உழவு முறை 
              களை  அறிவியலில் களைக் கட்டுப்பாடு மற்றும் களை மேலாண்மை என்ற 2 முறை உண்டு. களைக் கட்டுப்பாடு 
        என்பது களைச் செடிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவுது இதனால் பயிர்கள் எந்த வித இடையூறின்றி  வளரும்.
        களை மேலாண்மையில் தடுத்தல் சுத்தமாக அகற்றுதல், மற்றும் முறையான பயன்பாட்டால்  கட்டுப்படுத்துதல்
        ஊடுருவதை தடுத்தல் வளர்ச்சியை மட்டமாக்குதல் விதை உற்பத்தி அழித்தல்  மற்றும் முழுவதுமாக அழித்தல் ஆகும். 
        ஆகவே களை மேலாண்மையில் களைக் கட்டுப்பாடு என்பது  மிக முக்கியமான ஒன்றாகும். 
      
        
          
            | களை கட்டுப்பாடு முறைகள் | 
             
          
              | 
             
          
            | உழவு முறைகள்  | 
            இயற்பியல் முறைகள்  | 
            வேதியியல்    முறைகள் | 
             உயிரியல் முறைகள் | 
             
           
         
                          
         
        உழவு  முறைகள்: 
         
        நிலப்பண்படுத்துதல்  பயிரிடுதல் உரமிடுதல் பாசனம் மற்றும் இதர உழவு முறைகள் ஒரு பயிர் வளருவதற்கு தேவையான  நிலைகளாகும். இந்த முறைகளை முறையாகப் பயன்படுத்தினால் களைகளைக் கட்டுப்படுத்தலாம். 
        உழவு முறைகள் மட்டும் களைகளைக் கட்டுப்படுத்தாது ஆனால் களை எண்ணிக்கையை குறைக்கும். 
         
      வயலை  தயார் செய்தல்: 
      
        
          - களை இல்லாமல் வயலை வைத்திருக்க வேண்டும்.  களைகள் பூப்பதை அனுமதிக்கக்கூடாது. இதனால் களைகள் வயலில் வருவதை தடுக்கலாம்.
 
          - பாசனக் கால்வாய்கள் தான் களை விதை பரவுவதற்கான  முக்கிய மூலமாகும். ஆகவே வயல் கால்வாய்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
 
          - வெயில் காலத்தில் ஆழ உழுவதால் களைகளின்  வேர்த் தண்டுகள் கிழங்குகள் மண்ணிற்கு வெளியே வருகின்றன. இதனால் வெயிலில் கருகி விதைகள்  இறந்துவிடும்
 
          - 2 – 3 உழவு மற்றும் பாரம்பரிய நிலப்பண்படுத்துதலைத்  தொடர்ந்து மண்ணைக் கிளருவதால் களைப் பிரச்சனையைக் குறைக்கலாம்
 
          - குண்டகத்தைக் கொண்டு களைகளை அகற்றி  அழிக்க வேண்டும். இறவை நெல்லில் சேறு கலக்குதல் முறையால் களைகள் மண்ணில் பரப்பட்டு  சிதைவுறச் செய்யப்படுகின்றன.
 
           
            
           
      பயிரிடும்  முறை: 
      
        - சுத்தமான பயிர் விதைகளை களை விதைகள்  இல்லாமல் விதைக்க வேண்டும். இது களைகளை ஆரம்பத்திலேயே தடுக்கும் முறையாகும்
 
        - மழை பெய்த முதல் அல்லது மூன்றாவது நாள்  அல்லது பாசனத்தின் போது மண் வகையைப் பொறுத்து விதைக்க வேண்டும்
 
        - விதைப்புக் கருவியின் மூலம் விதைக்கும்  போது முளைக்கும் நிலையில் உள்ள களைகள் அகற்றப்படுகின்றன
 
        - நடவு செய்வதாலும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்
 
         
      ரகங்கள்: 
      
        - சிறிய இலைப்பரப்புடைய ரகங்களில் வெளிச்சம்  மண்ணில் அதிகம் படுவதால் களைகள் முளைக்கலாம் 
 
        - குட்டை இரகங்களிலும் களைகள் அதிகம் வளர்வதற்கு  வாய்ப்பு இருக்கிறது
 
         
      பயிர்  இடைவெளி: 
      
        - ஒரு பயிரின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்  போது அடுத்த செடியை முளைப்பதற்கு கூட விடாது
 
        - அதிக இடைவெளி விட்டு பயிரிடுவதை தவிர்க்க  வேண்டும்
 
         
      உர  அளிப்பு முறை: 
      
        - உரம் அளிப்பதால் ஏற்படும் மாற்றங்கள்  பயிருக்கு பயிர் மாறுபடும்
 
        - சோளம், மக்காச் சோளம், கம்பு, நெல்  போன்ற பயிர்களில் தழைச்சத்து உரங்கள் அளிப்பதால் அதிவேகமாக வளருகின்றன
 
        - களைகளான சைனோடன் டாக்டைலான், சைப்ரஸ்  ரொட்டான்டஸ் தழைச்சத்து உரம் அளிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படுத்துவதில்லை மற்றும்  அதிவேகமாக வளரும் பயிர்களை வளரவிடாமல் செய்கின்றன
 
         
      பாசனம்  மற்றும் வடிகால்: 
      
        - பாசன முறையைப் பொறுத்து களையின் தாக்கம்  அதிகமாகும் அல்லது குறையும்
 
        - அடிக்கடி பாசனம் செய்வது அல்லது பயிர்  வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் கிளையின் வளர்ச்சி அதிகமாகும்
 
        - நஞ்சை நெல்லில், நீர் தேங்குவதால், களைகளின்  முளைப்புத்திறன் குறைவாக இருக்கும்
 
        - 5 செ.மீ அளவுக்கு தொடர்ந்து நீரில்  மூழ்கியிருந்தாலும், களை வளர்ச்சி குறையும். மேட்டுக்கால் பகுதியில், களை வளர்ச்சி  அதிகமாக இருக்கும்
 
        |