Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
மானாவாரி சோளம்
முக்கிய களைகள்
சைனோடான் டாக்டைலான் டாக்டிலோக்டினம் அகிப்டியம் யுபோர்பியா ஹிர்ட்டா
ஃபில்லான்தஸ் நிரூரி சைப்ரஸ் ரொட்டன்டஸ் சொலானம் நைக்ரம்
 
செலோசியா அர்ஜென்டினா லியுகஸ் ஆஸ்பெரா  

களை நிர்வாகம் : சோளப்பயிர் முளைவிட்ட இரண்டாம் வாரம் முதைல் 5ம் வாரம் வரை களைகள் இல்லாமல் இருப்பது பயிருக்கு நல்லது. மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்போது எக்டருக்கு 500 கிராம் அட்ரசின் என்ற களைக்கொல்லி மருந்தினை விதைத்த 3-5 நாட்களுக்குள் 900 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டோ அல்லது மணலில் கலந்தோ இடலாம். பயறுவகைப் பயிர்களுடன் ஊடுபயிராக பயிரிட்டிருந்தால் எக்டருக்கு 2 லிட்டர் பெண்டிமிதிலின் தெளிக்கவேண்டும்.

மறுதாம்பு சோளம்
களை நிர்வாகம்
விதைத்த நடவு  செய்த 3ஆம் நாளில் அட்ரசின் களைக்கொல்லியை ஒரு எக்டருக்கு 500 கிராம் என்ற அளவில் 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கவும். பிறகு 30-35வது நாளில் கை களையெடுக்கவேண்டும். களைக்கொல்லி உபயோகிக்கவிட்டால் விதைத்த, நடவு செய்த 15வது மற்றும் 30-35 நாட்களில் கைக்களை எடுக்கவேண்டும்.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in
Dr.R.ஜெகன்னாதன் ,
பேராசிரியர் உழவியல் துறை,
த.வே.ப.க , கோவை -3

 
Fodder Cholam