Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
முக்கிய களைகள்
Abutilon indicum Acalypha indica Achyranthus aspera
அபுட்டிலான் இண்டிகம் அக்காளிபா இண்டிகா அக்ரான்தஸ் ஆஸ்பெரா
Chloris barbata Cynodon dactylon Cyperus rotundus
க்ளோரிஸ் பார்பேட்டா சைனோடான் டாக்டைலான் சைப்ரஸ் ரொட்டன்டஸ்
Dactyloctenium aegypticum Echinochloa colonum Euphorbia sp
டாக்டிலோக்டினம் அகிப்டியம் எக்கினோகுளோவா கொலானம் யூபோர்பியா ஸ்பி
Phyllanthus niruri Trianthema portulacastrum Tridex procumbens
ஃபில்லான்தஸ் நிரூரி ட்ரையாந்திமா போர்ட்டுலோக்காஸ்ட்ரம் ட்ரைடாக்ஸ் ப்ரோகும்பன்ஸ்

பருத்தியில் களைகளைக் கட்டுப்படுத்த உழவியல் முறைகள்

Cotton Furrow

களைகளைக் கட்டுப்படுத்த மறைமுகமான சில உழவியல் முறைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம் பயிர் செய்தல், தரிசு விடுதல் முதலியவை. அடர்த்தியான தீவனப்பயிர் (அ) பயறு வகை போன்றவற்றையும் இடையுழவு செய்யக்கூடிய பயிர்களையும் பயிர் செய்தல் களைகளை குறைக்கப் பெரிதும் உதவும்.
களைக் கொல்லிகள்

Weed Crops

பயிரிட்ட 45வது நாளில் கையால் களை எடுத்தல்

எக்டருக்கு 3.3 லிட்டர் பெண்டிமெத்தாலின் (அ) புளூகுளோரலின் 2.2 லிட்டர் இவற்றில் ஏதாவது ஒரு களைக்கொல்லியைப் பயன்படுத்தி களையைக் கட்டுப்படுத்தவேண்டும். பருத்தி விதைத்த மூன்றிலிருந்த ஐந்து நாட்களுக்குள் 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். களைக்கொல்லி தெளிப்பதற்கு என்று தனியாக ஓர் தெளிப்பான் வைத்துக் கொள்ளவேண்டும். உலோகத்தினாலான தெளிப்பான்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. இம்முறை தவிர 20 கிராம் மணலுடன் களைக்கொல்லியை கலந்து சீராக தூவியும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
களைக்கொல்லி 30 நாட்கள் வரை களைகளை கட்டுப்படுத்தும். பின்பு 45வது நாள் கைக்களை எடுத்து மண் அணைத்து களையைக் கட்டுப்படுத்தலாம். பருத்தியை நீண்ட வரிசைகளில் விதைக்கும் போது, விதைத்த 30-35 நாட்களில் கொண்டிக் கலப்பைக் கொண்டு ஊடுழவு செய்யவும். பத்து நாட்களுக்குப் பிறகு நாட்டுக் கலப்பை மூலம் சாலெடுத்துப் பிறகு பார் கலப்பை மூலம் பார் பிடிப்பது நன்கு கட்டுப்படுத்துவதுடன் குறைந்த செலவில் மண் அணைத்து உரமிடவும் வழிசெய்கிறது.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in
Dr.R.ஜெகன்னாதன் ,
பேராசிரியர் உழவியல் துறை,
த.வே.ப.க , கோவை -3

 
Fodder Cholam