Agriculture
இயற்கை சீற்ற மேலாண்மை

வெள்ளம்

வெள்ளப்பெருக்கு என்பது பொதுவாக, அடிக்கடி நிகழும் இயற்க்கை சீற்றங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியா, உலக நாடுகளில் அதிக வெள்ள அபாயம் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. தேசிய வெள்ள திட்டக்குழு அறிக்கையின் படி இந்தியாவின் 40 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு அதிக வெள்ள அபாயத்துடன் இருக்கிறது. வெள்ளப்பெருக்கு உயிர் சேதம் ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல், வீடுகள்,தொழிற்சாலைகள், பொது உடைமைகள் போன்றவற்றினையும் செதப்படுத்தி, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. வெள்ளப்பெருக்கை முழுவதும் தடுக்கமுடியாவிட்டாலும், தகுந்த கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒரளவு கட்டுப்படுத்தலாம். சமீபகால, வெள்ளபெரக்கு தொடர்பான துல்லிய தகவல்கள், வெள்ள பெருக்கத்தைகட்டுபடுத்தும் திட்டமிடுதலுக்கு பயன்படுகிறது. இவ்வகை திட்டமிடுதலுக்கு செயற்க்கைகோள் தகவல்கள் மிகவும் உதவியாக அமையும்.
பாதுகாப்பு மற்றும் மீட்பு பணி
பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது நிலநடுக்கம் அபாயம் ஏற்படுவதற்க்கு எதிராக, அதன் விளைவுகளை குறைப்பதற்க்கு செய்யப்படும் பாதுகாப்பு பணிகள் ஆகும். மீட்பு பணி என்பது வெள்ள அபாயம் ஏற்பட்ட பின் வெள்ள பாதிப்பு பகுதிகளிலிருந்து உடைமைகள் மற்றும் உயிர்களை மேட்டு நிலத்திற்க்கு மாற்றுதல் ஆகும். இவ்வகை பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்வதற்க்கு, வெள்ள அபாயம் பற்றிய தக்க தகவல் வேண்டும். தகவல்கள் இல்லாத பட்சத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும்மீட்பு பணிகள் செய்வது மிகவும் கடினம். எது எப்படிஇருந்தாலும், வெள்ளம் வரும் முன் மீட்பு பணிகளை மேற்கொள்வது சிறந்தது.
வெள்ளம் வரும்முன் செய்யவேண்டிய பாதுகாப்பு பணிகள்
வெள்ளம் வரும் முன் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு
புவியியல் வல்லுனர்கள், வானிலையியல் வல்லனர்களுடன் கல்தாலோசிப்பதன் மூலம், குடியிறுப்பு பகுதிகளின் வெள்ள அபாயம். நிலசரிவு அபாயம் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து வைத்தல்
பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில், எச்சரிக்கை சமிக்கைகள், பாதுகாப்பு வழிகள், மற்றும் அவசரகால குடியிறுப்புகள் ஆகியவற்றிக்கு எற்பாடு செய்து வைத்தல்
குடும்ப நபர்கள் அனைவருக்கும் வெளிஊரில் உள்ள நண்பர் ஒருவரின் தொடர்பு முகவரி தெரிந்து இருக்க வேண்டும். அப்பொழுது தான் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏதும் நிகழ்நத தனியெ பிரிந்து விட்டால் தொடர்பு கொண்டு உதவி பெற முடியும்.
அவசரகால உதவிக்கான அனைத்து தொலைபேசி எண்களும் அனைவரது தொலைபேசியிலும் பதிவு செய்து வைத்திருக்க வெண்டும்
ஏதேனும் சிறப்பு உதவி தேவைப்படின், உள்ளூர் சேவை மையத்தின உதவியை நாடலாம் (எ.கா) வயதானோா, உடல்ஊனமுற்றோர்

  • வெள்ள அபாயம் வரும் முன் வீட்டில் உள்ள உயர்வான பொருட்களை பாதகாக்க ஏற்பாடுகள்  செய்ய வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படும் சமயம் வீட்டின் மின் இணைப்புகளை துண்டித்து வைக்க வேண்டும். நீர் நிற்க்கும் நிலையில் கீழே விழுந்த, மின் இணைப்பு கம்பிகளை பாதுகாப்போடு செயல்பட்டு அகற்ற வேண்டும். மேலும் வீட்டில் உள்ள எரிவாயு இணைப்புகளை துண்டித்து வைக்க வேண்டும்
  • வீட்டில் தீ அணைப்பு கருவிகளை வைத்திருக்க, வேண்டும். அத்தீயணைப்பு கருவி இழுக்கும் இடம் மற்றும் அதனை செயல்படுத்தும் முறை அனைத்தையும் வீட்டில் உள்ள அணைத்து நபர்களும் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். வீட்டில் நீர் உறிஞ்சும் கருவியை வைத்து இருத்தல் வேண்டும்
  • வெள்ள அபாயம் ஏற்படும்போது மின் இணைப்புகளை துண்டித்து வைக்க வேண்டும்
  • கழிவு நீர் குழாய்கள், மற்றும் பிற குழாய் இணைப்புகளில் நீர் பின்புறமாக பாயாமல் வால்வுகளின் மூலம் தடை செய்ய வேண்டும்
  • எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மற்றும்சேமிப்பு கலன்களை, வெள்ள அபாயம் ஏற்படும் போது அப்புறப்படுத்தி வைக்க வேண்டும். இதன்மூலம் மேலும் அபாயம் ஏற்படாமல் தடுக்கலாம்.

வெள்ள அபாயப்பகுதியில் இருக்கும் போது அல்லது எச்சரிக்கை பகுதிஅவசர கால சேவைக்காக தொடர்பு கொள்ளலாம். வீட்டில் உள்ள வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் மூலம் வெள்ள அபாயம் பற்றிய தகவல்களை பெறலாம்வீட்டில் உள்ள கருவிகளின் மின் இணைப்புகளை துண்டித்து வைக்க வேண்டும்தடுப்பு ஊசி போட்ட தகவல்களை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வெள்ள அபாயம் ஏற்பட்ட பின் அல்லது முன் காயங்கள் ஏற்படின், டெட்டாஸ் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்
அனைத்து நீர்கலன்களையும் நன்றாக கழுவி. நீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்
வீட்டின் வெளியே உள்ள பொருள், வெள்ளத்தில் அடித்து செல்லாத படி பாதுகாப்பாக வைக்க வேண்டும். (எ-கா) தோட்ட பொருட்கள், கதவுகள். கலன்கள் போன்றவை
அவசர கால தேவைகள்
அவசரகால தேவைக்காக வீட்டில் போதுமான அளவு அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க வேண்டும். சில அத்தியாவசிய  பொருட்கள் கீழ்வருவன.

நன்றாக சுத்தம் செய்யப்பட்ட கலன்களில் 5 நாட்களுக்கு போதுமான அளவு குடிநீர் சேமித்து வைத்தல் (குறைந்தது ஒரு நபருக்கு 5 கேலன் வீதம்) விரைவாக அழுகாத தன்மை கொண்ட உணவு பொருட்களை 3-5  நாட்களுக்கு சேமித்து வைத்தல்

ஒரு அவசர சிகிச்சை பெட்டி, மருத்துவ பரிந்துரை ஏடுகள. மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகள் ஆகியவற்றை எடுத்து வைத்தல்

பேட்ரியினால் இயங்கம் ஒர வானொலி, கை் எரி விள்கு மற்றும் கூடுதல் பேட்ரிகள்

படுக்கைகள் மற்றும் போர்வைகள்

நீர் சுத்தம் செய்ய உதவும், குளோரின் அல்லது அயோடின் வில்லைகள் மற்றும் வீட்டில் சுத்தம் செய்ய உதவும் குளோரிக் ஆகியவற்றை வைத்திருத்தல்

குழந்தைகுளக்கு தேவையான உணவு வகைகள் மற்றும் பொருட்கள்னன

தேவையான துணிகள்

சுயதூய்மைக்கு தேவைப்படும் பொருட்களான சோப்பு, பல்விளக்கி, போன்றவை

உணவு, ஒளி உண்டாக்கிகள், சக்தி வழங்கும் இணைப்புகள் வரைபடங்கள், கருவிகள், அவசரகால கிச்சை பெட்டி, தீ அணைப்பு கருவி, படுக்கை விரிப்புகள் போன்றவை அடங்கிய ஒரு பெட்டியை அவசரகால தேவைக்காக நான்கு சக்கர வாகனத்தில் வைத்து இருத்தல்

ரப்பர் கட்டு, நீர் புகாத காலனிகள், கையுறைகள்

பூச்சி விரட்டிகள் டி.இ.இ.டி திறைகள் கொசுவலைகள்
ஆதாரம்:http://stristi.org/dmis/facts
வெள்ள அபாய பகுதியை விட்டு விலகும் போது செய்ய வேண்டியவை
அபாய பகுதியை விட்டு விலகும் போது அதற்க்கு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல் வேண்டும் அவையாவன வாகனத்தில் எரிபொருளைமுழுகொள்ளவு வரை நிரப்பி கொள்ள வேண்டும். மேலும் அவசரகால உதவிபெட்டி வாகனத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்

இடம்பெயர்வதற்க்கு வாகனங்கள் இல்லாத பட்சத்தில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இடம்பெயர்வதற்க்கு ஏற்பாடுகள் செய்துக்கொள்ள வேண்டும்

நீரினை சுத்தமான கொள்கலன்களில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்

அவசலகால திட்டத்தின்படி தேவையான அனைத்து பாரட்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளனவா என்று பரிசோதனை செய்த பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ள வானொலி மற்றும் தொலைக்காட்சியை இயக்கி அவற்றின் மூலம், பருவகால நிலை பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்ள வேண்டும்.

அவசர கால ஒலி சமிக்ஞைகளை கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும்

வீட்டு விலங்குகள் பாதுகாப்பு இடங்களுக்கு இடப்பெயர்த்து வைத்தல்

குளிர்சாதன பெட்டிகளில் முடிந்த அளவு குளிர்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்

நீங்கள் இடம்பெயரும்படி அணையிடப்படும்போது மேற்கொள்ள வேண்டியவை

தாள்வான பகுதிகளில் குடியிருப்புகள் இருப்பின்,  வெள்ள அபாயம் இருக்கும் போது அரசுத்துறை மக்களை குடிப்பெறும் படிக் கேட்டுக்கொள்வர். இவ்வாறு ஆணை பிறப்பிக்கப்படும் போது கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்

முக்கிய அடிப்படை தேவை பொருட்களை மட்டும் எடுத்து செல்லுதல்

நேரம் இருக்கும் பட்சத்தில் எரிபொருள், மின்சாதனம் மற்றும் நீர் இணைப்புகளை துண்டித்து விட்டு செல்ல வேண்டும்

மின்சாதனங்களை மின் இணைப்புகளில் இருந்து துண்டித்துவைப்பதன் மூலம், மின் விபத்துகளை தவிர்க்கலாம்

இடம்பெயர்வதற்க்காக குறிப்பிட்ட வழியை பின்பற்றி, போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கலாம்

வெள்ளம் சூழ்ந்த சாலைகள் நதிக்கிளைகளை கடந்து செல்லுவதை தவிர்க்கலாம்

இடம்பெயர்வதற்க்கு, ஆணை வராத போது மேற்கொள்ள வேண்டியவை

வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்

குடியிறுப்பு வீடு சேதப்பட்டிருக்கும் பட்சத்தில் 17.08.09 அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு செல்ல ஏற்பாடுகள்  செய்து வைத்தல் வேண்டும்

பாதுகாப்பு நடவடிக்கைகள்
பொதுவாக இயற்க்கை சீற்றங்கள் ஏற்படும் போது போக்குவரத்து, தகவல்தொடர்பு, மின் இணைப்பு ஆகியவை பெரிதும் பாதிக்கப்படும். இயற்கை சீற்றம் ஏற்படும் போது சுற்றுசூழல் அபாயம் ஏற்படுகிறது. இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 
Fodder Cholam