Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை :: அங்கக நிலப்போர்வை

அங்கக தழைக்கூழத்தில் உள்ள கட்டுப்பாடுகள்

தழைக்கூழங்கள் மண்ணை அதிகப்படியான ஈரப்பதத்தில் வைத்திருக்கும்.  வேர் மண்டலத்தில் ஆக்சிஜனைக் கட்டுப்படுத்தும். தழைக்கூழங்களைத் தண்டிற்கு அருகில் அல்லது தண்டின் மேல் படும்போது ஈரப்பதம் நிலைத்திருப்பதால் நோய் மற்றும் பூச்சிகள் வளர்ச்சிக்கு உகந்த ஒரு சூழலை உருவாக்குகிறது. பல கரிம வகை தழைக்கூழங்கள் நத்தைகள், எலிகளுக்கு அடைக்கலம் அல்லது அல்லது இனப்பெருக்க இடங்களை கொடுப்பதால் பயிர்களைப் பாதிக்கிறது. ஒரு சில தழைக்கூழங்கள்  வைக்கோல் மற்றும் காய்ந்த தட்டைகள் வித்துக்களைக் கொண்டிருக்கின்றன அவைகள் களைகளாக மாறலாம்.

தீமைகள்:

  • அதிகப்படியான தழைக்கூழங்களை பல ஆண்டுகளுக்கு .இடுவதால் தாவரங்களின் வேர்ப்பகுதியில் மண் படிமானம் ஏற்படுகிறது.

  • சில பொருட்கள் செலவு பெரிய அளவில் இருப்பது ஒரு பின்னடைவாக இருக்க முடியும்.

  • மேலும், சில தழைக்கூளம் எளிதாக கிடைப்பதில்லை.

  • தழைக்கூளங்களாக மரத்தூள் மற்றும் மரத்துண்டுகளைப் பயன்படுத்தும் போது நைட்ரஜன் பற்றாக்குறை சில நேரங்களில் ஏற்படுகிறது.

 
Fodder Cholam