Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

வேளாண் வணிகம்

வேளாண்மை சந்தையில் முகவர்களின் ஈடுபாடு

வேளாண்மை உற்பத்தியின்  தனிப்ப்பட்ட குணாசதியங்களான சிறிய மற்றும் பரவிய அளவில் உற்பத்தி, காலை நிலை மற்றும் அழுகத்தக்க உற்பத்திப் பொருட்கள் எடுத்துச் செல்லுதல் மற்றும் தொலைத் தொடர்பு போன்றவற்றின் மூலம் உற்பத்தி பொருட்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோர்களுக்கு எடுத்துச் செல்ல இடைத்தரகர்களின் தேவை பெரும் பங்கு வகிக்கிறது. அனைத்து முகவர்களும் வேளாண் உற்பத்தி பொருட்களை சேகரித்து, அதனை வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் வேளாண் வர்த்தகமானது நேரடியாக  ஈடுபட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோருக்குப் பொருட்களை வினியோகிக்கிறது. ஆனால் வேளாண் வர்த்தகத்தின் மறைமுக ஈடுபாட்டின் போது முகவர்களின் மூலமே உற்பத்தி பொருட்களை வினியோகம் செய்கிறது. முகவர்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து அதிகமாக எண்ணிக்கையாக கூட இருக்கலாம்.

முகவர்கள்

உற்பத்தியாளர்கள்

அநேகமான உழவர்கள் / உற்பத்தியாளர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தை செயற்கூடுகளை கொண்டது. இவர்கள் உற்பத்திப் பொருட்களை அவர்களின் கிராமத்தில் அல்லது சந்தையில் விற்கின்றனர். சில மிகப்பெரிய உழவர்கள், சின்ன விவசாயிகளிடம் இருந்து உற்பத்திப் பொருட்களை ஒன்று திரட்டி அருகில் இருக்கும் சந்தைகக் எடுத்துச் சென்று விற்ற லாபம் அடைகின்றனர்.

இடைத்தரகர்கள்

இடைத்தரகர்கள் தனியாகவோ அல்லது வணிக வளாகத்துடன் இணைந்து வியாபார செயற்பாட்டின் அடிப்படையில் இயங்கி  மற்றும் வியாபார மேம்பாட்டினை உயர்த்துதல்.

மொத்த விற்பனையாளர்

மொத்த விற்பனையானது பொருட்களின் அயனாக கருதப்பட்டு மொத்த விற்பனையாளர்கள் மூலம் விற்கப்படுகிறது. தனிப்பட்ட அல்லது வணிகம் நபரின் செயற்பாடுகள உள்ளடக்கியதே மொத்த விற்பனையாகும். இந்த மொத்த விற்பனையானது வாங்குவோர்களுக்கு விற்பது  அல்லது உடன்படிக்கையின் படி விற்பது மற்றும் வாங்குவோர்கள் வாங்கிய பொருள்களை மற்றவரிடம் விற்பது அல்லது தொழிலுக்காக பயன்படுத்துவதாகும். இவர்களின் நிலையானது உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகத்திற்கும் இடைப்பட்டதாகும்.


வகைப்படுத்தப்பட்ட மொத்த விற்பனையாளர்களின் விபரம் பின்வருமாறு

  1. உள்ளூர் மொத்த விற்பனையாளர்கள், உள்ளூரில் உள்ள வர்த்தகர்களுடன் வாங்கிப் பொருட்களை கொடுத்தல்.
  2. மாகாணத்தின் மொத்த விற்பனையாளர்களை வினியோகர்கள் என்றும் அழைக்கலாம். இவர்கள் மூலம் மாவட்டம் அல்லது மாநிலத்தின் வர்த்தகர்களிடம் பொருட்கள் விற்கப்படுகிறது.
  3. தேசிய மொத்த விற்பனையாளர்கள் தனிப்பட்ட (தளுத்தகை) இடத்தில் உள்ளனர் மற்றும் இவர்கள் மூலம் நாட்டிலுள்ள எல்லா இடத்திற்கும் பொருட்கள் விற்கப்படுகிறது.

வர்த்தகர்கள்

வர்த்தகர்கள், இடைத்தரகர்களின் கடைசி தொடர்பாக இருந்து நேரடியாகப் பொருட்களை நுகர்வோர்களுக்கு விற்கின்றனர். இவர்கள் பொருட்களுக்கு தலைப்பினைக் கொடுத்து விற்பதன் மூலம நுவர்வோர்களுக்கு இடையே ஒரு வித வணிகத்தை உருவாக்கியுள்ளனர். தேவையானவற்றை வர்த்தகர்கள் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குகின்றனர். வர்த்தகர்கள் நேரடியாகவே உற்பத்தியாளரிகளிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, பொருட்களை வாங்கி அதன் பின் விற்கின்றனர்.

கூட்டுறவு வியாபாரச் சங்கம்
முக்கியச் செயற்பாடாக ஆணைக்குழு முகாம் செயல்படுகிறது. அதாவது

  • உறுப்பினர்கள் மூலம் பொருட்களை விற்றல்
  • பொருட்களை முழுவதும் வாங்குவதற்கு பொறுப்பெடுத்தல்
  • பொருட்களை சேமித்து வைக்க மற்றும் தரப்படுத்துவதற்காக கிடங்குகளை அமைத்தல்.
  • வணிகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிலிருந்து பயிர் செய்பவர்களை காத்தல் மற்றும் விவசாயிகளின் உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்கும்படி உதவுதல்.
  • உற்பத்திக்கான செயற்பாடுகளை செயல்படுத்துதல்.

புக்கா அர்ஹாசியஸ்

மொத்த விற்பனை சந்தையிலிருந்து பொருட்களை அவர் வாங்குவதால்  சிறந்த வணிகராக திகழ்கிறார். அரிசி, எண்ணெய், பஞ்சு போன்ற பெரிய ஆலைகளானது இவருக்கு முகவர்களாக பணியாற்றி மற்றும் இவர் தரமான, அதற்குரிய விலையில் உள்ள பொருட்களை வாங்குகிறார். மேலும் இவரே வொருட்களுக்கு வணிகராக மாறி, வெவ்வேறு நாடுகளுக்கு முகவர்கள் மூலம் பொருட்களை விற்கிறார்.

கட்சா அர்ஹாசியா

உற்பத்தியை இவர் மூலம் தான் விற்கவேண்டும் என்ற அடிப்படையில் உழவர்களுக்கும் மற்றும் கிராம மேனியாஸ்களுக்கும். உற்பத்திக்காக முன்கூட்டியே பணத்தை மிகக்குறுகிய வட்டி விகிதத்தில் தருகிறார். மேலும் அவர் உற்பத்திப் பொருட்களை விற்பதற்கான தரகு கட்டணத்தையும் பெற்றுக் கொள்கிறார்.

கிராமப்புற வணிகர்கள்

இவர்கள் முக்கியமான முகவர்களாக இருந்து உற்பத்திப் பொருட்களைச் சேகரித்து, கிராமத்தில் அருகில் உள்ள மண்டி (வியாபாரக்கூடம்) யில் சேர்கின்றனர். இவர்களின் முன்னேற்றம் கடைகளில் வரவு அல்லது உணவுத் தானியங்களை மாற்றிக் கொள்ளுதல் அல்லது உழவர்களின் உற்பத்தி பொருட்களுக்காக விலை தருதல் போன்றவையாகும். வேளாண் உற்பத்தியை மண்டி (வியாபாரக்கூடம்) அல்லது கிராமப்புற பதப்படுத்தப்படும் கூடமான அரிவு, மாவு, எண்ணெய் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்படுகின்றன.

வணிகர்கள்

இவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று உழவர்களின் உற்பத்தியை வாங்குவதால், இவர்கள் சிறு வணிகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அருகிலுள்ள சந்தையில் விற்கும் விலையைவிட குறைந்த விலையில் விற்கின்றனர். உற்பத்தியை எடுத்துச் செல்லும் போது எடுத்துச் செல்வதற்கான செலவு, சந்தை வியாபார) கட்டணம் மற்றும் இலாபம் போன்றவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.

போக்குவரத்து முகாம்

இந்த முகாமானது இரயில் பாதை, வண்டி, மாட்டு வண்டி, ஒட்டக வண்டி, டிராக்டர் போன்றவற்றின் உதவியுடன் ஒரு சந்தையிலிருந்து (வியாபாரக்கூடத்திலிருந்து) மற்றொன்றிற்கு எடுத்துச் செல்கிறது.

தொலைத் தொடர்பு முகாம்

இந்த முகாமானது விலையைப் பற்றியும், உற்பத்தி அளவுகளின் எண்ணிக்கையும் மற்றும் உற்பத்தியை பரிமாற்றுவதைப் பற்றியும் உள்ள செய்தியைத் தருகிறது. (எ.கா) அஞ்சல், தொலைபேசி, விளம்பரத்தாள்கள், தந்தி, வானொலி.

விளம்பர முகாம்

விளம்பரத்தின் மூலம் நுகர்வோர்கள் பொருட்களின் தரம் மற்றும் வாங்குவதற்கான சாதகம் போன்றவற்றை பற்றியும் அறியலாம். (எ.கா) விளம்பரத்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, படக்காட்சிகள்.

ஏலக்காரர்கள்
உற்பத்திப் பொருட்களை ஏலத்திற்குக் கொண்ட வந்து நுகர்வோர்களால் ஏலம் எடுக்கப்படுகிறது.

அரசாங்க முகாம்கள் / நிறுவனங்கள்

தனிப்பட்ட நபர், கழகம், கூட்டுறவு மற்றும் அரசாங்க நிறுவனங்களானது வேளாண் வியாபாரத்தில் ஈடுபடுகிறது. சில முக்கியமான நிறுவனங்கள் பின்வருமாறு.

மாநில வணிகக் கழகம் (STC)

  • நுகர்வோர்களுக்கு சரியான விலையில் ஒழுங்கான அடிப்படையில் கிடைக்குமாறு செய்தல்.
  • விவசாயிகளுக்கு நியாயமான விலை உற்பத்திப் பொருட்களுக்கு கிடைப்பதனை உறுதிப்படுத்துவதன் மூலம் உற்பத்தியின் அளவை உயர்த்துதல்.
  • விநியோகம் மற்றும் தேவை போன்ற காலநிலை மாறுபாட்டினால் ஏற்படும் நிகழ்வுகளைப் பொறுத்து நியாயமற்ற விலையைக் குறைத்தல்.
  • உரம் மற்றும் பூச்சிக்கொல்லி போன்ற இடுபொருட்களை வாங்குவதன் மூலம் உற்பத்தியின் அளவை அதிகரித்தல்.
  • தேவைப்படும் பொழுது கொள்முதல் மற்றும் உணவு கையிருப்பு மற்றும் அதன் பகிர்மானம் ஆகியவற்றினை பொறுப்பெடுத்துக் கொள்ளுதல்.
  • சேமிப்பு, எடுத்துச் செல்லுதல், சிப்பம் மற்றும் பதப்படுத்துதல் போன்றவற்றை ஏற்பாடு செய்தல்.
  • பதுக்கி வைத்தல், கரும்பு வியாபாரம் மற்றும் லாப நோக்கு பார்வையில் விலையை ஏற்றுதல் போன்றவற்றை சரிபார்த்தல்.

இந்திய உணவு கழகம் (FCI)

  • மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் படி விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு விலையை அறிவிப்பதன் மூலம் உணவு தானியங்கள் மற்றும் மற்ற வேளாண் வர்த்தகப் பொருட்களின் வியாபார கொள்முதலின் அளவை அதிகரித்தல்.
  • மக்கள் பகிர்மான அமைப்பின் மூலம் சரியான நேரத்தில் உணவுப் பொருட்களை வெளியிடுதல் (நியாய விலைக் கடைகள் மற்றும் கட்டுப்பாடான பொருட்களின் கடைகள்)
  • நியாயமற்ற விலை மற்றும் வேளாண் வணிகங்களுக்கு இடையே உள்ள விலை வேறுபாட்டினைக் குறைத்தல்.
  • தேவையான அளவு உணவுத்தானியங்களின் கையிருப்பு
  • தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை குழுமம் (NAFED)
  • இந்தியப் பருத்தி கழகம் (CCI)
  • அகில இந்தியப் பருத்தி கூட்டுறவு குழுமம் (லிமிடெட்)
  • இந்தியக் கலைக்கழகம்
  • தேசிய வால் வள வாரியம் (NDDB)
  • தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் தாவர எண்ணெய் மேம்பாட்டு வாரியம் (NOVOD)
  • புகையிலை வாரியம்
  • வேளாண் மற்றும் பதன் செய் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்.
  • கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம்
  • விற்பனை மற்றும் ஆய்வு இயக்கங்கள்
  • இந்திய அரசாங்கம்
  • மாநில அளவிலான வேளாண் விற்பனைத் துறைகள் மற்றும் வாரியங்கள்
  • மாநில மற்றும் இதரக் கூட்டுறவு விற்பனை நிலைங்கள்
  • நியாய விலைக்கடை
  • நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால்
  • நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள்.

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் வோண் வணிகத்துறையின் விதிமுறைகள்

வேளாண் வணிகத்துறையில் அரசு நிகழ்ச்சிகள்
வணிகத்துறையில் தொழில் தொடங்குவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய மற்றும் மாவட்ட அரசாங்கம் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது சிறு அளவுத் தொழில்கள், காதி ஊரகத் தொழில்கள், சிறு மற்றும் குறு தொழில்கள் மற்றும் பெரிய தொழிகளானது நிதி முதலீட்டை பொருத்தது போன்று பலவகைப்படும். இது மட்டுமல்லாமல் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டபின் ஏற்றுமதி சந்தையிலும் ஈடுபடுகிறது. இந்த ஏற்றுமதி சந்தையானது, ஏற்றுமதி செயலகமாகி (EPZ) அதன் பின் சிறப்புப் பொருளாதார வட்டாரமாக (SEZ) மாறியது. அதன் பின் இந்த SEZ ஆனர் வேளாண் ஏற்றுமரி வட்டாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தனியார் முதலீட்டாளர்கள் அரசாங்கத்தால் ஈர்க்கப்பட்டு, குளிர் பதன சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்து, இரயில்வே, கடல் மற்றும் காற்று வளி போக்குவரத்தினை உயர்த்துதல் போன்ற பல்வேறு வகையான அடிப்படை வசதிகளில் முதலீடு செய்யப்படுகிறது.
சிறு மற்றும் மிகச்சிறிய தொழில்கள், நார் தொழில்கள் போன்றவற்றின் வளர்ச்சியை அதிரிக்கப்பதற்காக சிறு அளவு தொழில்கள் மற்றும் வேளாண் மற்றும் ஊரகத் தொழில்களின் அமைச்சர், கொள்கைகளை உருவாக்கி, வடிவமைத்து மற்றும் அதனை நடைமுறைப்படுத்தினர்.
இந்த அமைச்சரவையான மற்ற அமைச்சர்கள் அல்லது துறைகளுடன் இணைந்து சிறு அளவு தொழில்களின் (SSI) வளர்ச்சியை உயர்த்துகின்றனர். இந்தக் கொள்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் / திட்டங்கள் மூலம் சிறு தொழில்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் ஆதரவு சேவைகளை சிறு தொழில் வளர்ச்சி அமைப்பு (சிட்கோ), சட்டப்படியான அமைப்பு அல்லது துறையான காதி மற்றும் ஊராகத் தொழில் ஆணைக்குழு (KVIC) மற்றும் மக்களால் நடத்தப்படும் நார் பொருட்களின் வாரியம், தேசிய சிற தொழில் கழகம் (NSIC) மற்றும் மூன்று பயிற்சி நிறுவனங்களான, தேசிய சிறு தொழில் வரிவுப்படுத்தும் பயிற்சி நிறுவனம் (NISIET) ஹைதராபாத், தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (NIESBUD), புது டெல்லி, மற்றும் இந்திய தொழில்முனைவோர் நிறுவனம் (IIE) கெளஹாதி போன்றவற்றின் மூலம் செய்து தருகிறது.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு