Agriculture
நீர் மேலாண்மை

பாசன நீரின் தன்மை

நீரில் இருக்கும் உப்பு மற்றும் உப்பின் வகைகளை பொருத்து அந்த நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், மெக்னீசியம், சோடியம் ஆகியவை நீரில் கரையும் போது நேர் மின்னூட்ட துகள்களை கொண்டுள்ளன. குளோரைடு, சல்பேட், பை கார்பனேட் போன்றவை எதிர் மின்னூட்ட துகள்களை கொண்டுள்ளன. மற்றும் பிற அணுக்களான போரான், சிலினீயம், மாலிப்டினம், புளூரைடு போன்றவை மிக குறைந்த அளவில் நீரில் காணப்படுகின்றன. இவை நீரில் அதிகமாக இருந்தால் இந்நீரை உட்கொள்ளும் விலங்கினங்களுக்கும் தாவரங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.

மூன்று முக்கிய காரணிகளை பொருத்து பாசன நீரில் தன்மை அமையும் அவை,

  1. மொத்த உப்பு அளவு
  2. நீரின் சோடியா உட்கொள்ளும் வீதம்
  3. போரான் அளவு

மொத்த உப்பு அளவு:

நீரின் உள்ள உப்பின் செறிவு, நீரின் மின் கடத்து திறனின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பொதுவாக நீர் 1.5 மில்லி மோல் / செ.மீ அளவிற்க்கு அதிகமான உப்பு செறிவை கொண்டிருந்தால் அது உப்புநீர் / கடினநீர் என்று அழைக்கப்டுகிறது. பொதுவாக, உப்பு நீர் அதிக அளவு சோடியம் குளோரைடு உப்பை கொண்டிருக்கும்.

மொத்த உப்பு அளவினை பொருத்து பாசன நீரின் வகைகள்:

வகுப்பு
மின்கடத்து திறன் (டெசிசிமன்ஸ் / மீ) தன்மை பிரிவுகள் உபயோகப்படுத்த ஏற்ற மண் வகை
சி1 < 1.5 தூய நீர் அனைத்து வகை மண்கள்
சி2 1.5 - 3 குறைவான உப்பு கொண்ட தண்ணீர் மென்மையான மற்றும் மிதமான கட்டமைப்பு கொண்ட மண் வகை
சி3 3 - 5 மிதமான உப்பு கொண்ட நீர் குறைவான மற்றும் மிதமான கட்டமைப்பு கொண்ட மண் வகை சிறிது உப்பு தன்மையை தாங்கி வளரும் இரகப்பயிர்கள்
சி4 5 - 10 உப்பு நீர் உவற்ப்பு தன்மையை தாங்கி வளரும் பயிர்களுக்கு ஏற்ற குறைவான மற்றும் மிதமான கட்டமைப்பு கொண்ட மண்வகை
சி5 > 10 அதிக உவற்ப்பு நீர் பாசனத்திற்க்கு ஏற்றதல்ல

சோடியம் உட் கொள்ளும் வீதம்:

சோடியம் உட் கொள்ளும் வீதம் (SAR) மற்றும் சோடியம் கார்பனேட் படிவு (RSL) ஆகியவை பாசனநீரின் தன்மையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

போரான் அளவு:


3 பிபிஎம் அளவிற்க்கு அதிகமான போரானை கொண்டுள்ள பாசன நீர், தாவர பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் முக்கியமாக மிதமான மண்வகை பயிர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
போரான் அளவு அடிப்படையில், பாசன நீரின் வகைகள்:

வகுப்பு
போரான் (பி.பி.எம்) பிரிவுகள் உபயோகப்படுத்த ஏற்ற மண் வகை
பி1 3 தூய நீர் அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது
பி2 3 - 4 குறைவான போரான் கொண்ட நீர் களிமண் மற்றும் மிதமான கட்டமைப்பு கொண்ட மண் வகைகள்
பி3 4 - 5 மிதமான போரான் கொண்ட நீர் கடின கட்டமைப்பு கொண்ட மண் வகை
பி4 5 - 10 ஓரளவு போரான் கொண்ட நீர் கடின கட்டமைப்பு கொண்ட மண் வகை
பி5 > 10 அதிக போரான் கொண்ட நீர் பாசனத்திற்க்கு ஏற்றதல்ல
 
Fodder Cholam