Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

வேளாண் பட்டதாரிகள் வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையங்கள் அமைப்பதற்கான நிதியின் மாற்று நிதித் திட்டம் பரந்த வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளும் நிபந்தனைகளும்

மாண்புமிகு நிதி அமைச்சர் 2001-02 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் சொற்பொழிவின் நிலை “வேளாண் துறைக்கு அதிகமான ஆதரவு மற்றும் விரிவாக்க பணியின் தேவையைப் பொருத்து வேளாண்மைய்ில் மாற்றங்களும், நவீனப்படுத்துதலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் நபார்டுன் உதவியுடன் வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையங்களனாது வேளாண் பட்டதாரிகள் மூலம் தொடங்கப்பட்டது. இந்த மையமானது மண் மற்றும் உள்ளீட்டு பொருட்களின் பரிசோதனை வசதிகளையும் மற்ற ஆலோசனை பணிணையும் தருகிறது. இந்த மையத்தின் மூலம் தொழில்நுட்ப மாற்றம் மற்றும் வரிவாக்க பணிகளும் மேலும் நுட்பமாக பயிற்சி பெற்ற நபர்களுக்கு சுய வேலை வாய்ப்பு வசதியையும் அளிக்கிறது. மையங்களை தொடங்குவதற்கு வங்கிகள் மூலம் கொடுக்கப்படும் கடன்களுக்கு எனத்  தனிப்பட்ட விதிமுறைகள் உடன் மாற்று நிதியும் நபார்ட் (NABARD)  மூலம் கொடுக்கப்படுகிறது.
வேளாண் பட்டதாரிகள், வேளாண் மருந்தகம் மற்றும் வணிக மையங்கள் அமைப்பதற்கான நிதித் திட்டத்தினை நபார்ட் (NABARD) ஆனது வேளாண் அமைச்சரவை, இந்திய அரசாங்க ஆலோசித்து வடிவமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் குறிக்கோள் யாதெனில் தொழில்நுட்ப மாற்று செயல்பாட்டினைத் தூண்டுதல் மூலம் விரிவாக்கக் கட்டமைப்பினை அதிகரிப்பது மற்றும் இடுபொருட்களின் விநியோகம் அதன் சேவையையும் குறை நிரப்பு செய்வதாகும். இதற்கு விவசாயிகள் இப்பொழுது மாநில முகாம்களை பொருத்துள்ளனர். வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையங்களின் நிதிக்கான வழி காட்டுதல், வழிமுறைகளும்  நிபந்தனைகளும் மற்றும் வழியலகு ஆனது பின்வருமாறு

குறிக்கோள்கள்

  • அரசு விரிவாக்கத் திட்டத்தின் முயற்சிகளை நிறைவேற்றுவது.
  • இடுபொருட்களின் விநியோகமும், அதன் சேவையும் விவசாயிகளுக்கு தேவைப்படும் போது கிடைக்கமாறு செய்வது.
  • வேளாண் பட்டதாரிகளுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் வேளாண்மை பகுதியில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்துதல்.

எண்ணம் / வரையறைகள்

வேளாண் மருந்தகம்

விவசாயிகளுக்கு பயிர் வளர்ப்பின் பயிற்சிகள் தொழில்நுட்ப வளர்ச்சி, பூச்சிகள் மற்றும் நோய்களில் இருந்து பயிர் பாதுகாப்பு, சந்தை நிலவரங்களும் வியாபாரத்தில் உள்ள வெவ்வேறு பயிர்களின் விலைகளும் மற்றும் கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கு என மருத்துவ சேவைகள் போன்றவற்றின் மூலம் பயிற்சிகள் / கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிப்பது வேளாண் மருந்தகமாகும் (பற்றிய ஆலோசனைகளும் வல்லுநர்களின் பணிகளும்).

வேளாண் வணிக மையங்கள்

வேளாண் வணிக மையங்கள் என்பது இடுபொருட்களின் விநியோகம், பண்ணைக் கருவிகளை வாடகைக்கு எடுப்பது மற்றும் மற்ற சேவைகளை செய்யத் திட்டமிடுதரல் ஆகும். தொழில்  நிறுவனத்தின் தொடங்குவதனை அதிகரிக்க, வேளாண் பட்டதாரிகள் வேளாண்  மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் வேளாண் மருந்தகம் / வணிக மையங்களை அமைப்பது ஆகும்.

தகுதிகள்

வேளாண்மை மற்றும் வேளாண்மையைச் சார்ந்த தோட்டக்கலை, வனவியல், கால்நடை மருத்துவம், கால்நடை பேணுதல், பால் பண்ணை, கோழிப்பண்ணை, மீன் பண்ணை மற்றும் மற்ற செயல்பாடுகளில் பட்டதாரிப் பட்டம் பெற்றவர்களே இத்திட்டத்தின் மூலம் மையங்களை தொடங்கலாம்.

செயல் திட்டங்கள்

இத்திட்டத்தின் மதிப்பெண் ஆனது தேவை / இடம் (அல்லது) மாநிலத்தின் சாத்தியம் போன்றவற்றை பொருத்ததாகும்.

செயல் திட்டத்தின் செலவு மற்றும் பாதுகாப்பு

செயல்திட்டமானது வேளாண்மைப் பட்டதாரிகள் தனியாகவோ அல்லது கூட்டாக / குழுக்களாக இருந்த செயல்படுகிறது. தனிநபரின் செயல் திட்டத்தின் உயர்ந்த அளவு செலவானது ரூபாய் 10 லட்சம் மற்றும் குழுக்களாக செயல்படுத் செயல் திட்டத்தின் உயர்ந்த அளவு செலவானது ரூபாய் 50 லட்சம் ஆகும். குழுக்களானது 5 நபர்களைக் கொண்டதாகவும், இந்தக் குழுக்களில் ஒருத்தர் தொழில் முன்னேற்றம் மற்றும் மேலாண்மையில் தகுதிகள் அல்லது அனுபவங்கள் உடைய மேலாண்மைப் பட்டதாரியாக இருத்தல்வேண்டும். மேலும் ரூபாய் 25 லட்சம் வரை மாற்று நிதியை பெறலாம். ரூபாய் 15 லட்சம் வரை மாற்று நிதியை பெறலாம். ரூபாய் 25 லட்சங்கள் மதிப்புள்ள செயல்திட்டத்தினை நபார்டு (NABARD)க்கு முன்னதாகவே கடனுக்காக வைக்கலாம்.

இறுதிநிலை பணம் விளிம்பு பணம்

RBI மாதிரியின் அடிப்படையில் RBI ஆனது ரூபாய் 5 லட்சங்களை கடன்களுக்கு தேவையான விளிம்பு பணத்தினைத் தருகிறது.
வட்டி விகிதம்
RBIயின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வங்கிகள் நிர்ணயிக்கப்படுகிறது.

உத்திரவாதம்
RBIயின் அடிப்படையில்

திரும்ப செலுத்துதல்

செயல்திட்டங்களின் அடிப்படையில் கடன்களை திருப்பிச் செலுத்தும் கால அளவானது 5 வருடங்களில் இருந்து 10 வருடங்களாக இருக்கலாம். திரும்ப செலுத்தும் கால அளவானது, அதிகபட்ச 2 வருடங்கள் கருணை காலத்தினையும் சேர்த்துக் கொள்கிறது. (இந்தக் கருணை காலமானது தனிப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நிதி வங்கியானது நிர்ணயிக்கிறது).

கடன் பெறுபவர்களை தேர்ந்தெடுத்தல்

கடன் பெறுபவர்கள் மற்றும் செயல் திட்டத்தின் இடத்தினை, வங்கிகள் வேளாண்மைப் பல்கலைக்கழகம் / KVK உடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.
நபார்டின் மாற்று நிதிக்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும்
மாற்று நிதியின் பங்கீட்டளவு
100 சதவீதமான வங்கிக்கடன்
மாற்று நிதியின் வட்டி விகிதம்

  • நபார்ட் ஆனது காலநிலையின் அடிப்படையில் நிர்ணயிக்கிறது. (http://www.nabard.org/roles/promo_fs.htm)
  • நபார்டின் மென் கடன் நிதி உதவி அடிப்படையில் விளிம்பு பண உதவி
  • கடன் பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வங்கிகளான 50 சதவீதம் விளிம்பு பணத்தை அதிகரித்துள்ளது.

வங்கியானது எதிர்பார்த்த கடன் பெறுபவர்களின் மூலம் திருப்தி அடைந்துள்ளது. ஆனால் நபார்ட் மூலம் கொடுக்கப்படும் விளிம்பு பணத்தின் தேவையினை கடன் பெறுபவர்கள் சந்திக்க இயலாத நிலையின் உள்ளனர். எனவே தான் வங்கிகளானது வட்டி விகிதம் அல்லாமல் கடன்களை கொடுக்கிறது. ஆனால் வங்கியானது 3 சதவீதம் (வருடம் ஒரு தடவை) கட்டணத்தினை பயன்பெறுபவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. மேலும் விவரங்களை அறிய நபார்ட் வழிகாட்டுகளை அதன் இணையதளமான http://www.nabard.org./roles/promo_fs.htmy ல் தொடர்பு கொள்ளுங்கள்.

தகுதிகளின் தரங்கள்

நபார்டின் விதிமுறைகளின் படி வங்கிகளானது மாற்று நிதியை பெறுவதற்கு என தகுதிகள் காலநிலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

மாற்று நிதியின் வீதம்

தன்னியங்கி மாற்று நிதி வசதி (ARF)ன் அடிப்படையில் மாற்று நிதியானது நிடிக்கப்படுகிறது. மேலும செயல்திட்டத்தின் முதலீடு மற்றும் மாற்று நிதியின் தொகையை கணக்கில் கொண்டு முன்னதாகவே கடனானது அனுமதிக்கப்படுகிறது.

பொதுவானவை

மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளுமான வங்கிகள் நடைமுறைகள் மற்றும் கடன் கொடுக்கும் விதங்களின் அடிப்படையில் செயல்திட்டத்திற்கு கடன்கொடுப்பது மற்றும் தேவையான மாறுபாடுகளை உடைய மாற்று நிதி திட்டம் போன்றவற்றினை வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையங்களின் நிதிக்கு பிரயோகிக்கத் தக்க உள்ளது.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றிகேள்வி பதில் புகைப்படங்கள்தொடர்பு கொள்ள

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014