Agriculture
நீர் நிர்வாகம்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

பாசனம்

  • வெப்ப மண்டல சர்க்கரை வள்ளிக் கிழங்குகள் நீர்த்தேக்கத்தை எப்போதும் விரும்பாதவை
  • மண் வகையைப் பொறுத்து பாய்ச்சும் தண்ணீரின் அளவு மாறுபடும்
  • விதைக்கும் நேரத்தில் ஈரப்பதம் தேவைப்படும் ஆகையால் விதைக்கும் முன்பே ஒரு முறை நீர்ப்பாய்ச்சல் செய்திருக்க வேண்டும்
  • நல்ல வளர்ச்சிக்குப் பயிரின் ஆரம்ப காலங்களில் சரியான அளவு நீர்பாய்ச்சல் செய்திருத்தல் அவசியம்
  • மணல் கலந்த வண்டல் மண்ணிற்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறையும், வண்டல் தன்மையுடன் கூடிய களிமண்ணிற்கு 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர்பாய்ச்சல் செய்யலாம்.
  • அறுவடைக்கு 2 லிருந்து 3 வாரங்கள் முன்பே நீர்ப்பாய்ச்சலை நிறுத்தி விட வேண்டும்
  • அறுவடை சமயத்தில் மண்ணானது மிகவும் இறுகி கடினமாக இருந்தால் ஒருமுறை பாசனம் செய்யலாம்.
  • குறைந்த நீர்கொண்ட அடிக்கடி பாய்ச்சக்கூடிய நீர்ப்பாய்ச்சலே சிறந்தது

பாசன மேலாண்மை
  • சராசரி எலக்ட்ரான் கடத்து திறன் 1 டெசிமல் / மீ
  • இது 1 முதல் 2 டெசிமல் / மீ எலக்ட்ரான் கடத்து திறன் கொண்ட மண்ணிலும் வளரும்
  • தண்ணீர் பாய்ச்சல்: உயிர்த்தண்ணீர் மூன்றாம் நாள்
  • தழை வளர் நிலை (45 நாள் வரை) – 4 தண்ணீர் கிழங்கு வளர்ச்சியின் தொடக்கம் (75ம் நாள் வரை) 4 தண்ணீர், கிழங்கு வளர்ச்சி மற்றும் முதிர்வு (125 ம் நாள் வரை) – 4 தண்ணீர். முதிர்ச்சி நிலை 2 தண்ணீர் முதல் 15 – 20 நாட்கள் முளைப்பு மற்றும் பயிர் அடர்த்தியைப் பெற சரியான அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும்
 
Fodder Cholam