Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனங்கள்

மூன்று நிறுவனங்களில்  சிறு அளவு தொழில் முனைவோரின் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனங்களானது இந்திய தொழில் முனைவோர் நிறுவனம் (IIE), கெளஹாதி, தேசிய சிறு தொழில் விரிவுப்படுத்தும் பயிற்சி நிறுவனம் (NISIET), ஹைதராபாத், தொழில் முனைவோர் மற்றும் சிற தொழில் வளர்ச்சி நிறுவனம் (NIESBUD), புது டெல்லி, மணம் மற்றும் சுவை மணம் வளர்ச்சி மையம் (FFDC) கன்னாஉச் அரசாங்கத்தால் பெற்றது. மேலும் UNDP / UNIDO மற்றும் UP/UNDP/UNIDO அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் தொழில்நுட்ப அறிவு மற்றும் முக்கியமான கருவிகள் மூலமும் எப்எப்டிசி ஆனது முழு அமைப்பைப் பெற்றது. உத்திரப்பிரதேச அரசாங்கம் நில மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை தரும் பொழுது இந்திய அரசாங்கமும் கருவிகள் மற்றும் செலவுகளில் பங்களிக்கிறது. இந்த அரசாங்கத்தில் முக்கியக் குறிக்கோள் யாதெனில் விவசாயிகள் மற்றும் தொழில்களில் வாசனையுள்ள பொருட்களை விவசாயம் செய்து அதனை பதப்படுத்துதல் போன்றவற்றில் பல்வேறு வகையில் உதவி அளித்து உள்ளூர் மற்றும் உலகச் சந்தையில் இந்த வாசனைப் பொருட்களை மேம்படுத்துவதாகும்.

ஏற்றுமதி செயல்முறை வட்டாரம் (EPZ)

இந்த ஏற்றுமதி செயல்முறை வட்டாரமானது அரசாங்கத்தின் வருமானம், செலவு, கடன் தடைகளான வீட்டு வரி பகுதிகளில் இருந்து தனிப்பட்டதாகும். இதன் மூலம் சுதந்திரமான சூழ்நிலையில் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரசாங்கமான நொய்டா (உத்திரப்பிரதேசம்), சென்னை (தமிழ்நாடு), பாட்னா (மேற்கு வங்காளம்) மற்றும் விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) போன்ற நான்கு இடங்களில் ஏற்றுமதி செயல்முறை வட்டாரத்தை அமைத்துள்ளது.

சிறப்பு பொருளாதார வட்டாரம் (SEZ)


அரசாங்க ஏற்றுமதி மற்றும் இறக்கும் கொள்கையானது 31, மார்ச், 2000 அன்று சிறப்பு பொருளாதார வட்டாத்தின் மூலம் ஏற்றுமதியை உயர்த்த புதிய  திட்டத்தை வழிவகுத்துள்ளது. இந்தக் கொள்கைகளின்  மூலம் SEZயினை பொது மக்கள், தனியார், கூட்டுத் தொகுதி அல்லது தேசிய அரசாங்கங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கொள்கையானது இறக்கு ஏற்றுமதி செயல்முறை வட்டாரத்தினை சிறப்புப் பொருளாதார வட்டாரமாக மாற்றுவதனை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் அரசாங்கமானது காண்ட்லா (குஜராத்), சாண்டா குரூஸ் (மகாராஷ்டிரா), கொச்சின் (கேரளா) போன்ற இடங்களில் உள்ள EPZ ஆனது SEZ ஆக 1.11.2000 அன்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்றுமதி நோக்குப் பிரிவு (EOU)

ஏற்றுமதி நோக்குப் பிரிவு திட்டமானது 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, EPZ திட்டத்தினை பூர்த்திச் செய்கிறது. இந்தப் பிரிவும் கூட ஒரே மாதிரியான உற்பத்தியை உள்ளடக்கியது. ஆனால் இந்தப் பிரிவானது மூலப்பொருட்கள், ஏற்றுமரி துறைமுகங்கள், இட வசதிகளை குறிப்பால் உணர்த்தல் மற்றும் தொழில் நுட்பத்திறன், தொழில் அடிப்படை இருப்பு மற்றும் திட்டப்பணிக்காக தேவைப்படும் அதிக நிலம் போன்ற பரந்த உரிமையை உள்ளடக்கியது. மொத்தம் 1536 பிரிவுகளை இந்தத் திட்டத்தின் மூலம் மார்ச் 2001 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

பொருட்களின் விகிதம்

ஏற்றுமதி நோக்கப் பிரிவானது துணிகள் மற்றும் நூல், உணவு பதப்படுத்துதல், மின்சாரம், இரசாயனம், வேதிப் பொருட்கள், நெகிழ்வான பொருட்கள் (பிளாஸ்டிக்), கருங்கல் மற்றும் கனிமங்கள் போன்றவற்றின் ஏற்றுமதியில்  ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான பிரிவுகளான  தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற இடங்களில் அமைந்துள்ளது.

ஏற்றுமதி மேம்பாட்டு தொழில் பூங்கா (EPIP) திட்டம்

ஏற்றுமதி மேம்பாட்டு தொழில் பூங்கா (EPIP) திட்டமானது 1993-94ல் தொடங்கப்பட்டு மாநில அரசாங்கத்துடன் இணைந்து உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டமானது 75 சதவிகிதம் அடிப்படை வசதிகளை செய்வதற்கு ஆகும். முதன்மை செலவுகளைத் தருகிறது. அதாவது ரூபாய் 10 கோடியை ஒவ்வொரு வகைக்கு மத்திய அரசாங்கம் தேசிய அரசாங்கம் கொடுத்துள்ளது.

புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

தமிழ்நாடு அரசாங்கம் ஏப்ரல் 2002ல் புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து, ரூபாய் 35 லட்சம் முதலீட்டை கொண்ட வேளாண் வணிகமானது ஒவ்வொரு தொகுதிக்கு ஒரு பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 385 வேளாண் வணிகப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையங்கள்

சிறு  விவசாயிகள் வேளாண் வணிக கூட்டுறவானது மேனேஜ் (MANAGE) உடன் கூட்டமைப்பை ஏற்படுத்தி வேளாண் மருந்தகம் மற்றும் வேளாண் வணிக மையங்கள் அமைக்க விருப்பமான இருப்பவர்களுக்கு, புதிய திட்டத்தினை உருவாக்கி அதன் மூலம் இருப்பவர்களுக்கு, புதிய திட்டத்தினை உருவாக்கி அதன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது மற்றும் வேளாண் வணிக மையமானது ஒருவர் அல்லது ஐந்து நபர் கொண்ட குழுக்களுக்கு (நான்கு விவசாய மற்றும் விவசாய சம்பந்தமான பட்டதாரிகள் மற்றும் ஒன்று மேலாண்மைப் பட்டதாரி) கடன் உதவியானது ரூபாய் 10 லட்சமானது தனிநபருக்கும் மற்றும் ரூபாய் 50 லட்சமானது ஐந்து நபர் கொண்ட குழுக்குளுக்கும் அளிக்கிறது.

வழிநெறிமுறைகள்

சட்ட விதிமுறைகள்

போட்டி இடுதல், விலை நிர்ணயித்தல், பகிர்மானத்திற்கு ஏற்பாடு செய்தல், விளம்பரத்திற்கு போன்றவற்றில் ஒழுங்கான நீர்வினை சட்ட வழிமுறைகளின் படி வழிவகுக்கப்படுகிறது. தேசத்தின் சட்ட சூழ்நிலை மற்றும் நீதித்துறையின் சட்ட எல்லை போன்றவற்றின் ஒவ்வொரு மேலாளரும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இந்திய தொழல்களின் அடிப்படையில் கீழ்வரும் சட்டங்களானது மிக முக்கியமானதாகும்.

  1. இந்திய ஒப்பந்தம் சட்டம், 1872
  2. தொழிற்சட்டம், 1948
  3.  குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1948
  4. பாதுகாப்பு ஒப்பந்த வழிமுறைச் சட்டம், 1956 (இப்பொழுது செபி மற்றும் வியாபாரப் பொருட்களின் குறியீட்டு சட்டம், 1958).
  5. நிறுவனங்களின் சட்டம், 1956.
  6. வர்த்தக மற்றும் வியாபார பொருட்களின் அடையாளக் குறியீட்டுச் சட்டம், 1958.
  7. தனியுரிமை மற்றும் தடை செய்யப்பட்ட வர்த்தக பயிற்சிகள் சட்டம், 1969.
  8. நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974
  9. வாயு (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981
  10. நலிவடைந்த தொழில் நிறுவனங்களின் (சிறப்பு முன்னேற்பாடு) சட்டம், 1974.
  11. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986
  12. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986
  13. இந்தியப் பாதுகாப்பு மற்றும் பரிமாற்று வாரியச் சட்டம், 1992
  14. கூட்டு நிறுவன வரி, மறைமுக வரிகளான வரி, சுங்க வரி அல்லது இறக்குமதி வரி, விற்பனை வரி மற்றும் சொத்து வரி போன்றவற்றின் வரி விகித்தல் சட்டம்.

பன்னாட்டு நியம அமைப்பு (ISO) மதிப்பீடுகள்

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் படி தொழில்நுட்பத் தடைகளில் இருந்து வர்த்தகத்தை வலியுறுத்தி, பன்னாட்டு அமைப்பானது தொடங்கப்பட்டு தொழில்நுட்பம் அடித்தளத்தினை உலகச் சந்தைக்கு கொடுக்கிறது.
எப்பொழுது இது நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அப்போது எதிர்ப்புகள் குறைக்கப்பட்டு ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். இது நிகழும் போது வெகுமதியளிக்கும் தர மேலாண்மை அமைப்பான ஐஎஸ்ஓ 9000 மதிப்பீடுகள் என்ற புதிய பதிப்பானது மேம்படுத்தப்படுகிறது. இப்பொழுது இது ஒரு முக்கியமான பன்னாட்டு அளவில் பொருட்கள் மற்றும் சேவையானது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
உற்பத்திப் பிரிவில் தர மேலாண்மை அமைப்பிற்காக ஐஎஸ்ஓ 9000 மதிப்பீடானது விரிவுபடுத்தப்படுகிறது. இதே திட்டத்தினை சேவைகள் மற்றும் மென் பொருள் களத்தின் விரிவுக்காக பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி (அ) சேவை (அ) மென்பொருள் போன்ற எந்தக் களத்திலும் பொதுவான அமைப்பின் / திட்டத்தின் மூலம் விரிவுபடுத்துவது மற்றும் அதே நேரத்தில் பயன்படுத்தும் நபரின் தொழிலுக்கு பொருத்தமானதாக இருத்தல் வேண்டும். இந்த நேரத்தில் சுற்றுச்சூழல் மேலாண்மை மதிப்பீடானது வந்தது. இதனை கருத்தில் கொண்டு ஐஎஸ்ஓ 9000 மதிப்பீடானது 1994ல் மாற்றி அமைக்கப்பட்டது. ஆண்டு 2000ல் திருத்தி அமைக்கும் பொழுது ஐஎஸ்ஓவின் தொழில்நுட்பஅமைப்பு TC 176 ஆனது கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இது 2000 ஆண்டு முடிவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு, ஆனால் இப்பொழுது நீர்மானத்திற்கு கொண்டு வந்து, அனைத்து அவசியமான சிறப்பியல்புகள் உடன் நடைமுறையில் உள்ளது.

மாற்றங்கள்

இப்பொழுது ஐஎஸ்ஓ 9000 மதிப்பீடுகளின் கடும்பத்தில் மொத்தம் 20 மதிப்பீடுகள் மற்றும் பதிவேடுகள் உள்ளது. ஆண்டின் ஐஎஸ்ஓ 9000 தர மேலாண்மை மதிப்பீடுகள் மட்டும் அல்லாமல் முதன்மை மதிப்பீடுகளும் பின்வருமாறு

  1. ஐஎஸ்ஓ 9000 தர மேலாண்மை அமைப்புகள் அடிப்படை மற்றும் சொல்வளம்
  2. ஐஎஸ்ஓ 9000 தர மேலாண்மை அமைப்புகள் - தேவைகள்
  3. ஐஎஸ்ஓ 9000 தர மேலாண்மை அமைப்புகள் - செயல்பாட்டுகளுக்கு வழிகாட்டுதல்

மேம்பாடு
ஐஎஸ்ஓ 9001, ஐஎஸ்ஓ 9002,  மற்றும் ஐஎஸ்ஓ 9003, மதிப்பீடுகளானது இணைந்து ஐஎஸ்ஓ 9001 மதிப்பீடாக உள்ளது. மதிப்பினை குறைக்கப்பட்ட ஐஎஸ்ஓ 9001 தேவைகளானது விடுபட்ட பகுதிக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதால், இது தனிப்பட்ட அமைப்புக்கு பயன்படுத்துவதில்லை. இது மட்டுமல்லாமல் மூன்று மதிப்பீடுகளான ஐஎஸ்ஓ 14010, ஐஎஸ்ஓ 14011 மற்றும் ஐஎஸ்ஓ 14012 சுற்றுச்சூழல் ஆய்தல் மதிப்பீடுகள் ஒன்றாக இணைந்து ஐஎஸ்ஓ 10011 ஆக, உருவாக்கப்பட்டது.
திருத்தங்களை உடைய கொள்கைகள்
கொள்கைகளில் திருத்தங்களின் செயல்முறையானது

  1. அனைத்துப் பொருள் மற்றும் சேவை பகுதிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் அளவுகள் போன்றவற்றிற்கு பொருத்தமாக இருத்தல்.
  2. இயல்பான பயன்பாடு, மொழியின் தன்மை, உடனுக்குடன் மொழிப் பெயர்ப்பு மற்றும் எளிதாக உணர்ந்து கொள்ளுதல்.
  3. திறமையான முறையில் தர மேலாண்மை அமைப்பினை செயல்முறை அமைப்பிற்கு இணைப்பது
  4. செயல்பாடு மேம்பாட்டிற்கான இயல்பான படிக்கற்களை முன்னேற்பாடு செய்தல்
  5. இடையறாது மேம்பாடு மட்டும் வாடிக்கையாளரின் திருப்தி போன்றவற்றிற்கான மகத்துவமிக்க செயல்கள்.
  6. சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக, ஐஎஸ்ஓ 14000 என்ற மற்ற மேலாண்மை அமைப்புடன் இணைந்து இருத்தல்.
  7. முதன்மை தேவைக்காக முரண்பாடற்ற அடிப்படை மற்றும் முகவரியைக் கொடுப்பது மற்றும் வான்வெளித்தூய்மை, தானே இயங்கி, மருந்தக சாதனம், தொலை தொடர்பு மற்றும் பல போன்ற சிறப்பான பிரிவுகள் உடைய ஈடுபாடு கொண்ட அமைப்புக்களின் தேவை.

செய்முறை வடிவம்
திருத்தி அமைக்கப்பட்ட ஐஎஸ்ஓ 9000 தர மேலாண்மை அமைப்பானது நடைமுறையில் உள்ள ஐஎஸ்ஓ 9001ன் 20 மூலங்களில் தீவிரமான மாற்றும் மறுநிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நான்கு பாகங்களாக உள்ளது.

  1. நிர்வாக பொறுப்பு
  2. இடுபொருட்களின் நிர்வாகம்
  3. விளைப் பொருட்கள் மற்றும் / அல்லது சேவை உணர்தல்
  4. அளவிடுதல், ஆராய்தல் மற்றும் மேம்படுத்துதல்

செய்முறை வடிவமானது, டெயிங் PDCA (திட்டம், செய், பரிசோதனை மற்றம செயலாற்றல்)ன் தரம் மேம்பாட்டினை ஒத்து உள்ளது. இந்த மாதிரி வடிவமைப்பினை உடைய செய்முறை வடிவத்தினை எந்த தொழில் அல்லது சேவை போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மேம்பாட்டின் எண்ணமானது திறமையான அமைப்பினை உருவாக்கத் தூண்டுதல், வியாபாரப் போட்டியில் சாதகமான முடிவு மற்றும் வாங்குவோரின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு பதில் அளிப்பது ஆகும்.

வாங்குவோரின் திருப்தி, தொடர்ச்சியான மேம்பாட்டிற்காக கொடுக்கப்படும் தகவல்களை போன்றவற்றை மதிப்பறிதல் போன்ற மற்ற பகுதிகளிலும் அளவிடப்படுகிறது. இடுபொருட்களின் விதிமுறைகளானது, தேவைப்படும் பொழுது கொடுப்பதும் மற்றும் அத்தியாவசியமாக கருதப்படும் அனைத்து இடுபொருட்களை கிடைக்கும்படி செய்வது, அடிப்படை வசதிகள் மற்றும் பணியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவையாகும். சொல்லியலில் கூட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விநியோகஸ்தர்கள் என்ற பழைய இயல்பான சொல்லாக உள்ளது. அதே போல் உற்பத்திப் பொருள் என்ற பழைய சொல்லிற்கு பதிலாக உற்பத்தி பொருள் மற்றும் சேவை என்று தெரிவித்துள்ளது. இந்த நட்பார்ந்த மாற்றங்களான இயல்பான பயன்பாடு மற்றும் சொற்களுக்கு அர்த்தத்தையும் கொண்டது. மேலும் ஐஎஸ்ஓ 14001 சுற்றுச்சூழல் மதிப்பீடுகளுடன் ஒத்து இருந்து, சொற்களின் உட்பிரிவினை தகவல் இணைப்புகளை சம்பந்தப்படுத்தி தேடுதலானது பெற முடிகிறது.

மாறுதல்

இது மாறும் திட்டத்தின் வழிமுறைகளின் உதவியுடன் மாற்றங்களைக் கொண்ட ஐஎஸ்ஓ பதிவேடு ஆகும். திருத்தம் செய்யும் செய்தியான இந்திய நிர்வாக மதிப்பீடுகள் (BIS) மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த மதிப்பீடானது, ஐஎஸ்ஓயின் தொழில்நுட்ப அமைப்பு ஆலோசனைகளின் முதன்மை பங்கு ஆகும். இன்றும்  கூட புதிய மதிப்பீடுகளானது, பழையனவற்றினை ஒன்றுபடுத்துதல் மற்றும சுருக்குவது ஆகும். மாற்றப்படுவது சுலபமானது ஆனால்  இந்த சுழற்சிக்கு தேவையான கால அளவு இருத்தல்வேண்டும்.
செய்முறை வடிவமானது வாங்குவோரின் தேவையை பொருத்தும் மற்றம் ஒர தொழில்ன் வளர்ச்சிக்கு உதவுவது ஆகும். ஒரு மாற்றங்களை கொண்ட உண்மையான சாரமாகும். கடந்த பழைய வாங்குவோரின் திருப்தியை அளவீடுகள் வெளிவற்றும், அப்போது தான் தொடர்ச்சியான மேம்பாட்டினை தொடங்கியது. ஆனால் இந்த புதிய மதிப்பீடானது தெளிவாக மற்றும் மூலங்களின் அவசியமான பகுதியாக உள்ளது. மேலும் நிர்வாக பொறுப்பின் கீழ் வழங்குவோர்கள், உரிமையாளர்கள், வேலையாட்கள் மற்றும் சங்கம் போன்ற விருப்பம் உள்ளவர்களைகும் உள்ளடக்கியுள்ளது.
இந்தியாவில் 5000 தொழில் நிறுவனமானது ஐஎஸ்ஓ 9000 சான்றளிப்பை பெற்றுள்ளது. இது ஆரம்பமற்ற வரையறை உடைய பொருள் அல்லது அதன் பணிணை அடைவதற்கான ஒரு பொதுவான இடமாகும். ஆனால் சில சமயங்களில் சான்றளிப்பு கலாச்சாரம் ஆனது மெதுவாகவே செயல்படுகிறது. ஒரு தடவை சான்றளிப்பு பெற்ற பின், அமைப்புகளானது திருப்தியடைந்துள்ளது மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டில் எந்த வித தாக்கமும் ஈராது. வாங்குவோரின் தேவைகள் ஆனாத சான்றளிப்பில் இருக்காது ஆனால் பொருட்கள் மற்றும் அதன் பணியின் மேம்பாட்டு வசதிகளானது இடம் பெயரும் போது எந்த அமைப்பும் தானாகவே சிறந்த சான்றளிப்பை பெறுகிறது.
இது தான் ஜப்பானியர்கள் மற்றும் கொரியர்களின் வெற்றியின்  ரகசியமாகும். இந்தப் புதிய மதிப்பீடுகளானது நடைமுறைப்பகுதி மற்றும் அமைப்புகளின் தொடர்ச்சியான வகையில் பொருட்கள் மற்றும அதன் பணிகள் வாங்குவோர்களுக்கு கிடைப்பதற்கு சக்தியூட்டுதல் போன்ற பல்வேறு உதவிகளைச் செய்கிறது.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு