Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

வேளாண் தொழிற்துறை அமைப்புகள்

1. ஒரு வழித்தோன்றல் ஒப்பந்தம் என்றால் என்ன?
வழித்தோன்றல் ஒப்பந்தம் இதன்மதிப்பு ஒரு அடிப்படை சொத்து மதிப்பிலிருந்து பெறப்பட்ட செயலாக்கத்தக்க உடன்பாடாகும்; அடிப்படை சொத்தானது பொருட்கள், விலை மதிப்பற்ற உலோக நாணயம், பத்திரம், பங்கு, அல்லது பொருள்களின்  குறியீடுகள், சரக்கிருப்பு மற்றும் பலவாக இருக்கம். வழித்தோன்றல் ஒப்பந்தம் நான்கு முக்கிய எடுத்துகாட்டுகளை கொண்டிருக்கிறது அவை, பங்குகள் முன்னோக்கி, எதிரி்காலம் மற்றும் தேர்ந்தெடுக்கும் உரிமை.

2. ஒரு முன்னோக்கிய ஒப்பந்தம் என்ன?
முன்னோக்கி ஒப்பந்தம் சட்டப்படி பொருட்களின் விநியோகம் அல்லது அடிப்படை சொத்தின்  விலை ஒப்பந்தத்தில் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் வழங்குவதாகும். ஒப்பந்த ஒழுங்குமுறை சட்டம், 1952, அனைத்து ஒப்பந்தமும் பொருள் விநியோகம், பண பரிவர்த்தனையில் உள்ள வேறுபாடு அல்லது பொருள் விநியோகம்செய்த 11 நாட்களுக்கு பிறகு  பணம் செலுத்தும் ஒப்பந்தம் ஆகும்.

3. தரப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன?
எதிர்கால ஒப்பந்தங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இதை வேறு விதமாக கூறுவதானால், ஒப்பந்ததாரர்கள் எதிர்கால ஒப்பந்தங்கள் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டாம், ஆனால் தரப்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் செலாவணி வீதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

4. மாற்றியமைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் என்றால் என்ன?
முன்னோக்கு ஒப்பந்தங்கள் (எதிர்காலம் தவிர) மாற்றியமைக்கப்பட்டவை. வேறு விதமாக கூறுவதானால், முன்னோக்கு ஒப்பந்தங்கள் அடிப்படையில் இரு பிரிவினரிடையே தன்னிச்சையாக ஒப்பந்தம் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டவை.

5. பண்டக எதிர்காலம் என்றால் என்ன?

பண்டக எதிர்கால ஒப்பந்தம் எதிர்கால தேதியில் குறிப்பிட்ட பொருளை ஒரு குறிப்பிட்ட அளவு வாங்கல் /விற்றல் ஆகும்.  இது இன்டெக்ஸ் ஃபியூச்சர் மற்றும் சரக்கின் எதிர்காலம் ஆனால் பொருளின் அடிப்படையில்  ஏற்படும்  நிகழ்வு

பண்டக எதிர்கால வர்த்தகம் சந்தையில் அனைத்து பொருட்களின் சங்கிலி தொடர்பாளர்களின்  சந்தை விலை கண்டுபிடிப்பு கருவி மற்றம் விலை இடர் மேலாண்மையாகும்.  பருவகால உற்பத்தி மற்றும் அழுகும் தன்மை, இந்தியாவில் உள்ள பொதுவான வேளாண் பொருட்களின் தற்போதை பொருளின் விலை சுழற்சி, அறுவடை நேரத்தில் தங்கள் பொருளின் விலை குறைந்த மற்றும் சிக்கன பருவத்தில் உச்ச நிலை அடைதல். எனவே, அறுவடை போது நுகர்வோர்களால் ஏற்பட்ட உடனடி தேவையால் உபரியான வழங்கல்,  செயலாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள்  பொருட்களின் சந்தை மற்றும் பருவகாலங்களில் தேவை அதகரிக்கும் போது வழங்கல் நேர்மறையாக பாதிக்கும்போது விவசாயிகள் அறுவடையின் போது தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த விலையும் மற்றும் நுகர்வோர் அவர்களின் தேவை பொறுத்து பருவகாலத்தில் பொருளுக்கு அதிக விலையும் கொடுக்க வேண்டியிருக்கிறது. முன்னோக்கி /எதிர்காலம் வேளாண் பொருளுக்கான சந்தைகளில் வழங்கல் – தேவை இவற்றிற்கு ஏற்றத்தாழ்வு சமப்படுத்தும் மாதிரியான ஒரு கருவியை அமைப்பதாகும். எதிர்கால சந்தைகளில் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் பயனடையும் வகையில் அமைய வேண்டும்.

இந்தியாவில் எதிர்கால பண்டக சந்தை மதிப்பீடு
இந்திய எதிர்கால பண்டக சந்தை நூற்றாண்டுக்கும் மேலாக முதலில் அமைக்கப்பட்ட சந்தை 1875ல் ஏற்படுத்தப்பட்டதாகும், மும்பை பருத்தி வர்த்தகம் அமைப்பின் கீழ் பருத்தி வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. எண்ணெய் வித்துக்களுக்கான பண்டக சந்தைகள் 1900 ஆம் ஆண்டு மும்பையில் ஏற்படுத்தப்பட்டது. சணலிற்கான முன்னோக்கி வர்த்தகம் மற்றும் சணல் பொருட்களுக்கான வர்த்தகம் கல்கத்தாவில் 1912ல் ஏற்படுத்தப்பட்டது. 1913லிருந்து கோதுமைக்கான முன்னோக்கி சந்தை ஹப்பூரில் ஏற்படுத்தப்பட்டது, மற்றும் பொன் வர்த்தகம் 1920ல் மும்பைில் ஏற்படுத்தப்பட்டது. இவற்றால் இதர பயிர்களுக்கும் நிறுவனத்தின் எதிர்கால வர்த்தகத்தை ஏற்படுத்தியது. பண்டகத்தில் பெரும் எண்ணிக்கையிலான எதிர்கால பண்டக மாற்று வர்த்தகமானது உலக போர் காலங்களில் இந்திய அரசு சட்டத்தால் தடைசெய்யப்பட்டன. 1960 ல் பண்டக எதிர்கால வர்த்தகம் பெரும்பாலும் தடை செய்யப்பட்டன மற்றும் எதிர்கால வர்த்தகம் இரண்டு சிறு பண்டகங்களுக்கு மட்டுமே தொடர்ந்தன அவை மிளகு மற்றும் மஞ்சள்.

குஸ்ரோ குழுவின் (1980) பரிந்துரைகளுக்கு பிறகு, பொருளாதார சீர்த்திருத்தங்கள் அறிமுகம் (1991) மற்றும் இந்தியாவில் கெப்ரா குழுவின் எதிர்கால வர்த்தகம் தொடர்பான பரிந்துரைகள் அறிமுகம் (1994). ஏப்ரல் 1999ல் எதிர்கால வர்த்தகத்தில் பல்வேறு சமையல் எண்ணெய் வித்துக்களுக்கும் வர்த்தகம் ஏற்படுத்தப்பட்டது. ஜீலை 2000ல் தேசிய வேளாண் கொள்கை அறிவிக்கப்பட்டது மற்றும் 2002-2003ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையில் மாண்புமிகு நிதியமைச்சர் எதிர்கால வர்த்தகத்தில் அரசு தீர்வை சுட்டிக்காட்டினார்.எதிர்கால வர்த்தகத்தில் சர்க்கரை 2001ல் அனுமதிக்கப்பட்டது மற்றும் அரசு அறிக்கை 1.4.2003ல் எதிர்கால வர்த்தக அறிவிப்பில் அனைத்து பண்டகத்திற்குமான அனுமதி வழங்கப்பட்டது.

எதிர்கால ஒப்பந்தத்திற்கு ஏற்ற பண்டகங்கள்
அனைத்து பண்டகங்களும் எதிர்கால வர்த்தகத்திற்கு ஏற்றது இல்லை. எதிர்கால வர்த்தகத்திற்கு ஏற்ற பண்டகங்கள் சந்தையில் அதிக போட்டி உள்ளது, அதாவது பண்டகங்கள் வழங்கலுக்கு அதிக அளவிலான தேவை உள்ளது – எந்த தனிப்பட்ட அல்லது குழு நபர்களிடையே பண்டகங்களுக்கான தேவை அல்லது வழங்கலுக்கு ஏற்ற நிலை இருக்க வேண்டும், மற்றும் அதற்கு ஏற்ற விலையும் இருக்க வேண்டும். விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.பண்டக சந்தையில் அரசாங்க கட்டுப்பாடுகளிலிருந்து கணிசமான சுதந்திரம் இருக்க வேண்டும். பண்டகங்களுக்கு தனிப்பட்ட வாழ்நாள், தரம், தரக்கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

விலை நிர்ணயித்தல்
இந்திய அரசின் வேளாண் செலவு மற்றும் விலை நிர்ணயிக்கும் ஆணையம் பல்வேறு விவசாய பொருட்களுக்கு (CACP திட்டத்தில்)  பரிந்துரைத்தல்படி விலை நிர்ணயம் அறிவிக்கப்படுகிறது.

விலை பரிந்துரைத்தலின் பண்புகள்

  • விவசாயிகள் புதிய தொழில்நுட்பம் மற்றும் அதிகளவு உற்பத்திக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்த சலுகைகள் தேவை.
  • நிலம் மற்றும் ஏனைய உற்பத்தி மூலங்களின் பயன்படுத்துவதில் ஒரு அறிவார்ந்த  உறுதி தேவை.
  • பொருளாதாரத்தின் மற்ற விலைக் கொள்கைகளின் விளைவு பொறுத்து விலை.

ஆணைக்குழு இரண்டு முறைகளில் விலை நிர்வகிக்கிறது. அதாவது, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் கொள்முதல் விலை.
இந்தியாவின் முக்கிய பண்டபரிமாற்றம்

  • தேசிய பல்முக பண்ட மற்றும் இந்திய செலாவணி, மும்பை (NCDEX).
  • பல்முக பண்டக பரிமாற்றம், இந்திய லிமிடெட் (MCX),
  • தேசிய பல்முக பண்டக பரிமாற்றம், அகமதாபாத் (NMCE).
  • இந்திய பண்டக பரிமாற்றம் (ICEX)
  • தேசிய உடனடி பரிமாற்றம் லிமிடட் (NSEL)
  •  ACE வழித்தோன்றல் & பொருள் பரிமாற்றம் லிமிடட்
  • NHRDF
  • UCX
  • CME குழு – விவசாய பொருட்கள் உற்பத்தி  

                 
உலகம் முழுவதும் உள்ள முக்கிய பண்டக பரிமாற்றம்

  • நியூயார்க் வணிக பரிமாற்றம் (NYMEX)
  • சிகாகோ வர்த்தக மையம் (CBOT)
  • லண்டன், உலோகம் பரிமாற்றம் (LME)
  • சிகாகோ தேர்ந்தெடுப்பு பரிமாற்ற வாரியம் (CBOE)
  • டோகியோ பண்டக பரிமாற்றம் (TCE)
  • மலேசிய வழித்தோன்றல் பரிமாற்றம் (MDEX)
  • பண்டகங்கள் பரிமாற்றம் (COMEX)

ஆதாரம்:
முனைவர்.T. அழகுமணி, Ph.D.,
பேராசிரியர்
சந்தை விரிவாக்க துறை
விரிவாக்க கல்வி இயக்ககம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்-641003
பண்டகசந்தை ஒரு ஆரம்ப 'கையேடு (உடனடி மற்றும் எதிர்காலம்)
இணையதளம்: http://www.karvycomtrade.com/         

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015