Agriculture
தாவர ஊட்டச்சத்து :: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1)நெல்லில் குறு இலை உலர்தலுக்கு காரணம் என்ன?

பொட்டாசியம் சத்து குறைபாட்டின் காரணமாக இலை விளிம்பு உலர்கிறது.

2)நெல் இலையின் நிறம் மஞ்சளாக ஏன் மாறுகிறது?

நைட்ரஜன் குறைபாடு காரணமாக முதிர்ந்த இலைகள் மஞ்சளாக மாறுகின்றன. இளம் இலைகளாக இருந்தால், இரும்பு சத்து குறைபாடு காரணமாகும்.

3)பயிர்களில் நைட்ரஜன் பற்றாக்குறையின் அறிகுறிகளை தருக

  • பச்சைய சோகை (இலைகள் மஞ்சளாகுதல்)
  • குறை வளர்ச்சி / மோசமான தாவர வளர்ச்சி
  • மோசமான தூர் கட்டு/ கிளை பிரிதல்

4)பாஸ்பரஸ் குறைபாட்டை எவ்வாறு அறியலாம்?

  • மோசமான வேர் வளர்ச்சி
  • முதிர்ந்த இலைகள் மற்றும் தளிர்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுதல்
  • குறை வளர்ச்சி

5)தேயிலை மஞ்சளாதல் என்றால் என்ன?

கந்தக குறைபாடு காரணமாக தேயிலை மஞ்சளாகிறது.

6)தாவரங்களில் இரும்பு குறைபாடிற்கு சரியான உதாரணம் தருக

  • கரும்பு
  • சோளம்

7)நெல் துத்தநாகக் குறை நோய் என்றால் என்ன? ‘khaira

இது நெல்லில் ஏற்படும் துத்தநாக குறைபாடு அறிகுறியாகும்.

8)எந்த ஊட்டசத்து பற்றாக்குறையால் இலைகள் அவித்து வைத்தது போல் தோன்றும்?

கால்சியம்

9)பழங்களில் விரிசல் எந்த சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது?

போரான்

10)கரும்பில் பகலா கருகல் எந்த ஊட்டசத்து பற்றாக்குறையால் ஏற்படுகிறது?

மாங்கனீசு குறைபாடு

11)இரும்பு பற்றாக்குறையை பயிர்களில் எவ்வாறு கட்டுப்படுத்துவது?

250-500 கிராம் இரும்பு சல்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைத்தெளிப்பாக அளிப்பதன் மூலம் இரும்பு பற்றாக்குறையை சரிசெய்யலாம்.

12) பயிர்களில் போரான் குறைபாட்டில் ஏற்படும் பொதுவான அறிகுறிகள் யாவை?

  • நுனி திசு அழிந்த பிறகு பக்கவாட்டு மொட்டுகள் வேகமாக வளர தொடங்கும்.
  • இலைகள்/ இலைக்காம்பு/ தண்டுகள் தடித்து ,சுருக்கம்விழுந்து, சுருண்டு வெளிறி காணப்படும்.
  • தசை மூடப்பட்ட திசு நசிவு, விரிசல் மற்றும் உலராமல் காணப்படும்.
  • பூக்கள் குறைந்து காய்பிடிப்பதும் குறைகிறது.

13) தாவர அமைப்பில் சர்க்கரையை கொண்டு செல்ல எந்த ஊட்டச்சத்து அவசியம்?

போரான்

14)கொய்யா மற்றும் நார்த்தையில் முரட்டு தோல் எந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது?

போரான் குறைபாடு

15)திராட்சையில் போரான் குறைபாடு அறிகுறிகள் யாவை?

கோழி மற்றும் குஞ்சு போல் திராட்சையின் பழங்கள் காணப்படும்.

16)கொய்யா, நார்த்தை மற்றும் திராட்சையில் போரான் குறைபாட்டை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

நார்த்தை : 0.3% போரிக் அமிலம் இலை தெளிப்பு (3 கிராம்/1லி)
கொய்யா : 1%போராக்ஸ் இலை தெளிப்பு (10 கிராம் / 1 லிட்டர்)
திராட்சை: 1% போராக்ஸ் இலை தெளிப்பு (10 கிராம் / 1 லிட்டர்)

17)வாழை மற்றும் மாம்பழத்தில் துத்தநாக குறைபாட்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

வாழை : 0.5 % துத்தநாக சல்பேட் இலை தெளிப்பு (5 கிராம்/1லி) அல்லது
தாவரம் ஒன்றிற்கு 30 கி துத்தநாக சல்பேட் அளிக்கலாம்.

18)தென்னையில் குறும்பை உதிர்தல் எந்த ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படுகிறது?

போரான்

19)காலிஃபிளவர் 'நீண்ட மெலிந்த வால்' எந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது?

மாலிப்டினம் குறைபாடு

20)எலுமிச்சையில் ஒட்டிய இலை அமைவை கட்டுப்படுத்துவது எப்படி?

காப்பர் சல்பேட் 5-10 கிராம் 10 லிட்டர் தண்ணீருடன் இலைத் தெளிப்பாக அளிக்கலாம்.

21)வெங்காயத்தில் துத்தநாக குறைபாட்டை எவ்வாறு சரிசெய்யலாம்?

0.01% துத்தநாக சல்பேட் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் (1 கி துத்தநாக சல்பேட்டை 10 லிட்டர் தண்ணீரில் கரைக்கவும்)  அல்லது 0.1% துத்தநாக சல்பேட்டை இலைதெளிப்பாக அளிக்கவும். (1 கி துத்தநாக சல்பேட் / 1லிட்டர் தண்ணீர்)

22)முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி மற்றும் மிளகாயில்  போரான் குறைபாட்டை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கைகள் யாவை?

நாற்றங்கால் பரப்பு: ஒரு சென்டிற்கு 40 கிராம் போராக்ஸ்
நடவு வயல்: ஹெக்டேருக்கு போராக்ஸ் @ 0.6 கிலோ  முதல் 1.2 கிலோ

23)தாவர இனங்களில் ‘சிறிய இலை’ உற்பத்திக்கு எந்த ஊட்டச்சத்து குறைபாடு காரணம்?

துத்தநாக குறைபாடு

24) மாவில் ஏற்படும் உடலியல் கோளாறுகள் யாவை?

  • பஞ்சுபோன்ற திசு
  • மாவில் உருமாற்ற நோய்
  • Biennial bearing
  • பழ பயிர்

25) மாவில் பஞ்சு போன்ற திசுக்கள் ஏற்பட காரணம் என்ன?

பறித்த பின் சூரிய ஒளியால் அதிக வெப்பநிலை எதிர்கொள்வதால் உண்டாகும் அதிகப்படியான பழுக்க வைக்கும் நொதிகளே காரணமாகும்.

26) மாவில் உருமாற்ற நோயின் அறிகுறிகள் யாவை?

  • பச்சை நிறமாகுதல் மற்றும் வளர்ச்சி குன்றுதல்
  • முதல் மற்றும் இரண்டாம் நிலை இறக்கைக் கீழ்தண்டு தடித்தல் மற்றும் சுருங்குதல்
  • சாதாரண மலர்களுடன் ஒப்பிடுகையில் புற இதழ்கள் மற்றும் இதழ்கள் நீண்டிருத்தல்

27)மாவில் காய் உதிர்வை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  • சினைக் கலைவு
  • காலநிலை காரணிகள்
  • பாசனத்தில் மாற்றம்
  • "ஊட்டச்சத்து 'பற்றாக்குறை
  • பூச்சி மற்றும் நோய் தாக்குதல்

28)மாவில் தீவிர உளவியல் கோளாறுகளின் பெயர்கள் யாவை?

நுனி கருமையாதல் ஒரு தீவர கோளாறாகும். குறிப்பாக தகேமி இரகத்தில் காணப்படுகிறது.

29)மாம்பழ கருப்பு முனையின் அறிகுறிகள் யாவை?

பழங்கள் சேதமடைந்து கருப்பு நிறமாக மாறும். இந்த கட்டத்தில் பழத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி குன்றி பழத்தின் நுனியில் கருப்பு வளையம் உருவாகி மேல்நோக்கி பரவுகிறது.

30)மொட்டு அழுகல் என்றால் என்ன?

இது தக்காளியில் ஏற்படும் வினையியல் கோளாறு. இவை கால்சியம் குறைபாட்டினால் ஏற்படுகிறது.
தீர்வு

  • ஈரப் பாதுகாப்பு மூட்டம் மூலம் மண்ணின் ஈரத் தன்மையை ஒரே மாதிரி வைத்திருக்க வேண்டும்.
  • நைட்ரஜன் உரங்களை அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • கால்சியம் சல்பேட் 1% (10கி/லி) இலைத் தெளிப்பாக அளிக்க வேண்டும்.

31) திராட்சையில் ஏற்படும் வினையியல் கோளாறுகள் யாவை?

  • பழம் சுருங்குதல்
  • சிதறுதல்
  • நீர் நிரம்பிய பழம்

பழம் சுருங்குதல்

  • பழம் உருவான பின்பு, பழம் மென்மையானதாகவும் சுருங்கியும் காணப்படும்
  • காரணம் அறியப்படவில்லை. ஆனால் ஏக்கருக்கு ஜிப்பெரலின் 16கி அளிப்பதன் மூலம் 50 முதல் 70 சதவிகித சுருக்கங்கள் குறையும்.

சிதறுதல்

  • சிதறுதல் பழங்களின் இழப்பை குறிக்கிறது.
  • கொத்தாக பேக் செய்யும்பொழுது சிதறுதல் குறைகிறது.

நீர் நிரம்பிய பழம்

  • இதை கட்டுப்படுத்தும் வழிமுறை கண்டறியப்படவில்லை. எனினும், அதிகளவு நைட்ரஜன் உரங்கள் அளிப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை
  • நீர் பெர்ரி துளை உள்ள திராட்சை தோட்டத்தில் இலைவழிஊட்டமாக நைட்ரஜன் அளிக்கக்கூடாது.
  • ஆரம்பத்தில் அல்லது பழம் பழுக்கும் தருணத்தில் அமோனியம் (அ) யூரியா உரங்களை சொட்டுநீர் பாசனம் மூலம் அளிக்கக் கூடாது.

32)ஆப்பிள் கசப்புத் தன்மைக்கான அறிகுறிகள் யாவை?

பழத்தின் சதைப் பகுதியில் பழுப்பு நிறக் காயங்கள் தோன்றும்
தோலுக்கடியில் திசு அடர் நிறமாக மாறும்
நீர் தோய்ந்த புள்ளிகள் தோன்றும். இந்த புள்ளிகள் அடர் நிறமாக மாறும் மற்றும் புள்ளியை சுற்றிலும் அடர் நிறமாகும் மற்றும் ஒன்று அல்லது இரண்டு மாத சேமிப்பின் போது அவை மேலும் பரவும்.
நிவர்த்தி
கோடை காலத்தில் கால்சியம் குளோரைடு மற்றும் கால்சியம் நைட்ரேட் தெளிக்கவும்.
அறுவடைக்குப் பின் நனைத்தல்
கால்சியம் குளோரைடு (2-3%) கொண்டு மருந்தூட்டல் வேண்டும்

33)ஆப்பிள் உட்பகுதியில் பழுப்பு நிறமாவதை கட்டுப்படுத்துவது எப்படி?

சினை தன்மையுள்ள பழங்களை அறுவடை செய்வதை தவிர்க்கவும்.
1% க்கும் குறைவான தட்பவெப்ப நிலையில் சேமிக்கவும்
சரியான வெப்பநிலை மேலாண்மை மற்றும் நல்ல காற்றோட்டம்
அதிகப்படியான மெழுகு பூசுவதை தவிர்க்கவும். மெழுகு பூச்சு மற்றும் பேக் செய்த பிறகு பழங்களை குளிரச் செய்ய வேண்டும்.

34)பேரிக்காயில் ஏற்படும் வினையியல் கோளாறுகள் யாவை?

  • உள் பகுதி நீர் போன்று உடைதல்
  • சதைப் பகுதி சிதைவு
  • உள்பகுதி பழுப்பு நிறமாகுதல்
  • காய்ந்து புண் உருவாகுதல்

35)தக்காளியில் ஏற்படும் வினையியல் கோளாறுகள் யாவை?

  • மொட்டு உதிர்தல்
  • பழங்களில் விரிசல்
  • மொட்டு அழுகல்
  • பூனை முகம்
  • வெப்பத்தாக்குதல்
  • அதைப்பு

36)மொட்டு அழுகலின் அறிகுறிகள் யாவை?

  • பூக்களின் நுனியில் பழுப்பு அல்லது கருப்பு புள்ளிகள் உருவாகும்.
  • இரண்டாம் நிலை உயிரினங்கள் பாதிக்கப்பட்ட திசுக்களை தாக்குவதால் பழம் அழுக ஆரம்பிக்கும்.

 37)தக்காளியில் பழ வெடிப்பிற்குக் காரணம் என்ன?

  • அதிக மழை பொழிவு (அ) நீண்ட நாள் வறட்சிக்குப் பிறகு நீர்பாசனம்
  • நேரடி சூரிய ஒளியில் பழங்களை வைப்பது
  • மேலும் போரான் குறைபாட்டால் ஏற்படுகிறது

நிவர்த்தி

  • வறண்ட வானிலையின்போது மண்ணின் ஈரப்பதத்தை சமமாக வைக்க ஈரப் பாதுகாப்பு மூட்டம் அமைக்க வேண்டும்.
  • எதிர்ப்புத் திற வகைகளை வளர்க்கலாம்.
 
Last Update:September 2014
 
Fodder Cholam