Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

வேளாண் மருந்தகம் (Agri Clinic) மற்றும் வேளாண் வணிக (Agri Business) மையங்கள் (AC&ABC) இந்திய அரசின் வேளாண் அமைச்சரவை ஆனது வேளாண்மை பட்டதாரிகளின் தனித்தன்மை வாய்ந்த தொழிலநுட்ப அறிவை மேம்படுத்தும் திட்டத்தினை தொடங்கி வைத்தது. இந்த வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையத்தை எந்தக் கட்டுப்பாடும் மற்றும் கல்விப் பயின்று முடித்தவர்கள் என்பது தேவையற்றது. கல்லூரி முடித்த புதிய பட்டதாரிகள் (அ) பட்டதாரி அல்லாதவர்கள், வேலைப்பணியாளர்கள் (அ) வேலையில்லாதவர்கள் போனற் யார் வேண்டுமானர்லும் இந்த மையத்தினை தொடங்கி விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை உயர்த்துதல்.

- வேளாண் அமைச்சரவை, இந்திய அரசு

சிறு விவசாயிகளின் வேளாண் வணிகக் கூட்டுறவு புது டெல்லி, இந்த முகாமானது இலவச பயிற்சியை வேளாண் பட்டதாரிகள் மற்றம் மற்ற படிப்புகளான தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை அறிவியல், பால் பண்ணை, கோழிப்பண்ணை, மீன் வளர்ப்பு போன்ற பட்டதாரிகளுக்கும் அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் தொழில் முனைவோர்கள் வேளாண் மருந்தகம் வேளாண் வணிக மையமானது அமைக்கப்படுகிறது. இதற்கு SFACயும் பல்வேறு வகையில் உதவுகிறது.

- சிறு விவசாயிகளின் வேளாண் வணிகக்கூட்டுறவு

தேசிய வேளாண்மை வரிவாக்க மேலாண்மை நிறுவனம், ஹைதராபாத் தேசத்திலுள்ள நிறுவனங்களை தேர்வு செய்து வேளாண் தொழல் முனைவோருக்கு இரண்டு மாத பயிற்சி நிகழ்ச்சியை இந்நிறுவனம் நடத்துகிறது. இந்தப் பயிற்சியின் போது வேளாண் தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குதல் மற்றும் தொழில் மேலாண்மையைப் பற்றியும், செயல் இடத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதைப் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

- மேனேஜ் (MANAGE), ஹைதராபாத்

தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD), 23.07.2001 அன்று வேளாண் வணிக மையத்தை தொடங்குவதற்கு கடன்களை இவ்வங்கி கொடுத்தது. தனிநபரின் முகப்பு திட்டத்திற்கு ரூபாய் 10 லட்சமும் மற்றும் கூட்டுத் திட்டத்திற்கு ரூபாய் 50 லட்சமும் கடனை, வங்கியானது தருகிறது.

- நபார்டு (NABARD)

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றிகேள்வி பதில் புகைப்படங்கள்தொடர்பு கொள்ள

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014