Agriculture
இயற்கை வளங்கள் :: மண்வளம்

ஆலைக்கழிவுகள் மூலம் நில சீர் திருத்தம்

நில சீரமைப்பு மற்றும் பியர் உற்பத்திக்காக தொழிற்சாலைக் கழிவுகளின் பயன்பாடு

களர் நிலத்ததை சீரமைக்க வாலை வடிமனை கழிவுநீரை பயன்படுத்துதல்

களர் நிலத்தை சீரமைக்க பொதுவாக, ஜிப்சம், பாஸ்போஜிப்சம், இரும்பு பைரைட்டுகள் மற்றும் கந்தகத்தைப் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் கனிமத் தன்மையுடையவை. சில அங்ககப் பொருட்களான ஆலைக் கழிவு, தொழுவுரம், தென்னை நார்த் தூள், பசுந்தாள் உரம் போன்றவையும் களர் நிலத்தை சீரமைக்க பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது எந்த வித வேதிமுறை செயற்பாடு செய்யாத வாலை வடிமனை கழிவுநீரைப் பயன்படுத்தி களர்நிலத்தை சீரமைக்கலாம். வேதிமுறை செயற்பாடு செய்யாத வாலை வடிமனை நீரானது அமிலத் தன்மையுடன் (அமிலக் காரத் தன்மை 3.8 – 4.2) பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் சிறிதளவு நுண்ணூட்டச் சத்துக்களும் கொண்டது. அங்ககப் பொருட்கள், குறிப்பாக அங்கக அமிலம் சம்பந்தமான மெலோனிடின்கள் மண்ணின் உயிர் வேதி செயற்பாட்டை மேம்படுத்துகிறது.

ஆகவே, ஒரு எக்கடருக்கு, 3.75 – 5.00 லட்சம் லிட்டர் என்ற அளவில் வேதி முறை செயற்பாடில்லாத வாலை வடிமனை கழிவு நீரை கோடைகாலங்களில் ஒரே ஒரு முறை அளிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் 2 முறை உலர் உழவு 6 வாரங்களுக்கு செய்வதால் மண்ணில் இயற்கையாகவே ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்யலாம். பின், 45 முதல் 60 நாட்கள் கழித்து, மண்ணை புத்தம் புதிய நீரை கொண்டு பாசனம் செய்து, வடித்து விட வேண்டும். இந்த செயற்பாட்டினால் மண்ணின் அமில காரத்தன்மை, சோடியத்தின் சதவீதம் இயல்பு நிலைக்குத் திரும்பி, களர் மண்ணின்  உற்பத்தி திறனை அதிகரிக்கும். இந்த சீரமைப்புக்குப் பிறகு, பாரம்பரிய சாகுபடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நெற்பயிரை கழிவு நீர் கொண்டு சீரமைத்த நிலத்தில் சாகுபடி செய்யலாம். வருடா வருடமும் அல்லது பருவத்திலும் அடுத்த பயிருக்கு இந்த நீரைப் பயனப்டுத்தி சாகுபடி செய்யலாம்.

soil constraint

பயிர்களுக்கு நேர்த்தி செய்த வாலை வடிமனை கழிவுநீரைப் பயன்படுத்துதல்

நேர்த்தி செய்யப்பட்ட கழிவுநீரில் நைட்ரஜன் 1200 மி கிராம், பாஸ்பேட் 500மி கிராம், பொட்டாஷ் 12000 மிகிராம், கால்சியம் 1800 மி.கி, இரும்புச் சத்து 300 மி.கிராம் இருக்கின்றன. கழிவுநீரில் அதிகளவு கரைந்த உப்புகள் இருந்தாலும், 50 முறை செறிவு குறைந்த கழிவுநீரை கரும்பு, வாழை, சூரியகாந்தி, பருத்தி மற்றும் சோயாபின் பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
ஒரு எக்டருக்கு 20000 முதல் 40000 லிட்டர் என்ற அளவில் தரிசு நிலத்தில் ஒரு முறை அளிக்கலாம். இதை 30 -40 நாட்கள் வரை சுத்தமாக காயும் வரை விட்டு வைத்திருக்க வேண்டும். கழிவுநீர் அளிக்கப்பட்ட நிலத்தை 2 முறை சுத்தமாக உழவு செய்வதால், இயற்கையாக ஆக்ஸிஜனேற்றம் அடையும் மற்றும் அங்ககப் பொருட்கள் சிதைந்து மண்ணிற்கு எளிதாகக் கிடைக்கும். பின், நேர்த்தி செய்த நிலத்தில் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்யலாம். இந்த நீரை வருடாவருடம் அல்லது அடுத்த பருவத்திற்கு அல்லது அடுத்த பயிருக்கும் பயன்படுத்தலாம்.

பேப்பர் கூழ் மற்றும் பேப்பர் ஆலைக் கழிவுநீர் பயன்படுத்தி பாசனம் செய்தல்

பேப்பர் கூழ் மற்றும் பேப்பர் ஆலைக் கழிவு நீரில் கரையும் திடப் பொருள்களும், அங்ககப் பொருள்களும் அதிகளவில் உள்ளன. தகுந்த நேர்த்தி செய்த, மின்கடத்தும் திறன் 1.2 dsm-1 க்கு குறைவாக உள்ள கழிவு நீரை, தகுந்த சீர்திருத்தகளான ஆலைகழிவு 5டன் / எக்டர் / செறிவூட்டப்பட்ட ஆலைக் கழிவு 2.5 டன் /எக்டர் (அ) சணப்பை 6.25 டன் /எக்டர் என்று கலந்து இட வேண்டும்.

பயிர்கள்   இரகங்கள்
நெல்
மக்காச்சோளம்
சூரியகாந்தி
நிலக்கடலை
சோயாபீன்
கரும்பு மரவள்ளிக் கிழங்கு
:
:
:
:
:
:
IR20, TRY 1, co43
Co1
Co2
Tmv 7
Co1
Co 6304 (நடைமுறையில உள்ள இரகம்) cosi 8607, coc95071, co86032,
co (TP) 4, co2, co3, MVD

இருந்தாலும். இந்த நேர்த்தி செய்த கழிவுநீரை எள், ஆமணக்கு, பயிறுவகைகளான பச்சைப் பயிறு, உளுந்து போன்றவற்றிற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால், இவை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.
தோல் தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான பயிர்கள் மற்றும் இரகங்கள்

பயிர்கள்   இரகங்கள்
தானியங்கள்
சிறுதானியங்கள்
எண்ணெய் வித்துக்கள்
பணப்பயர்கள்
காய்கறிகள்
மலர் பயிர்கள்
மரங்கள்
:
:
:
:
:
:
:
நெல் (TRY12, co43, பையூர் 1,ASD 16
ராகி (co12, co13)
சூரியகாந்தி (co4, மாடர்ன்), கடுகு
கரும்பு (cog94076, cog 88123, coc 771)
கத்திரி, வெண்டை, மிளகாய், தக்காளி (PKM 1)
மல்லிகை , அல்லி, சம்பங்கி
யுகலிப்டஸ், சவுக்கு, கருவேல்

பேப்பர் ஆலைக் கழிவு நீர் பாசனம் செய்த நிலங்களுக்கான நேர்த்தி
1995 – ம் ஆண்டிலிருந்து கரூர் மாவட்டத்தில் (மூலிமங்கலம்) பாண்டிப்பாளையம், பழமாபுரம், தடம்பாளையம், பொன்னைய கவுண்டன் புதூர்) நேர்த்தி செய்த பேப்பர் ஆலைக் கழிவு நீரை பாசனம் செய்யும் நிலங்களில் ஜிப்சம் ஒரு எக்டருக்கு 7.25 டன் என்ற அளவில் பயன்படுத்தி சீரமைக்கலாம்.
கரும்பு  ஆலைக் கழிவு ( 6டன் / எக்டர்) + நீலப்பச்சைப் பாசி (15 கிலோ / எக்டர்) + ஜிப்சம் (50%) பயன்படுத்தி களர், உவர் நிலத்தை சீரமைக்கலாம். இதனுடன் தொடர்ந்து பேப்பர் ஆலைக் கழிவு நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி, குதிரை மசால் தீவனப் பயிர் மகசூலை அதிகப்படுத்தலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைத்துள்ள நஞ்சை நிலத் தொழில்நுட்பம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அமைத்துள்ள  நஞ்சை நிலத் தொழில்நுட்பத்தை பேப்பர் ஆலைக் கழிவு நீர் பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்யும் நிலங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பயிரின்  அடர்த்தி (அ) செறிவை 2.5 லட்சம் தண்டுப்பகுதி / எக்டர் அளவுடன் உள்ள பயிர்களுக்கு பயன்படுத்தலாம். ஒரு எக்டர் நஞ்சை நிலப்பகுதிக்கு 1000மீ3 அளவு கழிவு நீர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. இது 2-3 நாட்கள் வரை தாங்கும்.

நஞ்சை நிலத்தின் மேல் பகுதியில் PVC (அ) பாலி எத்திலீன் கொண்டு பரப்ப வேண்டும். நஞ்சை நிலத்தின் கீழ்ப்பகுதியில் ½ -1 இஞ்ச் அளவுள்ள கூழாங்கல்லை 6 செ.மீ ஆழத்திற்கும், அதைத் தொடர்ந்து பட்டாணி அளவுள்ள கற்கள் ( 6 செ.மீ), பரு மணல், நுண் மணல் (ஒவ்வொன்றும் 7 செ.மீ) மற்றும் மேல்பகுதியில் 9 செ.மீ அளவு மண் கொண்டு நிரப்ப வேண்டும்.

போட்டோ ஆதாரம்:
www.postconflict.unep.ch.

 
Fodder Cholam