உழுதல்
                
          | 
      
      
        | 
             | 
        கோடைகாலத்தின் போது    மண்ணை உழுது களை விதைகளை வெயிலில் வெளிக் கொணர வேண்டும். இதன் மூலம் விதைகளின்  எண்ணிக்கையைக் குறைக்கலாம். இது பயிர்ப்பருவ காலத்தில் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்க வழிவகை செய்கிறது.  | 
      
      
        ரோட்டாவேட்டர் கொண்டு உழுதல்  | 
      
      
        | 
             | 
        ரோட்டாவேட்டர்  ஆனது  அதிகளவில் சாகுபடியில்  தோண்டுதல் மற்றும் சமப்படுத்தி பயிர் சாகுபடி செய்ய  உறுதுணையாக உள்ளது. இது குறைந்த அளவு உழவு செய்ய வேண்டிய நிலங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.           | 
      
      
        லேசர் இயந்திரம் கொண்டு சமப்படுத்துதல்  | 
      
      
        | 
             | 
        நிலத்தை நன்கு சமப்படுத்துவதால் உயர்ந்த விளைச்சல் மற்றும் நம்பகத்தன்மையான பயிர் உற்பத்திக்கு வழிவகை செய்கிறது.  இது லேசர் உதவியுடன் நிலத்தை சமப்படுத்துவதால்  சாத்தியமாகிறது. சமப்படுத்தப்பட்ட நிலத்தால்  நடவு இயந்திரங்கள் விதைகளை துல்லியமாக இடவும் மற்றும்  ஒரே  மாதிரியான நீர்ப்பாய்ச்சலுக்கு  வழி வகை செய்கிறது, இதனால் ஒரே மாதிரியான பயிர் நிற்றலுக்கும் வழிவகுக்கிறது. மேம்படுத்தப்பட்ட களை நிர்வாகம் மற்றும்  உரங்களை திறமையாகப் பயன்படுத்துதலுக்கும் வழி வகுக்கிறது. மேலும் சமப்படுத்துதல், நீர்ப்பாசனத்  தேவையைக் குறைக்க உதவுகிறது. 
           | 
      
      
        நீர் வைத்து நிலத்தைத் தயார் செய்தல்  | 
      
      
        | 
             | 
        இது ஒரு மிக முக்கியமான செயல், ஏனென்றால் மண் படுக்கைத் தயார் செய்து  நெல் நாற்றுகளை நடுவதற்குத் தேவையான ஒன்றாகும். இது மண்ணின் பல்வேறு வகையான இயற்பியல்  பண்புகளான முறையே அதிக  அடர்த்தி, நீர் உட்புகும் திறன், மண்துகள்களுக் கிடையேயான வெற்றிடம் போன்றவற்றை மாற்றி அமைக்கிறது. இந்த முறை களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி மண்ணின் ஈரப்பதம் மற்றும்  ஊட்டச்சத்தைப் பாதுகாத்து மகசூலை அதிகரிக்கச் செய்கிறது.           | 
      
      
        நடவு செய்தல்  | 
      
      
        | 
             | 
        நெல் நாற்று நடவு செய்யும் கருவி ஒரே சீரான ஆழத்துடன் நிற்கும் தண்ணீரில் களை இல்லாத நிலத்தில் நெல் நாற்றுகளை வரிசையாக  நடுவதற்குப்  பயன்படுகிறது. இயந்திர மயமாக்கப்பட்ட நாற்று நடுதலில் சரியான நேரத்தில் நடவு செய்யவும்  மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையையும் குறைக்கிறது. இது பயிர் எண்ணிக்கையை ஒரே சீராக வைத்திருக்க உதவுகிறது.          | 
      
      
        களையெடுத்தல்  | 
      
      
        | 
             | 
        களைநீக்கி இயந்திரம் களையை நீக்கி   மற்றும் அவற்றையெல்லாம் வயலுக்குள்ளேயே மண்ணில் புதைத்து விடுகிறது. களை நீக்குதலுடன் மண்ணைக்கிளறி விடுவதால்  வேர் அமைப்புக்கு காற்றோட்டத்தைக் கொடுக்கிறது. இது தொழிலாளர் எண்ணிக்கையையும், நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.  இது கையாள சுலபமானது மற்றும் திருந்திய நெல் சாகுபடி வயலில் இரண்டு பக்கமும் பயன்படுத்த முடியும்.          | 
      
      
        அறுவடை  | 
      
      
        | 
             | 
        
          ரீப்பர் அறுவடை இயந்திரம் பயிரை அறுவடை  செய்யவும், கட்டவும் பயன்படுகிறது. இயந்திர அறுவடை  மூலம் சரியான முதிர்வடைந்த தருணத்தில் அறுவடை செய்யவும், வேலைப்பளு,  மற்றும் அறுவடை நேரத்தைக் குறைக்கிறது.  
          | 
      
      
        
          தகவல் : பண்ணை மேலாளர்  
            நன்செய் 
            தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக் கழகம் 
            கோயம்புத்தூர் - 641 003 
          Updated on Oct, 2014  |