Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை

கொண்டைக்கடலை - களை கட்டுப்பாடு:
களைகள் பொதுவாக, மானாவாரி மற்றும் பாசன கொண்டைக்கடலையில், அதன் குறுகிய வளரும் தன்மை காரணமாக இரு பயிரிலும் சிக்கல்கள் உள்ளன. மானாவாரிப் பயிரை விட, பாசனப் பயிரில் களைகள்  சிக்கல்கள் கடுமையாக உள்ளது. மானாவாரி பயிரில், களைச்சிக்கல்கள் 35 முதல் 45 செ.மீ., இடைவெளியில் துளையிட்டு பயிரை  விதைப்பதினால் குறைக்க முடியும். பின்வரும் களைக்கொல்லிகள் கொண்டைக்கடலைக் களைகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்:

முன் களைக்கொல்லிகள்
பென்டசோன் (1.0-1.5)
பென்டிமெத்திலின் (0.5-1.0)
ஐசோப்ரோட்யூரான் (1.0-1.25)
மெட்டலாக்ளோர் (1.0-1.5)
ஆக்ஸடையாசோன் (0.5-1.0)
ஆக்ஸிஃப்ளோர்ஃபென் (100-150 கிராம்)
பென்டிமெத்திலின் (0.5) + இமேஸ்தைப்பிர் (50)
பிபிஐ களைக்கொல்லிகள்
புளுகுளோரலின் (0.5-1.0)
டிரைஃபுளோர்பென் (0.5-0.75)

பல சந்தர்ப்பங்களில், ஒருங்கிணைந்த களை மேலாண்மை அதிக பொருளாதார பயனுள்ளதாக இருக்கிறது. முன் களைக்கொல்லிகளை தெளித்த பின், விதைத்த 45 நாட்களுக்குப் பிறகு ஒரு களையெடுப்பு மிகவும் சிக்கனமானது மற்றும் பயனுள்ளதாகத் தோன்றுகிறது. முன் களைக்கொல்லிகளை தெளித்த பின், விதைத்த 45 நாட்களுக்குப் பிறகு ஒரு களையெடுப்பு அனைத்து களைகளுக்கும் பயனுள்ளது, இது பல்வேறு சூழ்நிலைகளின் கீழ் பொருளாதார ரீதியான கொண்டைக்கடலை உற்பத்திக்கு வழி வகுக்கிறது.


 
 
Fodder Cholam