Agriculture
நீர் நிர்வாகம்

பருத்தி

நீர் நிர்வாகம்

விதைத்த உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். மீண்டும் விதைத்த மூன்றாம் உயிர்த் தண்ணீர் கட்டவேண்டும். தேவைப்பட்டால் விதைத்த 10-15ம் நாள் இடைவெளி நிரப்பும் சமயத்தில் ஒருமுறை தண்ணீர் கட்டவேண்டும். 20 நாட்கள் கழித்து 15-20 நாளுக்கு  ஒரு முறை தண்ணீர் கட்டவேண்டும். நீர்ப்பாய்ச்சுதலை மண்ணின் ஈரம் காக்கும் தன்மை, மழை, செடியின் வளர்ச்சி முதலியனவற்றைக் கருத்தில் கொண்டு மாற்றி  அமைத்துக் கொள்ளலாம்.

முளைக்கும் பருவம்

:

1 முதல் 15 நாடகள் வரை

பயிர் வளர்ச்சி பருவம்

:

16 முதல் 44 நாட்கள் வரை

பூக்கும் பருவம்

:

45 முதல் 100 நாட்கள் வரை, டிசிஎச்பி 213 மற்றும் சுவின் 45 முதல் 87 நாட்கள் வரை எல்லா இரகங்களுக்கும்.

பயிர் முதிர்ச்சி பருவம்

:

100 நாட்களுக்குப் பிறகு டிசிஎச்பி  213 மற்றும் 88 நாட்களுக்கு பிறகு அனைத்து இரகங்கள்.

 

பயிர் பருவங்கள்

எண்ணிக்கை நீர் பாய்ச்சுதல்

விதைத்த நாட்களுக்குப் பிறகு

செம்மண்

களிமண்

முளைக்கும் பருவம்

1

விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்சவேண்டும்

விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

 

2

விதைத்த 5வது நாள் உயிர் தண்ணீர் விதைகள் நன்கு முளைத்து செடி வெளிவர

விதைத்த 5வது நாள் உயிர் தண்ணீர் விதைகள் நன்கு முளைத்து செடி வெளிவர

பயிர் வளர்ச்சி பருவம்

1

விதைத்த 20 (அ) 21 நாட்கள் மற்றும் களையெடுத்த 3 நாள் பின்னர்

விதைத்த 20 (அ) 21 நாட்கள் மற்றும் களையெடுத்த 3 நாள் பின்னர்

 

2

விதைத்த 35 (அ) 36 நாளில் மீண்டும் தண்ணீர் பாய்ச்சுதல்

விதைத்த 40வது நாளில் தண்ணீர் பாய்ச்சுதல்

பூக்கும் பருவம் அதிக அளவு தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும்.

1

48வது நாள்

55வது நாள்

 

2

60வது நாள்

70வது நாள்

 

3

72வது நாள்

85வது நாள்

 

4

84வது நாள்

100வது நாள்

 

5

96வது நாள்

100வது நாள்

பயிர் முதிர்ச்சி பருவம் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சுதல்வேண்டும்.

 

எல்லா இரகங்களுக்கும்

எல்லா இரகங்களுக்கும்

 

1

108வது நாள் 115 நாள்

 

2

120வது நாள் 130வது நாள்

 

3

130வது நாள்

 

4

144வது நாள்

 

5

150 நாட்களுக்குப் பிறகு நீர்ப்பாய்ச்சுதலை நிறுத்தவும்.

பயிர் முதிர்ச்சி பருவம் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சுதல்வேண்டும்.   (சுவின், டிசிஎச்பி 213) (சுவின், டிசிஎச்பி 213)
  1

108வது நாள் 115 நாள்

 

2

120வது நாள் 130வது நாள்

 

3

130வது நாள் 145வது நாள்

 

4

144வது நாள் 160வது நாள்

 

5

160 நாட்களுக்குப் பிறகு நீர்ப்பாய்ச்சுதலை நிறுத்தவும்.

குறிப்பு

  • வானிலையை அடிப்படையாகக் கொண்டு நீர் பாய்ச்சும் பொழுது பாசன நீர், நீராவிமானியின் விகிதாச்சாரம் 0.40 மற்றும் 0.60 ஆகிய முறைகளில் வளர்ச்சி மற்றம் காய்க்கும் காலங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • மேலே கூறப்பட்ட நீர்ப்பாசன திட்டம் ஒரு வழிகாட்டியே, எனவே நீர்ப்பாசனத்தை காலநிலை மற்றும் மழைக்கு ஏற்ப மாற்றியமைக்கவேண்டும்.
  • மாற்றுச்சால் மற்றும் விடுசால் முறையில் நீர்ப்பாசனம் மேற்கொண்டு நீரில் தேவையை குறைக்கலாம்.

ஆதாரம்: www.cicr.nic.in

 
Fodder Cholam