சுங்கவரி: 
                        இறக்குமதி  செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்கவரி:  
                  
                  அறிமுகம்:  
                  இறக்குமதி வரி என்பது அநேகமாக இந்தியாவுக்கு இறக்குமதி  செய்யப்படும் அனைத்துப் பொருட்கள், உணவு தானியங்கள், உரம், உயிர்காக்கும் மருந்துகள்  மற்றும் உபகரணங்கள் மற்றும் பலவற்றிற்க்கு விதிக்கப்படுகிறது. மேலும் நாட்டின் வருமானத்திற்கும்,  பொருட்களை கொண்டுவருவதற்கும், அதற்குரிய விலையை அட்டவணைபடுத்தி 1975ம் ஆண்டு சுங்கவரி  ஆணை பிறப்பிக்கப்பட்டது.  
                      கடல்  வழி இறக்குமதி: 
                    இந்திய  - தீபகற்பபகுதியில் 12 நாட்டின் கல்மயில்களுக்கு உள்ளே நுழையும் அனைத்து பொருட்களுக்கும்  வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம் பொருட்களை ஒரே கப்பலில் இருந்து மற்ற கப்பல்களுக்கு  மாற்றும்போது வரி விதிக்கப்படுவதில்லை.  
  அடிப்படை  வரி:  
                    அடிப்படை  வரியானது சுங்கவரி ஆணையத்தின் கீழ் (1962) வசூலிக்கப்படுகிறது. இவ்வரி பொருட்களுக்குத்  தகுந்தவாறு 5% முதல் 40% வரை வேறுபடுகிறது. இவ்வரி அட்டவணை படுத்தப்பட்டு நிர்ணயம்  செய்யப்படுகிறது. மத்திய அரசு, இவ்வட்டவணையில் இருந்து எப்பொருளையும் நீக்கம் செய்ய  அதிகாரம் உள்ளது. 
  கூடுதலான  சுங்கவரி:  
                    கூடுதலான சுங்கவரியானது, கணக்கீடு  பணியாளர்கள் மூலம், இந்திய பொருட்கள் மற்றும் சில உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்படுகிறது.  இவை சுங்கவரி ஆணை எண்.3(1) ல் உள்ளது. அதே போல் சுங்கவரி ஆணை எண்.102/2007-ன் படி  செப்டம்பர் 2007-ல் இருந்து சுங்கவரி எண்.3(1) பகுதி எண் பொருட்களுக்கு இவ்விதி தளர்த்தப்படுகிறது.  
  சிறப்பு  கூடுதல் வரி:  
                    சிறப்பு கூடுதல் வரியானது, உள்ளூர்  பொருட்களுக்கு 4% விற்பனை வரியாக விதிக்கப்படுகிறது. இவ்வரியானது,  
                  
                    - வரி மதிப்பு
 
                    - அடிப்படை வரி
 
                    - இதர கட்டணம்
 
                    - கூடுதல் வரி (சுங்கவரி ஆணை பகுதி 3,  1975) 
 
                   
                  இவற்றுடன் சேர்த்து வசூளிக்கப்படுகிறது. 
                      சேர்த்து  வைத்தலுக்கு எதிரான வரி: 
                    “சேர்த்து  வைத்தல்” எனப்படுவது பொருளின் உற்பத்தி செலவு, சந்தை விலை குறையும் போதும் மற்றும்  பொருளின் சந்தை மதிப்பு குறைவாக உள்ளபோதும், சேர்த்து வைப்பது ஆகும். ஆகவே இந்திய  அரசு சேர்த்து வைத்தலுக்கு எதிராக வழிகாட்டுநிலையும் மற்றும் ஆணைகளையும் உருவாக்கியது.  இந்தியசுங்க வரிச்சட்டம் 1975-ன் படி, அதன் பகுதிகளான 9A, 9B, மற்றும் 9C - ஆனது சேர்த்து  வைத்தலுக்கு எதிரான வரியைப்பற்றி விளக்கி உள்ளது. மேலும் இவை 1994-ம் ஆண்டு வணிக மற்றும்  வரிகளுக்கான பொது ஒப்பந்தத்தின் மூலம் ஆறாவது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளது.  
  இறக்குமதி  பொருட்களில் சுங்கத்துறையை நிவர்த்தி செய்தல்:  
                  
                  அறிமுகம்:  
                    இறக்குமதி  செய்யப்படும் அனைத்துப் பொருட்களும், சுங்கத்துறையின் முறையான மதிப்பீடு மற்றும் பரிசோதனைக்கு  உட்படுத்தப்படுகிறது. இவை, முறையாக வரி விதிக்கவும், சட்ட விரோதமாக இறக்குமதியைத்  தடுக்கவும் உதவுகிறது. மேலும் “ இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண்” இல்லாதவர்களுக்கு  இறக்குமதி உரிமம் அளிப்பதில்லை. இவை வெளிநாட்டு வர்த்தகப்பொது இயக்ககம் மூலம் அளிக்கப்படுகிறது.  இறக்குமதியாளர் சொந்த உபயோகத்திற்கு இறக்குமதி செய்ய “இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு  எண்” தேவை இல்லை.  
  அனுமதி  இரசீது:  
                    அனுமதி இரசீதை கப்பல் ஏற்றுமதி  இரசீது எனவும் அழைக்கலாம். இவை இறக்குமதி (அ) ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் மதிப்பு,  ஆகியவற்றைக் கொண்டு ஏற்றுமதியாளர் (அ) இறக்குமதியாளர் சுங்கத் துறைக்கு அனுப்பவேண்டும்.  அனுமதி இரசீதை 4 பிரதியாக எடுத்து, அவற்றை  
                  
                    - சுங்கத்துறைக்கான அசல் மற்றும் பிரதி
 
                    - இறக்குமதியாளர்களுக்கு 
 
                    - வங்கிக்கு பயன்படுத்த வேண்டும் 
 
                   
                  சில பொருட்களை “மின்னணு தகவல்  பரிமாற்றம்” முறை மூலம் வர்த்தகம் செய்தால் வழக்கமான அனுமதி இரசீது தேவையின்றி கணினி  மூலமே செயல் முறை படுத்த முடியும். ஆனால், சுங்க அதிகாரிகள் ஆய்வுக்கு சில ஆவணங்களை  கேட்கும் போது அனுமதி இரசீதானது காட்ட வேண்டியது அவசியமாகும். “மின்னணு தகவல் பரிமாற்றம்  அற்ற” இரசீதானது இறக்குமதியாளரால் நிரப்பப்பட்டால் கீழ்கண்ட ஆவணங்களும் அதனுடன் இணைக்க  வேண்டும் 
                  
                    - கையெழுத்திட்ட பற்றுச்சீட்டு
 
                    - பொருட்களின் பட்டியல்
 
                    - அனுப்பப்பட்ட பொருளுக்கான இரசீது 
 
                    - “வர்த்தக மற்றும் வரிகளுக்கான பொது  ஒப்பந்தம்” பற்றிய விண்ணப்பம்
 
                    - சரியாக நிரப்பப்பட்டிருக்க வேண்டும் 
 
                    - இறக்குமதியாளர்கள் / சுங்க துறைக்கான  ஏஜென்ட் தீர்வை
 
                    - உரிமங்கள் பெற்றிருத்தல் (அவசியமானால்) 
 
                    - கடன் சான்றிதழ் / வங்கி வளரவோலை (அவசியமானால்) 
 
                    - காப்பீடு ஆவணங்கள்
 
                    - இறக்குமதி உரிமம்
 
                    - தொழிற்சாலைக்கான உரிமம் (தேவைப்பட்டால்) 
 
                    - இரசாயண பரிசோதனை முடிவுகள் 
 
                    - குறிப்பிட்ட ஒரு பணிக்கான விதிவிலக்கு  பற்றிய ஆணை
 
                    - டியூட்டி என்டைட்டில்மண்ட் பாஸ்புக்  / டியூட்டி எக்ஸம்ஸன் என்டைட்டில்மண்ட் திட்ட புத்தகம்
 
                    - அட்டவனை, பட்டியல், இயந்திரங்கள் அசல்  அவற்றின் காபங்கள் இரசாயனம் பற்றிய முகவுரை
 
                    - இயந்திரங்களின் பாகங்கள் மதிப்பு, மற்றும்  பகுதிகள்
 
                    - வரியைத் திரும்ப பெற வேண்டி சான்றிதழ் 
 
                    - தடையில்லாச் சான்றிதழ்
 
                   
                  இரசீதில்  மாற்றம்:  
                    அனுமதி  இரசீதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அம்மாறுதல்களை கூடுதல் / துணை வரி ஆணையர் மூலம்  மாற்றிட வேண்டும்.  
  Green  channel facility: 
                    சில  முக்கியமான இறக்குமதியாளர்கள் இம்முறையைப் பின்பற்றுகிறார்கள். இவற்றில் அனுமதி இரசீதுடன்,  அறிவிக்கும் விண்ணப்பத்தை இணைத்து அவற்றை அளிக்கும்போது சேர்த்து அளித்து விட வேண்டும்.  இம்முறையில் சாதாரணமான கண்காணிக்கும் முறை பயன்படுத்தப்படுவதில்லை.  
  வரியைச்  செலுத்துதல்:  
                    இறக்குமதி வரியானது, சம்பந்தப்பட்ட  வங்கி மூலம், TR-வங்கி  இரசீது மூலம் செலுத்தப்படுகிறது.  பல்வேறு வங்கிகளும் வரியைச் செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மிகவும் கவனமாகப்  பார்த்து பிறகு வரியைச் செலுத்த வேண்டும். 
  சரக்கு  ஏற்றுவதற்கு முன்பே அனுமதி இரசீது வழங்குதல்: 
                    விரைவாக  சரக்குகளை ஏற்றுவதற்கு, மேற்கொண்ட இரசீதானது ஆணை எண்.46-ன் படி சரக்கு ஏற்றுவதற்கு  முன்பே அனமதி இரசீது வழங்கப்படுகிறது. மேலும் இந்த இரசீதானது கொடுக்கப்பட்ட நாளிலிருந்து  30 நாட்கள் வரையே செல்லுபடியாகும். 
  சிறப்புத்  திட்டங்கள்:  
                    டியூட்டி எக்ஸம்ஸன் என்டைட்டில்மண்ட் சானிறதழ் மற்றும்  ஏற்றுமதி சார்பான பிரிவு மூலம் இறக்குமதி செய்வதற்கு குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் சுங்க  அதிகாரிகளால் வழங்கப்படுகின்றன. பின்பு குறிப்பிட்ட ஒப்பந்த காலம் முடிவுற்றவுடன் மீண்டும்  அவ்வொப்பந்தத்தை புதுபிக்க வேண்டும். ஒப்பந்தம் செய்வதற்கான கட்டணம், வரியின் அளவுக்கு  காணப்படும். வங்கியின் உத்திரவாதமும் இவ்ஒப்பந்தத்திற்குத் தேவைப்படுகிறது. எப்படிப்பார்த்தாலும்,  வங்கி உத்திரவாதமானது இறக்குமதியாளரின் நிலைமையைப் பொறுத்தது.  
  கிட்டங்கி,  பிணைப்பிற்கான அனுமதி இரசீது:  
                    கிட்டங்கியில்  இருந்து சரக்குகளை எடுப்பதற்குத் தனியே அனுமதி இரசீது உள்ளது. இந்த இரசீதை, மற்ற அனுமதி  இரசீது போலவே வரியைச் செலுத்திப் பெற வேண்டும். 
                   |