கோடக்ஸில் நெறிமுறைகள் வைக்கப்படுகிறது. கோடக்ஸின் விவாத கூட்டங்களில் பயோடெக்னாலஜி, பூச்சிமருந்துகள், உணவில் சோக்கப்படும் சேர்க்கைகள் மற்றும் உணவில் எற்படும் மாசுகள் குறித்த விவாதங்கள் விவாதிக்கப்படுகின்றன.

கோடக்ஸ் சிறந்த அறிவியல் அடிப்படையில் தற்சார்புடைய உடல்கள் ரீதியான இடர் மதிப்பீடு அல்லது உணவு விவசாய கழகம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் தற்காலிக ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்குகிறது.
கோடக்ஸில் தன்னார்வமுடன் உறுப்பினர்களாக சேர்வதற்கு வரும் விண்ணப்பங்களுக்காக கோடக்ஸின் நெறிமுறைகள் தரத்தை தேசிய சட்ட அடிப்படையாக பல சந்தர்பங்களில் ஏற்படுத்தியிருக்கிறது.

சுகாதாரம் மற்றும் பயிர் சுகாதார நடவடிக்கைகளை உலக வர்த்தக அமைப்புகள் சுகாதாரம் மற்றும் தாவரநலம்   ஒப்பந்தத்தின் செயல் கோட்பாடுகளின் தொகுப்பானது கோடக்ஸ் இதுவரை  உணவு பாதுகாப்பு வர்த்தக பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீவிர விளைவுகளை கொடுத்துள்ளது என்று கூறுகிறது. உலக வா்த்தக அமைப்புகளில் உறுப்பினராவதற்கு கடுமையான உணவு பாதுகாப்பு செயல்கோட்பாடுகள் அறிவியல் அடிப்படையில் கோடக்ஸ் அறிவுறுத்துகிறது.

கோடக்ஸில் உலக மக்கள் தொகையில் 99% மக்கள் உறுப்பினராக இருக்கின்றனர். வளரும் மற்றும் மேலும் வளரும்  நாடுகள் கோடக்ஸின் செயல்பாடுகளில் பங்கெடுக்கின்றனர்- பல நிகழ்ச்சிகளில் கோடக்ஸின்  நிதியிலிருந்து  , கடும் முயற்சி – மற்றும் பயிற்சியின் மூலம்  – மற்ற நாடுகளிலிருந்து திறமையான பங்கேற்க வைக்கின்றது.  கோடக்ஸில் தீவிர உறுப்பினராக இருக்கும் நாடுகள் அதிநவீன உலக சந்தையில் போட்டியிடவும் மற்றும் தங்கள் நாட்டு மக்கள் உணவு பாதுகாப்பை மேம்படுத்த உதவும் கோடக்ஸ் உதவிபுரிகிறது. அதே நேரத்தில் ஏற்றுமதியாளருக்கு, இறக்குமதியாளரின் தேவை என்ன என்பது தெரியும் மற்றும் இறக்குமதியாளர் தரக்குறைவான ஏற்றுமதியிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.

சர்வதேச  அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு கோடக்ஸின் ஏற்கப்பட்ட தகவல் ஆலோசனை மற்றும்  உதவிகளை கோடக்ஸ் வழங்கி வருகிறது. 1963ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல்  வரும் சவால்களை ஒரு வெளிப்படையான பேச்சுவார்த்தை வழியில் சந்திக்கிறது. சர்வதேச உணவு வர்த்தகத்தில் ஒரு ஆண்டு வர்த்தகம் 200 பில்லியன் டாலர், பில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

உணவு வர்த்தகத்தில் நுகர்வோரின் சுகாதார பாதுகாப்பு மற்றும் நியாயமான சந்தை மரபை உறுதிசெய்கிறது. கோடக்ஸின் அனைத்து தகவல்களும் பொதுவானது மற்றும் இலவசமானது. எந்த கேள்விகளையும் கேட்க கோடக்ஸ் அலுவலகம்  தொடர்பு கொள்ளவும்.

ஆதாரம் : http://www.codexalimentarius.org/about-codex/en/


© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014