AMIS
உழவர் கூட்டமைப்புகள் home முதல் பக்கம்

உழவர் மன்றத்தின்  திட்டங்கள்

உழவர் மன்ற திட்டத்தின் தோற்றம் மற்றும் பின்புலம்
விவசாயிகள் சங்க திட்டத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகள்
புதிய மற்றும் வளர்ந்துவரும் உழவர் மன்றத்தின் பங்களிப்பு
வங்கிக் கிளைகளுக்கு உழவர் மன்றத்தால் ஏற்படும் நன்மைகள்
விவசாயகள் பயிற்சிக்கு நபார்டின் ஆதரவு மற்றும் ஊரக வளர்ச்சி மையங்கள்
நபார்டு நிதி உதவி
உழவர் மன்ற திட்டத்தின் நிறுவன கட்டமைப்பு
உழவர் மன்றம் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள்
உழவர் மன்றங்களின் நீடிப்புத் திறன்

உழவர் மன்ற திட்டத்தின் தோற்றம் மற்றும் பின்புலம்

விவசாயம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெழும்பாக உள்ளது. ஏறக்குறைய 60 சதவிகித நாட்டு மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர் மற்றும் இது உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவிகித பங்கு வகிக்கிறது. பத்தாவது ஐந்தாண்டு திட்டம் மற்றும் தேசிய வேளாண் கொள்கை  கடந்த 50 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சியான 2 சதவிகிதத்திற்கும் குறைவான வேளாண் வளர்ச்சியை 4 சதவிகிதமாக அதிகரிக்க திட்டங்கள் வகுத்துள்ளது. 1990களிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் பின் பசுமை புரட்சி சோர்வடைந்துள்ளது மற்றும் நாட்டின் பல பகுதிகளில் மகசூல் அளவு ஏற்ற இறக்கமாக உள்ளது. உற்பத்தி திறனை மேம்படுத்தி செலவினங்களை குறைப்பதன் மூலம்      வேளாண்மையில் 4 சதவிகித வளாச்சியை நிலைநிறுத்த முடியும்.
            எனவே தற்போது தொழில்நுட்ப மாற்றம், உள்ளீடுகளை திறம்பட உபயோகித்தல், தனியார் மற்றும் பொதுத் துறைகளில் விவசாய முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் சாதகமான பொருளாதார சூழலை உருவாக்குதல் ஆகியவை அவசர தேவையாக உள்ளது.  வேளாண் துறையில் தனித்திறன், அறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள், வேளாண் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க வழி வகை செய்தல், பொது நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், நிதி ஆதாரங்களை உருவாக்குதல் மற்றும் சர்வதேச சந்தையில் போட்டியிடுதல் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும்.   
வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளின் விளை நிலங்களுக்கு கொண்டு செல்ல, வங்கிகளுடன் நல்லுறவை நிறுவ உதவ வேண்டும். விவசாயிகள் சங்க திட்டம் என்பது தரமான உத்திகளுடன் நபார்டு வங்கியால் 1982-ம் ஆண்டு பின்வரும் குறிக்கோளோடு தொடங்கப்பட்டதாகும்.   
“கடன் வழங்குவதன் மூலம் ஊரக பகுதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப பரிமாற்றம், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் திறன் மேம்படுத்துதல்”
இத்திட்டம் ஆரம்பத்தில் “விகாஸ் வாளன்டீர் வாஹினி (விவிவி) திட்டம்” என்று பெயரிடப்பட்டு பின்வரும் ஐந்து கொள்கைகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. “கடன் மூலம் மேம்படுத்துதல்” .

  1. கடனை அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் பொருத்தமான முறையில் பயன்படுத்த வேண்டும்.
  2. கடன் நிபந்தனைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
  3. வேலை திறம்பட செய்யப்பட வேண்டும். இதனால் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம்.
  4. கடன் மூலம் உருவாக்கப்பட்ட கூடுதல் வருமானம் சேமிக்கப்பட வேண்டும்.
  5. கடன் தவணையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்த வேண்டும். இதனால் கடனை மறு பயனீடு செய்ய இயலும்.

இந்த “விவிவி திட்டம்” 2005-ம் ஆண்டு “விவசாயிகள் சங்க திட்டம்” என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.


மேலே

விவசாயிகள் சங்க திட்டத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகள்

விவசாயிகள் சங்கம் விவசாயிகள் அடிமட்டத்தில் முறைசாரா மன்றங்களாக உள்ளன.  அத்தகைய சங்கங்கள் வங்கிகளின் ஊரக கிளைகளால் நபார்டின் நிதி உதவியுடன் வங்கிகள் மற்றும் ஊரக பகுதி விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. திட்டத்தின் விரிவாக்கமாக, அரசு சார்பற்ற அமைப்பு, வேளாண் அறிவியல் நிலையங்கள் போன்ற முகமைகளும்  இணைக்கப்பட்டு தற்போது விவசாயத் திட்டத்தின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கு உதவுகிறது.
விவசாயத் திட்டத்தின் விரிவான செயல்பாடு வருமாறு:

  • வங்கிகளை ஒருங்கிணைத்து உறுப்பினர்களுக்கு எளிதாக கடன் வழங்குதல் மற்றும் உறுப்பினர்கள், வங்கிகள்  நல்லுறவை வளர்த்தல்
  • மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தல் மற்றும் தேவைக்கேற்ப மாதத்திற்கு 2-3 கூட்டங்களை நடத்துதல். உறுப்பினர் அல்லாதவர்களையும்  கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தல்
  • வேளாண் மற்றும் வேளாண் சார்புடைய துறைகளில் வல்லுநர்களின் ஆலோசனைபெறுதல் மற்றும் வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க அலுவலர்கள் மற்றும் மற்ற முகமைகளின் வல்லுநர்கள் கொண்டு தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கின்றது. வகுப்புகளுக்கு அனுபவம் வாய்ந்த உறுப்பினரல்லாத கிராமம் அல்லது அண்டை கிராமத்து விவசாயிகளுக்கும் அழைப்புவிடுத்தல்
  • உள்ளீடு நிறுவன விநியோகஸ்தர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு உறுப்பினர்கள் சார்பாக மொத்தமாக பொருட்களை கொள்முதல் செய்தல்
  •  உறுப்பினர்களின் நன்மைக்காக வேளாண் நடவடிக்கைகான மதிப்ப கூட்டுதல், உள்ளீடுகள் கூட்டு கொள்முதல் செய்தல் மற்றும் வேளாண் விளை பொருட்கள் விற்பனை போன்றவற்றை ஒருங்கிணைத்தல், சுயஉதவிக்குழுக்களுக்கும் உதவித்தொகை வழங்குதல்
  • சமுதாயப் பணிகள், கல்வி, ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள மேலாண்மை போன்ற சமூக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • கிராம உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல்

மேலே

புதிய மற்றும் வளர்ந்துவரும் உழவர் மன்றத்தின் பங்களிப்பு

விவசாயிகள் சங்கத்தின் முக்கிய நோக்கம் கடன் ஆலோசனை, தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சந்தை ஆலோசனை மூலம் ஒட்டுமொத்த விவசாயத்தை மேம்படுத்தவதாகும். தொழில்நுட்ப பரிமாற்ற வசதிகள், விதை கிராமம் கருத்தை வலியுறுத்தல், வேளாண் விரிவாக்க சேவைகளை வலியுறுத்துதல், உள்ளீடுகள் கூட்டு கொள்முதல் மற்றும் விநியோகம், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல், உறுப்பினர்கள் திறனை மேம்படுத்துதல், வர்த்தக பயிற்சியாளராக வழிநடத்துதல், வங்கிகள் வர்த்தக செய்தியாளர், சுய உதவி குழுக்கள் (சுய உதவி குழுக்கள்), உருவாக்குதல், கூட்டு பொறுப்பு குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் / நிறுவனங்கள், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, சமூகம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் முன்னோடியாக செயல்படுதல் போன்றவற்றை செயல்படுத்த உழவர் மன்றம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


மேலே

வங்கிக் கிளைகளுக்கு உழவர் மன்றத்தால் ஏற்படும் நன்மைகள்

உழவர் மன்றம் வங்கி –கடன் பெறுபவர்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது. உழவர் மன்ற திட்டத்தை ஐ.ஐ.எம், லக்னோ மதிப்பீடு செய்து உழவர் மன்றத்தால் வங்கிகளுக்கு ஏற்படும் நன்மைகளை வெளிகொண்டு வந்தது. நன்மைகள் பின்வருமாறு.

  • வைப்புகளை அதிகரிக்கிறது.
  • கடன் ஓட்டம் அதிகரிக்கிறது.
  • புதிய தொழில் வாய்ப்பை உருவாக்குகிறது.
  • நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பரிமாற்றச் செலவினை குறைக்கிறது.
  • கிராமங்களில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
  • வங்கி மற்றும் கடன் பெறுவர் ஆகிய இரண்டு பேருக்கும் வெற்றிச் சூழலை ஏற்படுத்துகிறது.
  • வங்கிகளுக்கு இந்த பயன்களைத் தவிர, உழவர் மன்றங்கள் இலவச கண் பரிசோதனை முகாம், கால்நடை சுகாதார பாதுகாப்பு முகாம், தடுப்பூசி முகாம், சமூக பணிகளான சாலை, அணைகளை சோதனை செய்தல், காடு வளர்ப்பு போன்ற  சில சமூக நல நடவடிக்கைகளுக்கும் கருவியாக உள்ளது.
  • உள்ளீடுகளை மொத்தமாக கொள்முதல் செய்வதன் மூலம் பேரம் பேசும் சக்தியை அதிகரித்தல் மற்றும் அவர்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல்.

இந்திய அரசுடன் உழவர் மன்றத் திட்டம் இணைக்கப்பட்டதின் முக்கியத்துவம்

அனைத்து மண்டல கிராம வங்கிகளும் மத்திய நிதி அமைச்சரின் கீழ் இயங்கி வருகிறது. ஒவ்வொரு வங்கியிலும் குறைந்தது ஒரு உழவர் மன்றமாவது இருக்க வேண்டும். வணிக நன்மைகளின் சூழலில் வங்கிகள் உழவர் மன்றங்களை தத்தெடுத்து வணிக உத்திகளை கையாளுகின்றன.

உழவர் மன்றத்திற்கு நபார்டின் ஆதரவு

உழவர் மன்ற நபார்டு திட்டங்கள் மன்றத்தின் உறுப்பினர்களிடையே தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது மற்றும் பின்வரும் வழிமுறைகள் மூலம் சந்தைப்படுத்துதல் எளிதாகிறது.

  • தலைமை பயிற்சி உட்பட உழவர் மன்ற உறுப்பினர்களின் திறன் மேம்படுத்துதல்
  • தொழில்நுட்பங்கள் / சந்தைகள் இணைத்தல்
  • சுய உதவிக் குழுக்கள் ((SHGs)/ கூட்டு பொறுப்பு குழுக்கள்(JLGs) உருவாக்குதல்
  • உழவர் மன்றம் / உற்பத்தியாளர் குழு / நிறுவனம் – கூட்டமைப்பை உருவாக்குதல்

மேலே

விவசாயகள் பயிற்சிக்கு நபார்டின் ஆதரவு மற்றும் ஊரக வளர்ச்சி மையங்கள் (FTRDCs)

நிறுவனம்சார் முகமை நிறுவிய விவசாயிகள் பயிற்சி மற்றும்  ஊரக வளர்ச்சி மையங்கள் (FTRDCs) தொடர் செலவுகளுக்கு நபார்டு ஆதரவு தருகிறது. நபார்டு உழவர்  தொழில்நுட்ப பரிமாற்ற வைப்பை நிறுவி அதன் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றகளுக்கு வசதிகள் ஏற்படுத்துகிறது மற்றும் சந்தைத் தொடர்புகளை குறிப்பாக உழவர் மன்றம் மூலம் ஏற்படுத்துதல் தவிர உற்பத்தியாளர்கள் குழுக்கள் / நிறுவனங்கள், உழவர் மன்ற கூட்டமைப்புகள் ஆகியவற்றை நிறுவ ஆதரவு அளிக்கிறது.

சிறப்பாக பணிபுரியும் மன்றங்களுக்கு விருதுகள்

விருதுகள் மதிப்பீட்டின் அடிப்படையில் சிறப்பாக பணிபுரியும் மன்றங்களுக்கு மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் வழங்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தை செயல்படுத்த திறன் வளர்த்தல் (CAT)

நாபார்டின் தொழில்நுட்பத்தை செயல்படுத்த திறன் வளர்த்தல் திட்டம் உழவர் மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் மற்றும் மாநிலத்திற்குள் அல்லது வெளி மாநிலங்களுக்கு தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள பயணம் மேற்கொள்ளுதல் போன்றவற்றிறகு பயன்படுகிறது.

நிதி உதவி

நிதி இரணடு தவணைகளில் வழங்கப்படுகிறது. அதாவது 50% முன்தொகையாக வழங்கப்படுகிறது மற்றும் மீதமுள்ள 50% நிதி செலவை ஈடு செய்ய வழங்கப்படுகிறது.

ஆதரவளிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளித்தல்

உழவர் மன்றங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்தும் (வங்கி அல்லாத நிறுவனங்கள்) நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.


மேலே

நபார்டு நிதி உதவி

அனைத்து நிறுவனங்களாலும் நிறுவப்பட்ட உழவர் மன்றங்களுக்கு சீராக வருடத்திற்கு ரூ.10,000/- மூன்று வருடங்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிதி கீழ்வரும் செலவுகளை மேற்கொள்ள பயன்படுகிறது.

வ.எண் விபரம் தொகை (ரூ)
1. நிறுவுதல் 2,000.00
2. அடிப்படை நிலை அறிமுகப் பயிற்சி திட்டம் (BLOTP) / பயிற்சி 5,000.00
3. நிபுணர்களை சந்திக்க  (வருடத்திற்கு 2 திட்டங்கள்) 3,000.00
  மொத்தம் 10,000.00

மேலும், வங்கிகள் தவிர மற்ற உழவர் மன்றத்தை ஊக்குவிக்கும் முகமைகளுக்கு (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / வேளாண் அறிவியல் நிலையங்கள் / Aus போன்றவை) ஆண்டிற்கு ரூ.2,000/- ஊக்கத்தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. வங்கிகள் தவிர மற்ற உழவர் மன்றத்தை ஊக்குவிக்கும் முகமைகளுக்கு (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / வேளாண் அறிவியல் நிலையங்கள் / Aus போன்றவை) மலைப்பாங்கான / தொலைதூர / நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் முகமைகளுக்கு ஆண்டிற்கு ரூ.3,000/- ஊக்கத்தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

முடங்கிய மன்றங்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் புத்துயிர் அளித்தல்

செயல்படாத உழவர் மன்றங்களுக்கு புத்துயிர் அளிக்க நபார்டு புத்துயிர் அளித்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிதியுதவியானது முடங்கிய மன்றங்களின் செலவுகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. அதாவது முடங்கிய மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றம் அதன் கிளை மேலாளார்கள் தொழில்நுட்ப பயணம் மேற்கொள்ளுதல் போன்றவை அடங்கும்.


மேலே

உழவர் மன்ற திட்டத்தின் நிறுவன கட்டமைப்பு

உழவர் மன்றங்களை யார் உருவாக்கலாம்

அனைத்து நிறுவன முகமைகள் (வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகள்) மற்றும் அமைப்புகள் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பஞ்சாயத்து நிறுவனங்கள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், ஆத்மா, தபால் நிலையங்கள் போன்றவை) உழவர் மன்றங்கள் தொடங்க தகுதி கொண்டவை.

அமைப்பு

உழவர் மன்றம் கிராமங்களில் முறைசாரா அமைப்பு ஆகும். கிராமங்கள் / கிராம ஒன்றியம் மற்றும் பொதுவாக வங்கியின் செயல்பாட்டிற்குட்பட்ட பகுதிகளில் உழவர் மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன. உழவர் மன்றத்தில் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு உறுப்பினர்கள் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கலாம். ஒவ்வொரு மன்றத்திற்கும் மூன்று அலுவலக நிர்வாகிகள் இருக்க வேண்டும். ஒரு தலைமை ஒருங்கிணைப்பாளர் / தன்னார்வலர் மூன்றாவது காசாளர். அலுவலக நிர்வாகிகள் ஜனநாயக அடிப்படையில் மன்ற உறுப்பிணர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அலுவலக நிர்வாகிகள் மன்றம் இயங்கும் பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். அரசு சாரா நிறுவனம் மற்றும் உழவர் மன்றத்தை மேம்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அலுவலக நிர்வாகிகளாக இருக்க முடியாது.

அலுவலக நிர்வாகிகளின் பணிகள்:

அலுவலக நிர்வாகிகளின் முக்கயி செயல்பாடுகளாவன கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தல், நிபுணர்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தல், கணக்கு புத்தகங்களை பராமரித்தல், வங்கி ஒருங்கிணைப்பு, மாநில அரசுகளின் வரி துறை, சம்பந்தப்பட்ட அனைத்தையும் முறையாக பராமரித்தல் போன்றவை.

உறுப்பினர் தகுதி

தவறிழைத்தவர்களைத் தவிர அனைத்து கிராம மக்களும் உறுப்பினராகலாம். உறுப்பினர்களின்  பங்களிப்பு மூலம் மன்றம் தன் வளங்களை பெருக்கிக் கொள்ளலாம், உள்ளீடுகளை மொத்தமாக கொள்முதல் செய்தல் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு கூட்டு சந்தையிடுதல், வர்த்தக பயிற்சியாளராக செயல்படுதல் (BFs), காப்பீடு மற்றும் பிற சேவைகளை முகவராக இருத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.


மேலே

உழவர் மன்றம் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள்

  • வங்கிக் கிளை மன்றத்தை நேரடியாக ஊக்குவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் முகமைகளான வேளாண் அறிவியல் நிலையங்கள் (KVKs), வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs), குழும நிறுவனங்கள் போன்றவற்றை நியமிக்கலாம்.
  • எல்லா அடிப்படை நிறுவனங்களுகம் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs), மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள் (KVKs), ஆத்மா, தபால் நிலையங்கள் ஆகியவை) உழவர் மன்றங்கள் தொடங்குவதற்கு தகுதியுடையவை.
  • வங்கிக் கிளையின் செயல்பாட்டு பகுதிக்குள் உழவர் மன்றங்கள் தொடங்க ஏற்ற கிராமத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • முறையாக கடனை பயன்படுத்த்ககூடிய திறமையான குழுவாக உழைக்கக்கூடிய சில முற்போக்கு விவசாயிகள் மற்றும் கடன்பெறுபவர்களை தேர்வு செய்ய வேண்டும். (மன்றத்தின் வெற்றி உறுப்பினர்களின் சரியான தேர்வைப் பொறுத்து அமையும்).
  • தலைமை ஒருங்கிணைப்பாளர்/தன்னார்வலர் / தலைவர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்/தன்னார்வலர் / துணை தலைவர் மற்றும் காசாளர் போன்ற அலுவலக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். இவை கூட்டுத் தலைமை மற்றும் மன்றத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
  • தொடங்கும் முன் நபார்டு உதவியுடன் அவர்களுக்கு சார்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். (மண்டல அலுவலகம் / வங்கியில் பயிற்சி பெற்ற அதிகாரிகள்).
  •  மாதாந்திர கூட்டத்தை கூட்டுவதற்கு உறுப்பினர்களை ஊக்குவித்தல், உபயோகமுள்ள கலந்துரையாடலுக்கு வழிகாட்டுதல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
  • கடன் மற்றும் கடன் அல்லாத தேவைகளை அடையாளம் காண ஊக்குவித்தல் (பயிற்சி, சமூக பொருளாதார, கிராம உள்கட்டமைப்பு போன்றவை), திட்டத்திற்கான நடவடிக்கையை தயாரித்தல் மற்றும் அதற்கேற்ப வல்லுநர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தல், கலந்தாய்வு, தேவைசார் நடவடிக்கைகள் எடுத்தல் போன்றவற்றை அரசு துணையுடன் அல்லது மற்ற முகமைகளின் மூலம் ஏற்பாடு செய்தல் 
  • உறுப்பினர் பதிவேடு,  கூட்ட பதிவேடு, கூட்ட நடவடிக்கைக் குறிப்பேடு மற்றும் கணக்கு புத்தகங்கள்  உறுப்பினர்களால்  பராமரிக்கப்படுகிறதா  என்பதை உறுதி செய்தல்.
  • செயல்திறன் அளவீடு செய்தல் மற்றும் ஆண்டுதோறும் மன்றத்தின் பங்களிப்பை அளவிடுதல்.
  • கடன் அளிப்பதற்கு மற்றும் திரும்பப் பெறுவதற்கு மட்டுமல்லாமல் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்தவும், சிறுகடன், நிதி நிலைத் தீர்வுகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்தல் போன்றவற்றிற்கு கருவியாக பயன்படுத்தலாம்.

ஒப்புதல் கடிதம்

உழவர் மன்றங்களுக்கு முதல் மூன்று வருடங்களுக்கு நபார்டு நிதியுதவி அளிக்கிறது. நிதியுதவி வங்கிகள் / முகமைகள் நபார்டின் உதவிகாலமான  மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரும் இரண்டு ஆண்டுகளுக்கு மன்றத்திற்கு ஆதரவு அளிக்க ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

ஒரு முகமையின் கீழ் உருவாக்கப்படும் மன்றங்களின் எண்ணிக்கை : எண்ணிக்கை வரையறை இல்லை.

உழவர் மன்றங்களை மதிப்பிடுதல்

உழவர் மன்றங்களை உழவர் மன்ற கூட்டமைப்பு அல்லது உற்பத்தியாளர் குழுக்கள் /நிறுவனங்களாக மாற்ற நிதியுதவி அளிக்கும் முகமைகள் வகுக்கப்பட்ட அளவீடுகளைக் கொண்டு மதிப்பீடு செய்த பின்னர் முடிவு செய்யப்படும்.


மேலே

உழவர் மன்றங்களின் நீடிப்புத் திறன்

வருமானம் மற்றும் சீரான நடவடிக்கைகள் ஆகியவை உழவர் மன்றம் நீடிக்க உதவும் திறவுகோலாகும். கீழ்வரும் நடவடிக்கைகள் மூலம் உழவர் மன்றங்களின் நீடிப்புத் திறனை அதிகரிக்கலாம்.

  • அடையாள உறுப்பினர் கட்டணம் (உறுப்பினர்கள் முடிவு செய்ய வேண்டும்)
  • மாத சேமிப்பு (மன்ற உறுப்பினர்கள் முடிவு செய்ய வேண்டும்)
  • சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பரிந்துரைப்பதற்கான சேவை கட்டணம் 0.5% மற்றும் 1%. (குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் மன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொள்ளலாம்.
  • காப்பீடு பொருட்களை விற்பனை செய்ய முகவர் சேவைக் கட்டணம்/ஊக்கத்தொகை பெறுதல் (தனிப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் ஒப்பந்தப்படி)
  • வணிக செய்தியாளர் / வணிக வழிநடத்துபவராக செயல்படுவதற்கு முகவர் சேவைக் கட்டணம் (வங்கிளின் தனிப்பட்ட ஒப்புதல்படி)
  • அரசு மற்றும் கூட்டாண்மை அமைப்பு போன்ற முகமைகளுக்கு சேவை கட்டணம் போன்றவை.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நிதியுதவி முகமைகளின் உதவி 3-5 ஆண்டுகளில் முடியும்பொழுது உழவர் மன்றங்கள் தங்கள் முயற்சியிலேயே செயலாற்ற முடியும்.


மேலே

ஆதாரம் : https://www.nabard.org/english/home.aspx

Updated on : Nov 2013


© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014